பதிப்புகளில்
’வாவ்’ வாசல்

சாமனியர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆட்சியர் பொறுப்பை அடைய வாட்ஸ் அப் மூலம் இலவசக் கல்வி!

ஏழை இல்லா மற்றும் ஊழல் இல்லா இந்தியாவை உருவாக்க தோன்றிய App மற்றும் whatsapp வகுப்புகள்...

Mahmoodha Nowshin
5th Aug 2017
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

இன்று ஸ்மார்ட்போன் இல்லாதவர் என்று எவரும் இல்லை. தண்ணீர் உணவு போல இந்த கைபேசியும் அன்றாட தேவையாக மாறிவிட்டது. பள்ளி செல்லும் சிறு பிள்ளை கூட whatsapp-ல் சேட் செய்கின்றனர். சிறியவர் முதல் பெரியவர் வரை வாட்ஸ்அப் மோகத்தில் மூழ்கி இருக்க அதில் ஏதேனும் பயனிருக்கா என்று கேட்டால் இல்லை என்பதே பதில். ஆனால் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஏழை எளியோருக்கு உதவுகிறது ’ஆட்சியர் IAS’.

இந்திய அளவில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐபிஎஸ் (IAS, IPS, IFS) பதவிகளுக்காக நடத்தப்படும் தேர்வு மிக கடினமான ஒன்றாகும். இதில் தேர்ச்சி பெற மாணவர்கள் பல வருடம் பயிற்சி பெற வேண்டும். ஆனால் சிலர் படிக்கும் ஆசையும் வெறியும் இருந்தும் கூட பயற்சி இல்லாமல் வழிகாட்டல் இல்லாமல் தோல்வி அடைகின்றனர்.

செல்வ ராம ரத்னம் - நிறுவனர்<br>
செல்வ ராம ரத்னம் - நிறுவனர்


செல்வ ராம ரத்னம், M.Tech பட்டதாரி, 5 முறை IAS தேர்வு எழுதி தேர்ச்சி பெறாமல் பல நாள் வேலை இல்லா திண்டாட்டத்திற்கு பிறகு குடும்ப சூழ்நிலைக் காரணமாக 2015ல் துபாயில் ஒரு பணியில் சேர்ந்தார். அதன் பின்னரே ராம ரத்னம் ஸ்மார்ட்போனுக்கும் whatsapp-க்கும் பரிட்சயமானார். ஆனால் நம் அனைவரையும் போல வாட்ஸ்அப்பை சுயநலமாக பயன் படுத்தாமல் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக மாற்ற தன் நெருங்கிய தோழி நந்தினியுடன் இணைந்து ஒரு புதிய முயற்சி எடுக்க முடிவு செய்தார்.

“நான் கற்ற கல்வி எனக்கு வேலை தரவில்லை. இன்று கல்வியின் பெயரைச்சொல்லி பலரால் ஏமாற்றப் பட்டுக்கொண்டு இருக்கிறோம். பலர் இவசமாக கிடைக்க வேண்டிய கல்வியை பணம் ஆக்கியதால் என்னைப் போன்ற பல இளைஞர்கள் வாழ்க்கையில் திசை மாறி போயினர். நான் பெற்ற கல்வியை பிறருக்கு கற்றுக்கொடுக்க தோன்றியதுதான் ஆட்சியர் கல்வி,” என்கிறார் செல்வ ராம ரத்னம்.

இதன் மூலம் whatsapp வழியாக பார்வையற்றோருக்கு தரமான கல்வி கொடுக்க வேண்டும் என்று செல்வ ராம ரத்னம் தன் நண்பர்களோடு களம் இறங்கினார். தமிழகத்தில் பல்வேறு மூலையில் துவண்டு கிடக்கும் பார்வை அற்றவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கையை மாற்ற, ஆட்சியர் ஆக்க வாட்ஸ் அப் வழியாக ஆடியோ வகுப்பு எடுக்கத் துவங்கினர். அவர்கள் மட்டும் அல்லாது புத்தகம் வாங்கவோ அல்லது பயிற்சி பெறவோ வசதி இல்லாத ஏழை மாணவர்களுக்கும் இதை எடுத்துச் சென்றனர்.

whatsapp வகுப்பில் இனைய மரம் நடும் மாணவர்கள்<br>

whatsapp வகுப்பில் இணைய மரம் நடும் மாணவர்கள்


ஆனால் இந்த whatsapp வகுப்பில் இணைய சில வழி முறைகளை பின் படுத்துகின்றனர். இந்த வகுப்பில் இணைய வேண்டுமென்றால் ஒரு மரம் நட வேண்டும் அல்லது மனநோயாளிகளை முடி வெட்டி அவர்களை சீர் செய்ய வேண்டும் அல்லது பறவைகளுக்கு உணவு, தண்ணீர் அளிக்க வேண்டும் அல்லது தெருவோரம் இருப்பவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுக்க வேண்டும். இதில் ஏதேனும் ஒன்று செய்தபின் அதை படம்பிடித்து whatsapp-இல் பெயர், ரத்த குரூப் மற்றும் ஊர் பெயருடன் அனுப்பவேண்டும். அதன் பின்னரே ஆட்சியர் ஆடியோ வகுப்பில் இணைய முடியும்.

இலவச படிப்பு மட்டுமல்லாமல் சம அக்கறையுடன் சமுக நலத்துக்காக இவைகளை செய்ய சொல்கின்றனர் ஆட்சியர் குழு. whatsapp வகுப்பில் இருக்கும் மாணவர்களுக்கு ஆடியோ வடிவில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான அனைத்து பயிற்சியும் கொடுக்கப்படுகிறது. மேலும் வாரம் வாரம் whatsapp வழியாகவே தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது.

“இது ஒரு தனி மனித முயற்சி அல்ல கூட்டு முயற்சி, அரசு தேர்வில் பல முறை தோற்று உலகின் பல இடத்தில் சிதறி கிடக்கும் நாங்கள் ஒன்றாக இணைந்தோம். ஐ.ஏ.எஸ் தேர்வில் பலமுறை தோற்றவர்கள் அடுத்த கட்ட முயற்சிக்காக களம் இறங்கினோம்,” என்றார்.

இந்த wahtsapp குரூப்பில் மதுரை, சென்னை, தஞ்சாவூர், டெல்லி, அமெரிக்கா என்று உலகில் பல இடங்களில் இருந்து வகுப்பு எடுகின்றனர்.

தமிழக அளவில் முதன் முதலில் அரசு தேர்வு எழுதிய திருநங்கை ஸ்வப்பனா தமிழ் வகுப்புகளை மதுரையில் இருந்து எடுக்கிறார். நந்தினி அமெரிக்காவில்லிருந்து தமிழ் நாட்டில் கிராமப்புற மாணவர்களுக்கு whatsapp வழியாக ஆங்கில வகுப்பு எடுக்கிறார்.

ஸ்வப்னா<br>
ஸ்வப்னா


“இவ்வாறு இவர்கள் உலகில், இந்தியாவில் பல பகுதியில் இருந்து கொண்டு ஆடியோ எடுத்து எனக்கு whatsapp-ல் அனுப்புவார்கள் அதனை நான் ப்ரோட்காஸ்ட் முலம் மாணவர்களுக்கு அனுப்பி வைப்பேன்.” 

வாட்ஸ் அப் மூலம் இது ஒரு குறிப்பிட்ட மக்களையே சென்று அடைந்தது அதனால் தன் நண்பர் சத்திய நாராயணனின் ஆலோசனை படி ஸ்மார்ட்போனுக்கான app ஒன்றை உருவாக்க முடிவு செய்தனர். 4 மாதம் முயற்சிக்குப் பிறகு “ஆட்சியத் ஐ.ஏ.எஸ்” ஆப் உருவானது. “ஆட்சியத் ஐ.ஏ.எஸ்” செயலி மூலம் இந்தியாவில் பல கிராமத்தில் வசிக்கும் புத்தகம் வாங்க முடியாத பலர் பயனடைந்துள்ளனர். App தோன்றிய பிறகும் whatsapp வகுப்பும் ஒருபுறம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. 

ஆட்சியர் ஐ.ஏ.எஸ் app <br>
ஆட்சியர் ஐ.ஏ.எஸ் app


வாட்ஸ் அப் ஆட்சியர் கல்வியினால்; நடந்து முடிந்த ஐஐடி நுழைவுத்தேர்வில் இந்திய அளவில் இடம் பிடித்து சாதனை படைத்தார் பார்வையற்ற மாணவர் அஜீஸ் ரகுமான். IFS தேர்விலும் தமிழ்நாடு அரசு நடத்தும் TNPSC தேர்விலும் 20-க்கு மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்று நேர்மையான அரசு அதிகாரியாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். 2017 யில் நடந்து முடிந்த முதல்நிலைத் தேர்வில் (UPSC civil services IAS,IPS) தேர்வில் மூன்று பார்வையற்ற மாணவர்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.

இது போன்ற மக்கள் ஆட்சிக்கு வரும்போது ஏழைகள் இல்லா மற்றும் ஊழல் இல்லா இந்தியா உருவாகும் என்பதே இலவச கல்வி அளிக்கும் ஆட்சியர் திட்டத்தின் குறிக்கோளாகும்.

ஆட்சியர் ஆப் பதிவிறக்கம் செய்ய க்ளிக் செய்யுங்கள்

Report an issue
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Authors

Related Tags