சிறு தொழில் நிறுவனங்கள் அதிக செலவில்லாமல் மார்க்கெட்டிங் செய்ய 10 வழிகள்!
எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் கூடுதலாக பணம் செலவு செய்யாமல், வாடிக்கையாளர்களை கவர்ந்து வர்த்தகத்ததை வளர்ப்பதற்கான பத்து வழிகளை இங்கே பார்க்கலாம்.
புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் மாறும் வாடிக்கையாளர்கள் முன்னுரிமைகள் தாக்கம் செலுத்தும் இன்றைய உலகில், வாடிக்கையாளர்களை ஈர்ப்பது, தக்க வைப்பதும் சவாலாகவே அமைகிறது.
வழக்கமான மார்க்கெட்டிங் முறைகள் மட்டும் அல்லாமல் புதிய முறைகளை நாடுவதன் மூலமே வெற்றி பெற முடியும். அதற்கேற்ப பல செலவில்லாத புதுமையான மார்க்கெட்டிங் வழிகள் இருக்கின்றன.
எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் கூடுதலாக பணம் செலவு செய்யாமல், வாடிக்கையாளர்களை கவர்ந்து வர்த்தகத்ததை வளர்ப்பதற்கான பத்து வழிகளை இங்கே பார்க்கலாம்.
இணைய இணைப்புகள்
எந்த ஒரு துறைக்கும், எந்த நிறுவனத்திற்கும் இணையதளம் மிகவும் அவசியம். வாடிக்கையாளர்கள் தகவல்களை இணையத்தில் தேடுவதால், இணையதளங்கள் மூலம் அவர்கள் நிறுவனங்களைக் கண்டறியலாம்.
எஸ்.இ.ஓ உதிகள் தவிர நிறுவனங்கள் பொருத்தமான உள்ளடக்கத்தையும் கொண்டிருக்க வேண்டும். நல்ல உள்ளடக்கம் போக்குவரத்தை அதிகரித்து விற்பனைக்கும் உதவும்.
கூட்டு விளம்பரம்
எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் தொடர்புடைய நிறுவனங்களுடன் கூட்டு ஏற்படுத்திக்கொண்டு தங்கள் பொருட்களை பரஸ்பரம் விளம்பரம் செய்து கொள்ளலாம். இரண்டும் நிறுவனங்களுக்கும் இது பயனுள்ளதாக அமையும் என்பதோடு இதற்கு செலவும் கிடையாது.
உதாரணமாக ஆன்லைன் வர்த்தக ஆலோசனை நிறுவனம் எனில், தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தை உங்கள் மேடையில் பரிந்துரைக்கலாம். அந்த நிறுவனம் பதிலுக்கு ஆன்லைன் வர்த்தக ஆலோசனையை பரிந்துரைக்கலாம்.
வலைப்பதிவு
வலைப்பதிவு மற்றும் உள்ளடக்கம் மூலம் இணையதளத்திற்கான போக்குவரத்தை அதிகரிக்கச் செய்யலாம். நீங்களே வலைப்பதிவு எழுதலாம் அல்லது மற்றவர்களிடம் இதை ஒப்படைக்கலாம்.
தற்போதையை நிலையில் இது மிகவும் பிரபலமான மார்க்கெட்டிங் உத்தியாக இருக்கிறது. நல்ல எழுத்து மூலம் உங்கள் தயாரிப்பை நேரடியாக விளம்பரம், செய்யலாம் என்றால், தொடர்புடைய உள்ளடக்கத்தை வழங்கி பார்வையாளர்களை ஈர்க்கலாம். அதே நேரத்தில் வலைப்பதிவு செய்வது வாசகர்களுக்கு தகவல்களை அளித்து தொடர்ந்து உங்களை தேடி வர வைக்கும்.
நெட்வொர்கிங்
நெட்வொர்கிங்கை இரண்டு விதமாக மேற்கொள்ளலாம். நேரடியாக மற்றும் ஆன்லைனில் மேற்கொள்ளலாம். நேரடி நிகழ்ச்சிகளில் உங்கள் தயாரிப்பு பற்றி பேசலாம்.
ஆன்லைன் நெட்வொர்கிங்கில், யூடியூப், லிங்க்டுஇன் போன்ற மேடைகளில் தீவிரமாக செயல்பட வேண்டும்.
இணை விளம்பரத் திட்டங்கள்
பரிந்துரை திட்டங்கள் மூலம் சிறு தொழில் நிறுவனங்கள் தங்கள் தொடர்பில் உள்ள வாடிக்கையாளர்களை பயன்படுத்திக்கொள்ளலாம். அவர்களுக்கு பலவிதமாக பரிசளிக்கலாம்.
இணை விளம்பரத் திட்டம் என்பது, மூன்றாம் தரப்பு மூலம், உங்கள் வர்த்தகத்தை விளம்பரம் செய்வதாகும். நிறுவனங்கள் இதற்காக குறிப்பிட்ட பங்குதாரர்களை நாடலாம்.
சமூக ஊடகம்
சமூக ஊடகம் ஆற்றல் மிகுந்த மார்க்கெட்டிங் மேடையாகும். நிச்சயம் நிறுவன மார்க்கெட்டிங் திட்டத்தில் இது இடம்பெற வேண்டும். சிறு தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்ற சமூக ஊடகத்தை கண்டறிந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு மேடையின் தன்மையையும் அதற்கான செலவையும் அறிந்திருக்க வேண்டும்.
சமூக ஊடகங்களில் பலவிதமாக பொருட்களை மார்க்கெட்டிங் செய்யலாம்.
செல்வாக்காளர்கள்
சமூக ஊடக பரப்பில், செல்வாக்காளர் மார்க்கெட்டிங் வேகமாக பிரபலமாகி உள்ளது. வலைப்பதிவாளர்கள், யூடியூபர்கள், இன்ஸ்டா பயனாளிகளை வர்த்தகங்கள் பயன்படுத்திக்கொண்டு அவர்கள் ரசிகர்களை சென்றடையலாம்.
விளம்பர தூதர் அளிக்கும் பலனை இந்த செல்வாக்காளர்கள் அளிக்கின்றனர். இதற்கான செலவும் குறைவு தான். குறிப்பிடத்தக்க செல்வாக்காளர்கள் தங்கள் சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக உள்ளடக்கம் வெளியிடுகின்றனர்.
பயனர் உள்ளடக்கம்
பயனர் உள்ளடக்கம் என்பது வாடிக்கையாளர்கள் மற்றும் நுகர்வோர் தங்கள் அனுபவங்கள் மற்றும் கருத்துகளை பகிர்வதன் அடிப்படையில் அமைகிறது. நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை இத்தகைய உள்ளடக்கம் உருவாக்க ஊக்குவிக்கலாம். விமர்சனங்கள் எழுத அல்லது வலைப்பதிவு எழுத வாய்ப்பளிக்கலாம்,
பிரபலம்
பிரான்டிற்கான கவனிப்பை உண்டாக்குவது முக்கியம். இதற்கான செலவும் அதிகம். பிரான்ட் தூதர்கள், தங்கள் செயல்பாடு மூலம் கவனத்தை ஈர்ப்பார்கள். வெபினார்கள், விவாத நிகழ்ச்சிகள் போன்வற்றில் பங்கேற்பதன் மூலமும் பிராண்ட் மீது கவனத்தை குவிக்கலாம்.
நேரடி மார்க்கெட்டிங்
இது பல காலமாக பின்பற்றப்படும் உத்தி. நிறுவனங்கள் இலக்கு வாடிக்கையாளர்களை அடைய இந்த உத்தியை பரிசீலிக்க வேண்டும். பல நிறுவனங்கள் துறை சார்ந்த கண்காட்சி, மாநாடுகள் போன்றவற்றில் பங்கேற்று தங்கள் தயாரிப்புகளை முன்னிறுத்துகின்றன.
கட்டுரையாளர்: ஜோசப் வர்கீஸ்
(பொறுப்பு துறப்பு: கட்டுரையில் இடம்பெறும் தகவல்கள் மற்றும் பார்வை கட்டுரை ஆசிரியருடையவை. யுவர்ஸ்டோரியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.)