Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

15 மில்லியன் இந்திய மக்கள் ஒவ்வொரு மாதமும் WhatsApp Business பயன்படுத்துகின்றனர்!

15 மில்லியன் இந்திய மக்கள் ஒவ்வொரு மாதமும் WhatsApp Business பயன்படுத்துகின்றனர்!

Thursday July 09, 2020 , 2 min Read

WhatsApp வெளியிட்ட அறிக்கையில், தங்களது WhatsApp business ஆப்’க்கு உலக அளவில் 50 மில்லியன் பயனர்கள் உள்ளதாகவும், இந்தியாவில் மட்டும் 15 மில்லியன் பயனர்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது.


ஃபேஸ்புக்கின் நிறுவனமான வாட்ஸ் அப், தனது பிசினஸ் செயலியை 2018ல் அறிமுகம் செய்தது. இதில், சிறுதொழில் புரிவோர், தங்களின் வாடிக்கையாளர்களை கண்டறியவும், தொடர்பு கொள்ளவும், இந்த WhatsApp business செயலியை அறிமுகம் செய்தது. இதில் பிசினஸ் செய்வதற்கான கேட்டலாக் வசதிகள், க்யூ ஆர் கோட், பேமண்ட் என்ற எல்லா அம்சங்களும், உள்ளது.

whatsapp business api

Credits: BaixarWhatsappGB

“தற்போது உலகமெங்கும் ஆன்லைன் மூலம் வர்தகம் பெருகி வரும் நிலையில், வாட்ஸ் அப் மூலம் நாங்கள் 50 மில்லியன் பயனர்கள் பிசினஸ் செய்ய ஆதரவு அளிக்கிறோம்,” என வாட்ஸ் அப் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“இந்தியாவில் மட்டும் எங்களுக்கு மாதம் 1.5 கோடி பயனர்கள் WhatsApp Business செயலிக்கு உள்ளனர். அவர்களும், இனி புதிதாக சேர உள்ள பயனர்களும் மேலும் பயன் பெறும் வகையில், மேலும் சில புதிய அம்சங்களை வாட்ஸ் அப் பிசினஸில் அறிமுகம் செய்கிறது.”

வாட்ஸ் அப் பிசினஸ் ஆப்’ல் பயனர்கள் ஒவ்வொரு எண்ணாக சேர்க்கவேண்டி இருந்தது, தற்போது வரவிருக்கும் க்யூ ஆர் கோட் வசதியால், ஸ்கான் செய்வது மூலம் ஒரு பிசினசின் தயாரிப்புகள், விலை மற்றும் அனைத்து தகவலையும் பார்க்கமுடியும்.

“க்யூ ஆர் கோட் ஸ்கான் செய்தவுடன் ஒரு சேட் திறக்கும். அதில் அந்த பிசினசின் உரிமையாளர் ஏற்கனவே சேர்த்திருக்கக்கூடிய அனைத்து தகவலும் வாடிக்கையாளர்களால் பார்க்கமுடியும். அதே போல் ப்ராடக்ட்களின் கேட்டலாக்கையும் உடனடியாக அவர்களுக்கு அனுப்பிவிட முடியும்.”

இந்த வசதி சுலபமாக ஒரு விற்பனையை முடிக்க ஏதுவாக அமையும். ‘பிசினஸ் கேட்டலாக்’ வசதியை 40 மில்லியன் மக்கள் பார்வையிடுவதாக தெரிவித்த வாட்ஸ் அப், இந்த வசதி தொழிலின் வளர்ச்சிக்கும், லாபத்துக்கும் வழி செய்துள்ளதாகக் கூறுகிறது.

“வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை சுலபமாக கண்டறிய, கேட்டலாக் மற்றும் பொருட்களின் தகவல்களை லின்க் ஆக ஷேர் செய்யும் விதம் வசதியை கொண்டு வர இருக்கிறோம். இதை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிரம், என எல்லா இடத்திலும் பகிரமுடியும். நண்பர்கள், உறவினர்களுக்கும் இந்த லின்கை ஷேர் செய்தால் அவர்கள் வாட்ஸ் அப்’லும் பார்த்துக்கொள்ளமுடியும்.”

இதைத்தவிர வாட்ஸ் அப், 'Open for Business' ஸ்டிக்கர் வசதியை கொண்டு வருகிறது. இது வாடிக்கையாளர்களுடன் பிசினஸ் செய்வோர் இணைப்பில் இருக்க உதவும் என்று வாட்ஸ் அப் தெவிரித்துள்ளது.


தகவல்: பிடிஐ