'கேண்டி கேன் கிளப்': விதி மேஹரா வடிவமைத்த அறிவு சார்ந்த விளையாட்டுகள்
தன்னுடைய முதல் முயற்சிக்கு 3 மற்றும் 5 வயது பிள்ளைகளே இத்தகைய பெயரை சூட்டினர் என்பது ஆச்சரியத்தை நமக்கு தருகின்றது. சாதராணமாக அந்த திண்பண்டத்தை கையில் வைத்துக்கொண்டு திடீரென்று தn குழந்தைகள் சொன்னாலும், நன்றாக யோசித்து தன்னுடைய முயற்சிக்கு 'கேண்டி கேன் கிளப்' என்ற பெயரையே வைத்தார் விதி மேஹரா.
"எனக்கு எப்போதுமே 2 முதல் 5 வயதில் இருக்கும் குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு புது விஷயத்தை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற எண்ணம் இருந்துக்கொண்டே இருந்தது. குழந்தைகளுக்கு ஒரு முழுமையான வளர்ச்சியை தரக்கூடிய விளையாட்டுகளை அவர்களுக்கு பழக்கபடுத்துவதில் என்னுடைய முதல் கவனத்தை செலுத்தினேன்" என்கிறார் கேண்டி கேன் கிளப்பின் நிறுவனர் விதி மேஹரா.
இந்த ஆழ்ந்த எண்ணமே 2008ம் ஆண்டில் தன்னுடைய குழந்தைகளுக்காகவும், அதே வயதில் இருக்கும் மற்ற குழந்தைகளுக்கும் ஒரு எளிதான போர்ட் விளையாட்டுகளை வடிவமைத்தார். குழந்தைகளுடைய நினைவு திறனையும், வித்தியாசமாக யோசிக்கும் திறனையும் சரியாக தூண்டிவிட வேண்டும் என்பதே விதியின் பிரதான மற்றும் எளிதான குறிக்கோளாக இருந்தது. வெறும் சில நிறுவனங்களால் அமைக்கப்பட்ட போர்ட் விளையாட்டுகள் இருந்தது மட்டுமல்லாமல் நினைவாற்றலை தூண்டும் விதத்தில் இல்லாத பட்சத்தில், விதி மேஹரா 10 வித்தியாசமான விளையாட்டுகளை வடிவமைத்தார். கிட்டத்தட்ட 30 நகரங்களில் இவரது விளையாட்டுகள் விற்கப்பட்டாலும், தனது வாடிக்கையாளர்கள் யார், அவர்களுக்கு எந்த வகையில் அவை பிடித்திருந்தது என்பதை தெரிந்துக்கொள்ள விதி பெரிதும் விரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
"எனக்கு குறிப்பாக பெற்றோர்களுடன் இணைய ஆர்வம் அதிகம். குழந்தைகளோடு அதிகப்படியான நேரத்தை ஒதுக்கி செலவழித்த காரணத்தால், பாளி மலைப்பகுதியில் நான் வசித்தப்போது ஒரு இலவச காப்பகமாகவே செயல்பட்டேன். அடிக்கடி பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைகளை என் வீட்டில் விட்டு செல்லும் வழக்கம் இருந்ததுண்டு. எனக்கும், அவர்கள் விளையாடுவதையும் அவர்களை பார்த்துக்கொள்வதிலும் ஒரு தனி மகிழ்ச்சி இருக்கவே செய்தது. இதுமட்டுமல்லாமல், அக்கம் பக்கத்திலிருக்கும் ப்ளே ஸ்கூல்களுக்கு சென்று குழந்தைகளை பார்த்துக்கொள்வதிலும் என்னுடைய அதிகப்படியான நேரத்தை செலவழித்தேன்." என்கிறார் விதி.
"அவர்களுக்கு வித்தியாசமான விளையாட்டுகளை கற்றுத்தருவது என்று மட்டுமல்லாமல், அவர்களுடைய அறிவை சரியான வழியில் செலுத்துவதற்கும் ஒரு இணைந்த முயற்சியை எடுக்கலானேன். அதுவே, இப்போது 'கேண்டி கேன் கிளப்'பாக மாறியுள்ளது" என்றும் கூறுகிறார் விதி.
அறிவு சார்ந்த விளையாட்டுகள்
இந்நிலையில், அமெரிக்காவில் இருக்கும் பிரபல போர்ட் விளையாட்டுகளை வடிவமைக்கும் டாக்டர். டாய் என்ற நிறுவனத்தை விதி தொடர்புக்கொண்டு அவர்களோடு ஒரு சின்ன கலந்தாய்வும் மேற்கொண்டார். "என்னுடைய சொந்த அனுபவங்களையும், பெற்றோர்களுக்கு தேவையான விஷயத்தையும் சேர்த்து தர எண்ணியிருந்த போது தான், குழந்தைகளுக்கான சந்தா முறையிலான விளையாட்டு திட்டம் கொண்டு வரப்பட்டது." என்கிறார் விதி.
2009ம் ஆண்டில் விதி மேஹரா, 3 வயதிற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான அறிவுசார்ந்த போர்ட் விளையாட்டுகளை வடிவமைக்க ஆரம்பித்த அதே நேரத்தில் இணையதள விளையாட்டுகள் பெருமளவில் பிரசித்தி பெற துவங்கியது. வளரும் குழந்தைகளுக்கு தேவையான சமூக கற்றாய்வு திறன், மற்றும் அறிவை வளர்க்கக்கூடிய இண்டர்பர்சனல் திறன்கள் பாரம்பரிய போர்ட் விளையாட்டுகள் முலமே கிடைக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
அனுபவப்பூர்வமான கற்றலில் பெரும் நம்பிக்கை கொண்ட விதி, "நான் மூன்று முதல் எட்டு வயதான குழந்தைகளுக்கான விளையாட்டுகளை வடிவமைக்கலானேன். இதன் மூலம் அவர்களுடைய சமூக வளர்ச்சி, தகவல்களை பரிமற்றிக்கொள்ளும் திறன், படைப்பாற்றல் போன்றவை தானாகவே வளரும்." என்று விதி நம்பிக்கையாக கூறுகிறார்.
சந்தா விளையாட்டுகளின் துவக்கம்
தன்னுடைய குழந்தைகளுக்காக விளையாட்டு பொருட்கள் மற்றும் பொம்மைகளை வாங்கும் போது அடிக்கடி குழப்பம் ஏற்படுவதுண்டு என்று விதி கூறுகிறார். "நான் வாங்கும் புத்தகங்கள் மற்றும் பொம்மை வகைகளை எப்போதுமே எனது குழந்தைகளை சீண்டியதே கிடையாது. சரியான பொருட்களை வாங்க வேண்டி, நான் பலமுறை இணையத்தளங்களில் தேடினாலும், பல வகை இருப்பதால் ஒரு விதமான குழப்பத்தில் மட்டும் என்னை கொண்டு சேர்த்தது. எந்தவொரு புத்தகம் அல்லது பொம்மையை வாங்கி வந்தாலும் கூட, அதை எடுத்து பார்க்கமால் ஒதுக்கி என்னுடைய குழந்தைகள் வைத்தார்கள். அறிவு மற்றும் கற்றல் திறனை சேர்த்து வளர்க்கும் விளையாட்டுகள் பெருமளவில் இல்லை என்பதை அப்போது தான் நான் தெரிந்துக்கொண்டேன். என்னை போலவே நிறைய பெற்றோர்களும் இதே விஷயத்தில் குழம்பியிருப்பதை உணர்ந்தேன்." என்கிறார் விதி.
இதற்காக விதி தன்னுடைய கேண்டி கிளப்பில் ஒரு தனி குழுவை அமைத்தார். ஒவ்வொரு குழந்தையுடைய வயது மற்றும் தேவைக்கேற்ப பல விளையாட்டு மற்றும் புத்தகங்கள் அடங்கிய ஒரு சிறப்பு பாக்ஸ் வடிவமைக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் குழந்தைகளுக்கு இது போன்ற சிறப்பு பாக்ஸ் தரப்படுவது மூலம், பெற்றோர்களுக்கும் தங்களுடைய குழந்தையின் சிறப்பான வளர்ச்சிக்கு இது அவசியம், எது கிடைக்கின்றது என்ற அனுபவத்தை தானாக தரும். சந்தா முறையில் இந்த சிறப்பு விளையாட்டு பாக்ஸ்கள், தன்னுடைய குழுவில் இருக்கும் நிபுணர்கள் மூலம் வடிவமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஒரு குறிப்பிட்ட தலைப்பின் கீழ் முதலில் பிரத்யேக விளையாட்டு பெட்டிகள் தயாரிக்கப்பட்டு, அதன் பின், அதற்கான சம்பந்தமான விஷயங்களை கொண்டு விளையாட்டு பெட்டிகள் தயாரிக்கப்பட்டு சந்தாதாரர்களுக்கு அளிக்கப்படும். புத்தகங்கள் மற்றும் விளையாட்டு பொருட்களை தவிர, சில புது விதமான விஷயங்களை இந்த சந்தா பெட்டிகளில் சேர்க்க திட்டமிட்டுள்ளோம். என்ற தகவலை பகிர்ந்துக்கொள்கிறார் விதி மேஹரா. ஓராண்டிற்கு 14,000 ரூபாய் செலுத்தி இந்த சந்தா பெட்டிகளை பெற்றுக்கொள்ளலாம்.
விரிவுபடுத்தும் விஷயங்கள்
2014ம் ஆண்டில் தொடங்கப்பட்ட விதி மேஹராவின் கேண்டி கிளப்பில் தற்போது கிட்டத்தட்ட 2000 வாடிக்கையாளர்கள் மும்பையில் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது. பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை சரியாக வளர்க்க உதவியும், குழந்தைகளுக்கு சவால்களை எதிர்க்கொள்ள தேவையான திறனும் வளர்க்கும் விதத்தில் புது திட்டங்கள் மற்றும் கருவிகள் வடிவமைக்கவுள்ளனர்.
4 பேர் கொண்ட சிறு குழுவாக இருந்த விதியின் கேண்டி கிளப்பிற்கு வெகு சமீபத்தில் ஒரு தொழில்நுட்பத்திற்கான டெக் குழு அமைக்கப்பட்டது. இணையம் மூலம் கற்கவும், தகவல் பரிமாறுவதற்கும் குழந்தைகளுக்கு சிறப்பு போட்டிகளும் அவ்வப்போது நடைபெறுவதுண்டு. தன்னுடைய சொந்த குடும்பத்தின் பெரும் ஆதரவு இருக்கும் பட்சத்தில், குழந்தைகளுடைய முகத்தில் சிரிப்பை தருவதே தனது குறிக்கோள் என்று பகிர்ந்துக்கொள்கிறார் விதி.
சொந்தமாக நிதி திரட்டி நடத்திவந்தாலும், மற்ற முறைகளின் மூலமும் நிதி திரட்டி சிறந்த முயற்சிகளை மேலும் எடுத்த செய்ய வேண்டும் என்ற எண்ணம் விதி மற்றும் அவருடைய குழுவிற்கு மேலோங்கியே இருக்கிறது என்று சொல்லலாம்.
"இது வரை எங்களுடைய பயணம் அற்புதமாக இருந்தாலும், கூடிய சீக்கிரத்தில் இதனை விரிவுபடுத்தி உலகளாவிய மக்களுக்கும் குழந்தைகளுக்கும் எடுத்து செல்ல வேண்டும்." என்று தன்னுடைய கனவை கச்சிதமாக பகிர்ந்துக்கொண்டார் விதி மேஹரா.
இணையத்தளத்திற்கு Candy Cane Club