வணிகத்தின் பல நிலைகளில் ஒரு வலிமையான தொழில்நுட்ப நிறுவனத்தை உருவாக்குவது எப்படி?
ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தை பில்லியன் கணக்கான மக்களுக்காக நிறுவும்போது, ஒவ்வொரு நிலையிலும் அமைப்பின் மாற்றங்களைப் புரிந்துகொள்வது அந்த அமைப்புக்கு அவசியமானது.
டெக் ஸ்பார்க்ஸ் 2015 கருத்தரங்கில் பேசிய இன்மொபி நிறுவனத்தின் முதன்மை தொழில்நுட்ப அலுவலர் மோகித் சக்சேனா (Mohit Saxena, CTO, InMobi), அவரது நிறுவனம் ஒவ்வொரு நிலையாக வளர்ந்து வந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
பூஜ்யத்தில் இருந்து முதல் நிலைக்கு
இதுதான் ஓர் நிறுவனத்துக்கு மிகவும் முக்கியமான நிலை. ஒரு வணிகத்தை கட்டமைப்பது இங்கு முக்கிய பங்கு வகிக்கவில்லை. பணியமர்த்தலே முக்கியமானது.
அனைத்து திறன், துணிச்சலுக்கு வேலை கொடுங்கள்
பணியமர்த்துதல்தான் ஒரு நிறுவனத்துக்கு எல்லா மாற்றங்களையும் தரும். “பல நிறுவனர்கள் முதலில் திறன் படைத்த தனிநபர்களை தேடிக்கொண்டிருப்பார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவர்களுக்கு சுறுசுறுப்பானவர்கள்தான் தேவைப்படுவார்கள் ” என்கிறார் மோகித்.
ஆரம்பத்தில் எங்கே தலைமை ஏற்றிருக்கிறீர்கள் என்பது தெளிவாகத் தெரியாது. நீங்கள் பணியமர்த்துதல் அல்லது கோபப்படுதலில் மட்டுமே இருக்கமுடியாது. ஆரம்பத்தில் நீங்கள் பணியமர்த்தும் பொறியாளர்கள்தான் மிக முக்கியமான குழுவினர். அவர்களுக்கு வேகமும் துரிதமும் வளர்வதற்குத் தேவையாக இருக்கும்.
“ஆரம்பத்தில் முக்கியமான பணியமர்த்துதல்தான் நிறுவனர்களின் பெரும்பணியாக இருக்கும்” என்று அனுபவத்தைப் பேசுகிறார் மோகித்.
எளிமையாக, முட்டாள்தனமாக, திறமையாக மற்றும் உண்மையாக
முடிந்த அளவுக்கு விஷயங்களை எளிமையாக வைத்துக்கொள்வது மிக முக்கியமானது. அதற்கு மோகித் ஒரு உதாரணத்தை சுட்டிக்காட்டுகிறார். விண்வெளியில் எழுதும் பேனாவுக்காக நாசா 10 மில்லியன் டாலர் செலவழித்தது. ரஷ்யா ஒரு பென்சிலைப் பயன்படுத்தியது என்கிறார். நீங்கள் ஒரு நிறுவனர் மற்றும் முதன்மை தொழி்ல்நுட்ப அலுவலராக இரு்கும்போது, குழுவினரை எளிமையாக மற்றும் குறைந்த செலவில் செய்வதற்காக உத்வேகப்படுத்தவேண்டும். “30 வரிகளில் முடிக்கவேண்டிய விஷயத்தை நீங்கள் 300 வரிகளில் எழுதிக்கொண்டிருக்கக் கூடாது ” என்கிறார் அவர்.
வேண்டுங்கள், கடன் கேளுங்கள், திருடுங்கள்
இது சக்கரத்தையே மீண்டும் கண்டுபிடிக்கும் தேவையல்ல. “மென்பொருள்கள் மற்றும் சர்வர்களை வாங்குவதற்கு நிறைய டாலர்களை செலவழிக்கவேண்டிய தேவையில்லை. ஏற்கெனவே தயாராக இருந்தால் அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம் ” என்று ஆலோசனை தருகிறார் மோகித்.
ஒவ்வொரு பைசாவையும் நல்ல குழுவினரை வேலையில் சேர்ப்பதற்காக நீங்கள் செலவிடவேண்டியிருக்கும். நீங்கள் நல்ல பொறியாளர்களைப் பெற்றால், அது உங்களுக்கு சிறகுகளைத் தரும் என்றும் கூறுகிறார் மோகித்.
புதிய தொழில்நுட்பத்தைத் தேடுங்கள்
நீங்கள் பூஜ்யத்தில் இருந்து அடுத்த நிலைக்கு நகர்வதிலேயே இருக்கக்கூடாது. அது அடுத்தகட்ட வளர்ச்சிக்கு உதவாது. ஆரம்பத்தில் அதிகமாக இழக்கமாட்டீர்கள். பரிசோதனை செய்வதற்கு அது முக்கியமானது. வேகமாகவும் புதிய விஷயங்களையும் நீங்கள் பரீட்சித்துப் பார்க்கவேண்டும்.
எண்ணம், வேகம் மற்றும் செயல்பாடு
நீங்கள் ஒரு எண்ணத்தை அடையும்போது, அதைப் பற்றி சிந்தியுங்கள், நீங்கள் எங்கும் போகவேண்டியதில்லை. அந்த எண்ணத்தை கட்டமைத்து, செயல்படுத்த முயற்சி செய்யுங்கள். “ஒரு மோசமான விஷயமும் நடக்கலாம். நீங்கள் தோல்வி அடையலாம். தோல்விகள் உங்களுக்கான சிறந்த வழிகாட்டிகள். எது தவறாக இருக்கிறது என்பதை எப்போதும் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். அதை புரிந்து சரிசெய்யவேண்டும்” என்கிறார் மோகித்.
ஒன்றில் தொடங்கி லட்சம் நிலைக்கு
இந்த நிலை வேறுபட்டது, நீங்கள் மாறுபட்ட விதிகளை செயல்படுத்தி பார்க்க வேண்டும். விருப்பங்கள் வேறுபட்டவையாக இருக்கலாம். ஆனால் இப்போது பெரிய கனவு காணவேண்டிய தேவை இருக்கிறது என்று கூறுகிறார் மோகித்.
உலக அளவுக்குச் செல்லுங்கள்
“ நாம் இந்தியாவில் தொடங்கப்பட்ட நிறுவனங்களாக இருக்கலாம். ஆனால் நாம் குளோபல் நிறுவனங்களுடன் போட்டியிடக்கூடிய குளோபல் நிறுவனங்கள்” என்கிறார் மோகித். தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அந்த வாய்ப்புகள் உண்டு. அவர்களுடைய தயாரிப்புகள் உலகின் எந்தப் பகுதியிலும் அறிமுகம் செய்யமுடியும்.
விரைவாக தோல்வி
“நீங்கள் தவறான குறியீடுகளை எழுதுவதற்காக கவலைப்படாதீர்கள். தோல்வியுறுவதன் மூலம் நீங்கள் பில்லியன் நிலையை அடைவதற்கான செயல்முறை அனுபவம் அதிகம் தேவையாக இருக்கிறது என்று அர்த்தம்” இது மோகித் வழங்கும் அறிவுரை.
ஆழமான திறனுக்கு வேலை கொடுங்கள்
“ஏற்கெனவே உங்களுக்கு சுறுசுறுப்பாக வேலை பார்ப்பவர் கிடைத்தாயிற்று. ஆழமான நிபுணத்துவம் வாய்ந்த நபர்களை தேடவேண்டிய நேரம் இது. அதேநேரத்தில் இளமை மற்றும் பேரார்வம் உள்ளவர்களாகவும் இருக்கவேண்டும்” என்கிறார் மோகித்.
கட்டமைப்பதையும் வாங்குவதையும் மதிப்பிடுங்கள்
நடைமுறைக்கேற்ப இருப்பது முக்கியமானது. நியாயமான விலைக்கு பல தொழில்நுட்பங்களை வாங்கியிருப்பீர்கள். ஆனால் அவற்றை ஒரு தயாரிப்பாக உருவாக்க சில நேரங்களில் நீண்டநாள்கள் ஆகலாம்.
உங்களுக்கான முதன்மை தளத்தை கட்டமையுங்கள்
உங்கள் நிறுவனத்திற்கு வலிமையைக் கொடுக்கும் அடிப்படையான தளத்தை உருவாக்க இதுதான் நேரம். “ மற்ற தயாரிப்புகளை கட்டமைக்க இது ஊக்கமாக இருக்கும்” என்று கருத்துக்கு வலுசேர்க்கிறார் மோகித்.
லட்சத்தில் இருந்து பில்லியனுக்கு
தற்போது உங்களுடைய திட்டங்களை போட்டிக்கு ஏற்றவாறு ஒருங்கிணைக்க வேண்டும். மிகப்பெரிய சர்வதேச நிறுவனங்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்.
வடிவமைப்பை மாற்றுங்கள் – கொடூரமாக
“தங்கள் கட்டட மாதிரிகைகளை நேசிக்கும் பொறியாளர்களை எனக்குத் தெரியும். ஆனால் பெரும்பாலான தொழில்நுட்பங்கள் ஆறு மாதம் கூட இருப்பதில்லை” என்கிறார் மோகித். எனவே, காலத்துக்கு தொடர்பற்ற அமைப்பு மற்றும் வடிவங்களுக்கு கொஞ்சமும் இடம் கொடுக்காதீர்கள்.
மரபுகளை உடையுங்கள்
மோகித் சொல்வதைப்போல, நிறுவனங்கள் பெரிதாக வளர்கின்றன. மரபுகளும் உருவாக்கப்படுகின்றன. “பல பேர் மரபுகளை மாற்றுவது பற்றி யோசிக்கமாட்டார்கள். அது வலிமிகுந்த நடைமுறை. அந்த வலியை ஏற்றுக்கொண்டு மாற்றங்களைச் செய்யவேண்டும்” என்கிறார் மோகித். பழைய மரபுகள் உங்கள் நிறுவனத்தை மோசமான நிலைக்கு கொண்டுசெல்லும். அதற்கெல்லாம் தொழில்நுட்ப நிறுவனத்தில் இடமில்லை என்று எச்சரிக்கிறார் மோகித்.
புதுமையை தக்கவைத்திருங்கள்
உங்களது நிறுவனம் 300 பேரில் இருந்து 400 பேராக வளர்ந்தாலும், புதுமை தொடரவேண்டும். அது பணிகளைச் செய்ய சிறந்த வழிமுறையாக இருக்கும்.
டெக் பிராண்ட்டை உருவாக்கு
“நல்ல பொறியாளர்கள் என்பவர்கள் நல்ல பொறியாளர்களுடன் பணிபுரிபவர்கள்” மோகித் சொல்கிறார்.