Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

2021 இந்தியாவின் டாப் 10 யூட்யூப் மியூசிக் வீடியோக்கள் எது தெரியுமா?

இந்தியாவில் இந்தி, போஜ்புரி, தமிழ், தெலுங்கு என 2021-ம் ஆண்டில் யூட்யூபில் இசைப் பிரிவில் கலக்கிய `டாப் 10 மியூசிக் வீடியோக்கள்’ பற்றிய தொகுப்பு இது.

2021 இந்தியாவின் டாப் 10 யூட்யூப் மியூசிக் வீடியோக்கள் எது தெரியுமா?

Sunday December 12, 2021 , 2 min Read

ஒவ்வொருவரின் விருப்பமும் மாறுபடும். சிலருக்குக் கதை பிடிக்கும், சிலருக்கு கவிதை பிடிக்கும். ஆனால் இசையைக் கேட்டு மயங்காதர்வர்கள் இந்த உலகில் உண்டா என்ன?


எல்லோருக்கும் இசை பிடிக்கும் என்றாலும் எல்லோரும் ஒரே மாதிரியான இசையை விரும்பிக் கேட்பதில்லை. ராப், மெலடி, வெஸ்டர்ன் என யூட்யூப் ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்தமான பிரிவில் இருந்து தேர்வு செய்து கேட்டும் பார்த்தும் ரசிக்கின்றனர்.

youtube trending

இசை மொழிக்கு அப்பாற்பட்டது. இந்தியாவில் இந்தி, போஜ்புரி, தமிழ், தெலுங்கு என 2021-ம் ஆண்டில் யூட்யூபில் இசைப் பிரிவில் கலக்கிய ‘டாப் 10 மியூசிக் வீடியோக்கள்’ என்ன என்று பார்க்கலாம்:

1.     Lut Gaye

டி-சீரிஸ் வெளியிட்டுள்ள இந்த இந்தி ஆல்பம் டாப் வீடியோக்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இம்ரான் ஹஷ்மி, யுக்தி ஆகியோர் இதில் நடித்துள்ளனர். பாலிவுட்டின் பிரபல பாடகர் ஜூபின் நவ்டியால் இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார்.

2.     KUWARE ME GANGA NAHILE BANI

அன்குஷ் ராஜாவின் அதிகாரப்பூர்வ யூட்யூப் சானலில் வெளியாகியுள்ள இந்த போஜ்புரி பாடல் இசைப் பிரியர்கள் மத்தியில் சூப்பர் ஹிட். அன்குஷ் ராஜா, ஷில்பி ராஜ் ஆகியோர் இந்தப் பாடலைப் பாடியுள்ளனர். ஆர்யா ஷர்மா இசையமைத்துள்ளார்.

3.     BADSHAH - PAANI PAANI

பாலிவுட்டின் பிரபல ராப் ஸ்டார் பாத்ஷா, ஆஸ்தா கில் உடன் இணைந்து இந்த இந்திப் பாடலை பாடியிருக்கிறார். இரண்டாவது முறையாக இருவரும் சேர்ந்து பாடியிருக்கின்றனர். ஜாக்லின் ஃபெர்னாண்டஸ் இதில் நடித்துள்ளார்.

4.     BAARISH KI JAAYE

பிரபல பாடகரான பிராக் பி இந்த இந்திப் பாடலைப் பாடியிருக்கிறார். நவாசுதீன் சித்திக், சுனந்தா ஷர்மா ஆகியோர் இதில் நடித்துள்ளனர். ஜானி இந்தப் பாடலுக்கு இசையமைத்து பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

5.     SAIYAAN JI

டி-சீரிஸ் வெளியிட்டுள்ள இந்த இந்திப் பாடலை யோ யோ ஹனி சிங், நேஹா கக்கர் ஆகியோர் பாடியுள்ளனர். இதில் நஷ்ரத் நரூஷா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஹோமி தில்லிவாலா, லில் கோலு ஆகியோருடன் இணைந்து யோ யோ ஹனி சிங் இந்தப் பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.

6.     SARANGA DARIYA

முன்னணி பட்டியலில் இந்தப் பாடல் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. பவன் இசையில் லவ் ஸ்டோரி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இந்தத் தெலுங்கு பாடலை மாங்லி பாடியுள்ளார்.

7.     NADHI BICHE NAIYA DOLE


இது ஷில்பி ராஜ் பாடியுள்ள சமீபத்திய சூப்பர் ஹிட் பாடல். விஜய் சவுஹான் எழுதியுள்ள இந்த போஜ்புரி பாடலுக்கு ஆர்யா ஷர்மா இசையமைத்துள்ளார்.

8.     BAARISH BAN JAANAA

இந்த இந்தி ஆல்பத்தை பாயல் தேவ், ஸ்டெபின் பென் ஆகியோர் பாடியுள்ளனர். பாயல் தேவ் இசையமைத்துள்ள இந்தப் பாடல் வரிகளை குனால் வெர்மா எழுதியுள்ளார்.

9.     ENJOY ENJAAMI

டாப் 10 பட்டியலில் இடம்பெற்று ஒரே தமிழ் பாடல் இது. தீ மற்றும் தெருக்குரல் அறிவு பாடியுள்ள இந்தப் பாடல் ரசிகர்களிடையே வைரலாகி பட்டி தொட்டி எங்கும் பரவியது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைத்துள்ளார்.

10. RAATAAN LAMBIYAN

’ஷேர்ஷா’ இந்தித் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலை தனிஷ்க் பக்சி, ஜூபின் நவ்டியால், அசீஸ் கவுர் ஆகியோர் பாடியுள்ளனர். தனிஷ் பக்சி இந்தப் பாடல் வரிகளை எழுதியிருக்கிறார்.