2021 இந்தியாவின் டாப் 10 யூட்யூப் ட்ரென்டிங் வீடியோக்கள்!
திகில், நகைச்சுவை என இந்தியர்களின் ரசனையை உணர்ந்து உருவாக்கப்பட்ட வீடியோக்கள் `டாப் 10 யூட்யூப் ட்ரெண்டிங் வீடியோக்கள்’ பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
வீடியோ வடிவில் உள்ளடக்கங்களை வழங்கும் யூட்யூப் தளம் இசை, பொழுதுபோக்கு, மூவி, அனிமேஷன், காமெடி என ஏராளமான பிரிவுகளைக் கொண்டிருப்பதால் மக்கள் தங்களது ரசனைக்கேற்ப இதிலுள்ள வீடியோக்களைக் கண்டு மகிழ்கின்றனர்.
பாரபட்சமின்றி அனைவர் கைகளிலும் ஸ்மார்ட்போன் தவழ்ந்துகொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் போட்டியும் அதிகரித்துள்ளது. உள்ளடக்கங்களை உருவாக்குபவர்கள் தங்களது வீடியோக்கள் ட்ரெண்டிங் ஆக மாற்ற அதிகம் மெனக்கெடவேண்டியுள்ளது.
மக்களின் ரசனையை அறிந்து தொடர்ந்து தங்களை மேம்படுத்திக்கொண்ட யூட்யூபர்கள் இந்த இலக்கை எட்டிவிடுகின்றனர்.
அந்த வகையில் இந்தியாவில் பலரையும் ஈர்த்துள்ள 'டாப் 10 யூட்யூப் ட்ரெண்டிங் வீடியோக்கள்’ பட்டியலை இங்கு பார்ப்போம்.
யூட்யூப் ட்ரெண்டிங் வீடியோக்கள்:
1. ZOMBIE – The Living Dead
இது யூட்யூப் ட்ரெண்டிங் வீடியோக்களின் பட்டியலில் முதல்s இடத்தைப் பிடித்துள்ளது. இந்த 40 நிமிட வீடியோ திகில்-காமெடி வீடியோவை Round2Hell யூட்யூப் சேனல் உருவாக்கியுள்ளது. இந்த சேனல் தற்போது 20 மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களைக் கொண்டுள்ளது.
2. PAAGAL BETA 13
CS Bisht Vines சேனல் இந்த காமெடி வீடியோவை உருவாக்கியுள்ளது. இந்திய குடும்பங்களில் நடக்கும் வழக்கமான செயல்களை நகைச்சுவையுடன் அனிமேடட் வடிவில் கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
3. TVF’s Aspirants – Episode 1
யுபிஎஸ்சி தேர்வெழுத விரும்பும் மூன்று பேரின் பயணத்தையும் நட்பையும் பதிவு செய்யும் இந்த வீடியோ மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. முதல் எபிசோடில் அபிலாஷ் என்கிற கதாப்பாத்திரத்திற்கு எந்தப் பாடங்களைத் தேர்வு செய்வது என்கிற குழம்பம் ஏற்படுவதை மையமாகக் கொண்டுள்ளது.
4. THE LAND OF BIGGBOSS
இந்திய யூட்யூபரான அஜே நகர் என்கிற கரிமினாட்டியின் வீடியோக்களில் சர்ச்சைக்கு சற்றும் குறைவிருக்காது. இந்த வீடியோ 10 மில்லியன் வியூக்களுடன் ட்ரெண்டிங்கில் உள்ளது. பிக் பாஸ் 14 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்களான ராக்கி சவாந்த், ஈஜாஸ் கான், ரூபினா திலைக் ஆகியோரை கேலி செய்யும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது.
5. Free Fire World Series 2021
Free Fire Esports India சானலின் இந்த 5 மணி நேரம் கேமிங் லைவ் ஸ்ட்ரீம் இந்தியாவின் மிகப்பிரபல வீடியோக்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது.
6. The Mummy Returns
யூட்யூப் இந்தியாவின் காமெடி கிங் ஆஷிஷ் சன்சலானி அன்னையர் தினத்திற்கு முன்பாக மே 8ம் தேதி வெளியிட்ட இந்த வீடியோ மிகப்பிரபலமானது. நம் அன்றாட வாழ்க்கையுடன் எளிதாகப் பொருத்திப்பார்க்கும் வகையில் வேடிக்கையாக இருப்பதால் முன்னணி ட்ரெண்டிங் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
7. BHAI-BEHAN AUR CHUDAIL
ரசித் ரோஜ்ஹா உருவாக்கியுள்ள இது ஒரு திகில் நகைச்சுவை வீடியோ. ரசித் ரோஜ்ஹாவின் சகோதரிக்கு பேய் பிடித்து குடும்பத்திலிருப்பவர்களை பயமுறுத்துவது போல் இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.
8. DHINDORA - EPISODE- 1
BB Ki Vines யூட்யூப் சேனல் வழங்கும் இந்த சீரிஸ் புரோமோஷனுக்காகக் காத்திருக்கும் அப்பா, நல்ல மதிப்பெண் எடுக்கத் துடிக்கும் மகன், இல்லத்தரசியான அம்மா என நடுத்தர குடும்ப நிகழ்வுகளாக விரிவடைகிறது. திடீரென்று இவர்கள் பணக்காரர்களாக மாறி மக்கள் மத்தியில் பிரபலமடைகிறார்கள்.
9. ROOMMATE
ஸ்டான்ட் அப் காமெடியன் அனுபவ் சிங் பஸ்ஸி இந்த 23 நிமிட ரூம்மேட் வீடியோவில் கல்லூரி நாட்களில் சக நண்பர்களுடன் தங்கியிருந்த அழகான நாட்களை நகைச்சுவையுடன் நினைவுகூறுகிறார்.
10. Bhide jumps off balcony
Taarak Mehta Ka Ooltah Chashmah சேனலின் இந்த 4 நிமிட கிளிப் 101 வியூக்களைக் கடந்துள்ளது. இந்தப் பிரபல சிட்காமில் பிடேவிற்கும் ஜீதாலாலுக்கும் இடையில் நடக்கும் சண்டையால் பிடே மாடியில் இருந்து குதிக்கிறார்.