சிறுதொழில் துறையில் கடன் இடைவெளியை தீர்க்க முயலும் 21 வயது தொழில்முனைவோர்!
குருகிராமைச் சேர்ந்த ’சாப்டில்’ சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கடன் தேவைக்கான நிதி தீர்வுகளை வழங்கி வருகிறது.
இந்திய பொருளாதாரத்திற்கு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் (எஸ்.எம்.இ) முக்கியப் பங்களிப்பை மீறி, இவற்றில் பல வர்த்தக் நிறுவனங்கள் பாரம்பரிய வங்கிச்சேவை செயல்பாடு வரம்புகள் காரணமாக, குறித்த காலத்தில், செலவு குறைந்த கடன் வசதி கிடைக்காமல் அவதிப்படுகின்றன.
குருகிராமைச் சேர்ந்த பி2பி கடன் நிறுவனம் ‘சாப்டில்’ (
), சிறிய தொழில் நிறுவங்களுக்கான நிதி தீர்வுகள் வழங்குவதன் மூலம் இந்த கடன் வசதி இடைவெளிக்கு தீர்வு காண முயல்கிறது.2021ல், பாலசோரைச் சேர்ந்த 19 வயது தொழில்முனைவோர் பிரவாஸ் சந்திரகிரியால் துவக்கப்பட்ட சாப்டில் சிறு தொழில் நிறுவனங்களை மேம்படுத்தி, செயல்முறையை சீராக்கி, ரொக்க வரத்தை சாதகமாக்கும் வகையில் செயல்படுகிறது.
இந்த ஸ்டார்ட் அப் மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சில்லறை வர்த்தகர்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு அதிகாரம் அளிக்கும் நிதி வாய்ப்புகளை வழங்குகிறது. கடந்த 2 ஆண்டுகளில் இந்நிறுவனம் 30 மில்லியன் டாலர் மதிப்பிலான மொத்த கடன் மதிப்பை (GLV) அடைந்துள்ளது. இதன் செயல்பாடு திறனை இது உணர்த்துகிறது.
நிதி தீர்வுகள்:
சாப்டில் மேடை, நிறுவனங்கள் அல்லது ரீடைலர்களின் குறிப்பிட்ட தேவை மற்றும் பணம் திரும்ப செலுத்தும் தன்மைக்கேற்ற பல வகை நிதி தீர்வுகளை கொண்டுள்ளது:
டெர்ம் கடன்கள்: இயந்திரம் வாங்க அல்லது விரிவாக்கத்திற்கு நீண்ட கால முதலீடு எதிர்நோக்கும் சிறு தொழில்களுக்கு இவை ஏற்றவை.
“மாதத்தவணைகளில் செலுத்த வேண்டிய சற்று நீண்ட கால கடன் இவை,” என்கிறார் சந்திரகிரி.
விநியோகிஸ்தர் அல்லது மொத்த விற்பனையாளர் இந்த கடனை ஈட்டுறுதி அல்லது இன்வாய்ஸ் இல்லாமல் நாடலாம்.
இன்வாய்ஸ் நிதி: ரீடைலர் இன்வாய்ஸை ஈட்டுறுதியாக கொண்டு கடன் பெறலாம்.
“விநியோகிஸ்தரிடம் இருந்து ரீடைலர் பொருட்களை வாங்கும் போது, விநியோகிஸ்தர் இன்வாய்ஸ் கோருவார். ரீடைலரிடம் போதிய நிதி இல்லை எனில், சாப்டில் உதவுகிறது,” என்கிறார் சந்திரகிர்.
ரீடைலர் சாப்டில் மேடையில் இன்வாய்சை பதிவேற்றியதும் அது தொடர்பான பரிசீலனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், விநியோகிஸ்தர் கடன் தொகையை அங்கீகரிக்க வேண்டும். அதன் பிறகு, சாப்டில் நிதியை விநியோகிஸ்தருக்கு அளிக்கும்.
லைன்ஸ் ஆப் கிரெடிட்: சிறு தொழில்கள், தொழில்முனைவோருக்கான முன் அனுமதி பெற்ற கடன் வசதியாக இவை அமைகின்றன. இதை தேவையின் போது பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், அனுமதி அளவு அல்லாமல், பயன்படுத்திய தொகைக்கு மட்டுமே வட்டி செலுத்த வேண்டும். சிறுதொழில் நிறுவனங்கள் தங்கள் தேவைக்கேற்ப கடன் வசதியை நாடலாம்.
“இது சாப்டிலால் கடன்தாரருக்கு வழங்கப்படுகிறது. அவர்கள் தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொண்டு கடன் தொகையை மட்டும் செலுத்தலாம்,” என்கிறார்.
அனுமதி அளிக்கப்படும் கடனுக்கு ரீடைலர் எனில் விநியோகிஸ்தரை உத்திரவாதம் கொள்ளச் செய்கிறது. அதே போல, மொத்த விற்பனையாளருக்கு உற்பத்தியாளர்.
“எங்கள் நிறுவனம் தரவுகள் சார்ந்தது. ஏஐ சார்ந்த இஞ்சின் கிரெடிட் ஸ்கோர், வங்கிக் கணக்கு பரிவர்த்தனை, விநியோகிஸ்தர் பிராண்ட் வரலாறு போன்றவற்றை பரிசீலித்து இடர் சார்ந்த ஈட்டுறுதி இல்லா கடன் வழங்குகிறோம்,” என்கிறார் சந்திரகிரி.
சந்தை வாய்ப்புகள்
17 நிறுவனங்கள், 350 விநியோகிஸ்தர்கள், ஐந்து வணிகர்களுடன் கூட்டு ஆகியவற்றை சாப்டில் கொண்டுள்ளது.
“எங்கள் மாதாந்திர வழங்கல் ரூ.32 கோடி, ஆண்டு அடிப்படையில் இது ரூ.307 கோடி. அடுத்த நான்கு மாதங்களில் ரூ.400 கோடி வழங்க திட்டமிட்டுள்ளோம்,” என்கிறார்.
வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது இந்த ஸ்டார்ட் அப்.
“வட்டி விகிதம் மற்றும் செயல்முறை கட்டணம் இடையிலான வேறுபாடு எங்கள் வருவாய். உதாரணமாக, வங்கியிடம் இருந்து a% கடன் பெற்று ரீடைலருக்கு a+b% என வழங்கினால், b% தான் எங்கள் வருவாய்,” என்று வருவாய் முறையை விளக்குகிறார்.
சாப்டில், கூபே விசி, வி பவுண்டர் சர்கிள், ஐஸ்லாண்ட் வென்சர் ஸ்டூடியோ, நைரா வென்சர்ஸ் மற்றும் டன்சோ, ஜார், கூகுள், ஆல் கார்கோ குருப் உள்ளிட்டவற்றின் நிறுவனர்கள், முதன்மை அதிகாரிகளிடம் இருந்து இரண்டு கட்டங்களில் 1.5 மில்லியன் டாலர் நிதி பெற்றுள்ளது.
இது தவிர, சந்திரகிரி தனது முந்தைய நிறுவனத்தின் (Profitails.com) லாபம் ரூ.25 லட்சத்தை முதலீடு செய்துள்ளார்.
எம்.எஸ்.எம்.இ துறையின் கடன் தேவை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இந்த துறையில் கடன் இடைவெளி ரூ.42 லட்சம் கோடி அளவில் இருப்பதாக அவெண்டஸ் கேபிடல் தெரிவிக்கிறது. 64 மில்லியன் நிறுவனங்களில் 14 சதவீதம் மட்டும் கடன் வசதி கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரிவில் இபேலேட்டர், மினிட்பில் லோண்டேப் மற்றும் லெண்டிங்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஆங்கிலத்தில்: திரிஷா மேதி | தமிழில்: சைபர் சிம்மன்
20,000 ரூபாய்க்குக் குறைவான முதலீட்டில் லாபம் தரக்கூடிய 20 சிறுதொழில்கள்!
Edited by Induja Raghunathan