சென்னையில் ஒரு மணி நேரத்தில் 30 ஆயிரம் லிட்டர் மழை நீரை சேமித்த குடியிருப்பு வளாகம்!

சென்னை ஐடி காரிடர் பகுதியில் அமைந்துள்ள ’சபரி டெரஸ்’ அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் 25,000 சதுர அடி மேற்கூரையின் வாயிலாக தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது.
1 CLAP
0

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. இந்த சமயத்தில் எந்த ஒரு தீர்வும் வரவேற்கத்தக்கதுதான். சென்னை நகரில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் ஒன்றில் ஒரு மணி நேரத்தில் 30,000 லிட்டர் தண்ணீரை சேமிக்கப்பட்டுள்ளது. தீவிரமான தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க நகரில் உள்ள மற்ற அடுக்குமாடிகளும் இந்த முறையைப் பின்பற்றவேண்டும்.

கடும் தண்ணீர் பிரச்சனை நிலவி வரும் சூழலில் கடந்த வாரம் சென்னையில் முதல் மழை பெய்தபோது ’சபரி டெரஸ்’ என்கிற அடுக்குமாடி கட்டிட வளாகம் அதன் 25,000 சதுர அடி மேற்கூரையில் மழை நீர் சேகரிப்பு மூலம் 30,000 லிட்டர் தண்ணீரை சேகரித்துள்ளது.

இந்த வளாகத்தில் 56 குடும்பங்கள் உள்ளன. இங்கு குழாய் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படாததால் இவர்கள் ஒரு வருடத்தின் மூன்று மாதங்களுக்கு மழை நீரையே பயன்படுத்துகின்றனர்.

குடியிருப்போர் சங்கத்தின் செயலாளர் ஹர்ஷா கோடா என்டிடிவி உடனான உரையாடலில் தெரிவித்தபோது,

”நிலத்தடி நீரை ரீசார்ஜ் செய்தால் எங்களது கிணறுகளுக்கு தண்ணீர் வரத்துவங்கி அதைப் பயன்படுத்த ஆறு மாத காலம் காத்திருக்கவேண்டும். ஆனால் குழாய் நீர் இல்லாத ஓஎம்ஆர் பகுதியில் எங்களுக்கு உடனடி பயன்பாட்டிற்கே தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே இன்று மழை பெய்தால் நாங்கள் தண்ணீரை சேகரித்து இரண்டு மணி நேரத்தில் பயன்படுத்தத் துவங்குகிறோம். 30 ஆயிரம் லிட்டர் தண்ணீரை சேமித்ததன் மூலம் 5,000 ரூபாய் சேமித்துள்ளோம்,” என்றார்.

இவரது மனைவி பிரபா கூறும்போது, “ஒரு மணி நேரம் மழை பெய்தால் மேற்கூரையின் ஒவ்வொரு சதுர அடி மேற்பரப்பிலும் ஒரு லிட்டர் தண்ணீரை சேகரிக்க முடியும். 25,000 சதுர அடி கொண்ட எங்களது மேற்கூரையில் குறைந்தபட்சமாக 25,000 லிட்டர் தண்ணீர் சேமிக்கலாம்.

”மூன்று மணி நேரம் மழை பெய்தால் ஒரு லட்சம் லிட்டர் வரை சேகரிக்கமுடியும். 56 குடியிருப்புகளுக்கு மூன்று நாட்களுக்கான தண்ணீர் தேவைக்கு இந்த அளவானது போதுமானதாக இருக்கும்,” என்று விவரித்தார்.

கடந்த ஆண்டு மழைநீரை நிலத்தடியில் ரீசார்ஜ் செய்ய பயன்படுத்தினோம். அவ்வாறின்றி இந்த ஆண்டு மழை நீரை சேகரித்து அப்போதைய தேவைக்குப் பயன்படுத்த தீர்மானித்தனர். தண்ணீரை சுத்திகரித்த பிறகு அது நிலத்தடியில் உள்ள தொட்டியில் சேமிக்கப்படுகிறது. மீதமிருந்த தண்ணீர் நிலத்தில் வெளியேற்றப்படுகிறது.

மழைநீர் சேமிப்பு அமைப்பு தண்ணீர் தட்டுப்பாடுகளுக்கு தீர்வளிப்பதுடன் அன்றாட தண்ணீர் தேவைக்கு மாநில நீர் விநியோகத்தை சார்ந்திருக்கும் நிலையையும் ஓரளவிற்குக் குறைக்கிறது என்று ’ஸ்டோரிபிக்’ குறிப்பிட்டுள்ளது.

இந்த வளாகம் தங்களது அன்றாட தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள தண்ணீரை சேமிக்கும் முறையை அருகாமையில் வசிப்பவர்கள் கண்டனர். இதே முறையை அவர்களும் பின்பற்றத் தீர்மானித்தனர். உதாரணத்திற்கு சபரி டெரஸ் அருகே அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகமான ’செண்ட்ரல் பார்க் சவுத்’ தற்போது மழை நீரை சேமிக்கத் துவங்கியுள்ளது.

கட்டுரை: THINK CHANGE INDIA

Latest

Updates from around the world