Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

#MeToo இயக்கமும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் கவுன்சில்ங் இணைய தளங்களும்...

#MeToo இயக்கமும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் கவுன்சில்ங் இணைய தளங்களும்...

Monday November 26, 2018 , 3 min Read

இந்தியாவில், 2018 ம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை பட்டியலிட்டால் நிச்சயம் ’மீடு’ (#MeToo) இணைய இயக்கத்திற்கு டாப் டென்னில் இடம் உண்டு. இந்த இயக்கம், ஒரு ஹாஷ்டேகின் ஆற்றலை உணர்த்தியதோடு, மீடு இயக்க வரைபடத்தில் இந்தியாவும் இணைய வழி செய்தது. ஒரு விதத்தில் இந்தியாவுக்கும் இந்த இயக்கம் வந்துசேர்ந்தது குறித்து நிம்மதி பெருமூச்சு விடலாம்.

ஏனெனில், பாலியல் சீண்டலுக்கு உள்ளான பெண்கள், நானும் பாதிக்கப்பட்டேன் எனும் பொருள்பட தங்கள் வலி மிகுந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ள மீடு ஹாஷ்டேக் வழி வகுத்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே இந்த ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டாலும், ஹாலிவுட் நட்சத்திர தயாரிப்பாளர் ஒருவருக்கு எதிராக அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் குமுறலை டிவிட்டரில் வெளிப்படுத்திய போது, மீடு பதிவுகள் ஒரு இயக்கமாக உருவெடுத்தன.

மீடு ஹாஷ்டேக்<br>

மீடு ஹாஷ்டேக்


அதன் பிறகு பல்வேறு துறைகளைச்சேர்ந்த பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் அனுபவத்தை துணிச்சலுடன் வெளியிடத்துவங்கியதால் இந்த இயக்கம் வலுப்பெற்றது. இந்த இயக்கம் ஏற்படுத்திய தாக்கம் மற்றும் விவாதம் காரணமாக கடந்த ஆண்டு டைம் பத்திரிகை இந்த இயக்கத்தை, பர்சன் ஆப் தி இயர் என அடையாளம் காட்டியது.

அமெரிக்காவில் மீடு இயக்கம் ஏற்படுத்திய தாக்கம் சீனா உள்ளிட்ட பல நாடுகளில் எதிரொலித்தது. ஒவ்வொரு நாட்டிலும், மீடு ஹாஷ்டேக் துணை கொண்டு பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட போது, அந்த நாட்டிலும் மீடு இயக்கம் வேரூன்றி இருப்பதாக பேசப்பட்டது.

எனவே, தான் இந்தியாவிற்கும் இந்த இயக்கம் வந்து சேர்ந்ததை கொண்டாட வேண்டியிருக்கிறது. இது நிகழ்வதற்கு முன், பாலிவுட்டிலும், இந்தியாவிலும் இத்தகைய இயக்கம் சாத்தியமா என எதிர்பார்த்தவர்களுக்கும், குறிப்பாக இத்தகைய ஆதரவு ஹாஷ்டேகிற்காக ஏங்கிய பெண்களுக்கும் நம் நாட்டிலும் மீடு இயக்கம் வெடித்து பரவியது நிச்சயம் மகிழ்ச்சியையே அளிக்கும்.

#MeToo தேவை மற்றும் தாக்கம் குறித்து விரிவான அலசல்களும், ஆய்வுகளும் நமக்குத் தேவை. மீடு இயக்கம் நீர்த்துப்போய் விட்டதாக பலர் கருதலாம். பிரபலங்கள் மீதான கல்லெறிதல் என சிலர் குற்றம் சாட்டலாம். ஆனால் பாதிக்கப்பட்டவர் தரப்பில் நின்று கொண்டு பார்த்தால் தான் இந்த இயக்கத்தின் நியாயத்தை புரிந்து கொள்ள முடியும்.

இந்த நிகழ்வு ஏற்படுத்திய விவாதங்களில் வெளிப்பட்ட கருத்துகள், நம் சமூகத்தின் இரட்டை நிலையை அழகாக புரிய வைத்ததை உணரலாம். சம்பவம் நடந்த பல ஆண்டுகளுக்கு பின் சொல்வது ஏன்? 

அல்லது அப்போது மவுனமாக இருந்தது ஏன்? என்பது போன்ற கருத்துகள் பலரால் கூறப்பட்டது. ஆனால், மீடு இயக்கத்தின் ஆதார அம்சங்களில் ஒன்று, பாலியல் சீண்டலுக்கு இலக்கான பெண்கள் அதை தங்களுக்குள் மூடி வைத்துக்கொண்டு உள்ளுக்குள் மருகாமல், இப்போதாவது அதை வெளிப்படுத்திக்கொள்ள வழி செய்தது தான்.

மீடு பதிவுகளின் நோக்கம், குற்றம் சாட்டுவதோ, கல்லெறிவதோ அல்ல: இவை எல்லாவற்றையும் விட பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மனச்சுமையை இறக்கி வைக்க வழி செய்வது தான். இதன் மூலம் பெண்கள் தங்கள் வலிகளில் இருந்து விடுபெறலாம் என்பதோடு, தங்கள் சுயத்தையும் மீட்டெடுக்கலாம். இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை மவுனமாக பொருத்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை எனும் நம்பிக்கையை இந்த ஹாஷ்டேக் அளித்தது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு இது எத்தனை பெரிய விடுதலை அளித்திருக்கும் என புரிந்து கொள்ளலாம்.

டைம் இதழில் மீடு <br>

டைம் இதழில் மீடு


இந்த பின்னணியில், அண்மையில் எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரை கவனத்தை ஈர்ப்பதாக இருக்கிறது. மீடு நிகழ்வுக்கு பிறகு இணையத்தில் உளவியல் ஆலோசனை அளிக்கும் கவுன்சிலிங் தளங்களுக்கான வரவேற்பு அதிகரித்திருப்பதாக அந்த கட்டுரை தெரிவிக்கிறது. 

மீடு நிகழ்விற்கு பிறகு, இணைய கவுன்சிலிங் தளங்களில் ஆலோசனை கேட்க முன்வரும் இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக இந்த கட்டுரை தெரிவிக்கிறது.

இணைய வழி உளவியல் ஆலோசனை வழங்கும் தளங்களில் ஒன்றான யுவர்தோஸ்ட் (YourDost) தளத்தின் இணைய நிறுவனர் ரிச்சா சிங், ஆலோசனை கேட்டு வருபவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்திருப்பதாக கூறியிருக்கிறார். 

பணியிடத்தில் பாலியில் சீண்டலுக்கு இலக்காவது பரவலாக இருந்தாலும், இது தொடர்பாக ஆலோசனை பெற முன்வருவது மீடு இயக்கத்திற்கு பின் அதிகரித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இணையம் மூலமான ஆலோசனையை வழங்கி வரும் ePsyclinic மற்றும் பெட்டர்லி (Betterly) தளங்களும் இதே போன்ற வரவேற்பை பெற்றுள்ளன. இது மிகவும் கவனிக்கத்தக்க போக்காகும். 

பொதுவாக இந்தியாவில் உளவியல் ஆலோசனை பெறுவது என்பது தயக்கத்திற்கு உரிய செயலாகவே இருக்கிறது. சமூக எதிர்வினை காரணமாக பலரும் வெளிப்படையாக உதவி பெற முன்வருவதில்லை. பாலியில் சீண்டலுக்கு இலக்கானவர்கள் அது பற்றி புகார் செய்ய முன்வருவதை கூட விட்டுவிடலாம், ஆனால் அதை பகிர்ந்து கொண்டு ஆலோசனை பெற கூட தயங்கும் நிலையே இருக்கிறது.

இந்த நிலையை மீடு இயக்கம் மாற்றியிருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. பணியிடத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் கசப்பான அனுபவங்கள் தொடர்பாக ஆலோசனை பெற முன்வரத்துவங்கியுள்ளனர். ஆனால் அவர்க்ள் எச்சரிக்கையாகவும் இருக்கின்றனர். 

”இந்த பிரச்சனை எல்லா இடங்களிலும் நடக்கிறது. ஆனால் பன்னாட்டு நிறுவனங்களில் ஒருவரும் இது பற்றி பேசுவதில்லை. இணைய ஆலோசனை பெற்ற பிறகு, மீண்டும் பணியாற்ற நான் உத்வேகம், ஆற்றல் பெற்றுள்ளேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த நிலை இல்லை,”

என ஆலோசனை பெற்ற பெண் ஒருவர் கூறியிருப்பதை இங்கே நினைத்துப்பார்க்க வேண்டும். நான் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை, ஆனால் என் சகஜ நிலை திரும்ப வேண்டும் என விரும்புகிறேன் என அவர் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டேன் என்று கூறி ஆலோசனை பெற்று தங்கள் இயல்பு நிலையை மீட்டுக் கொள்ளவே பெண்களுக்கு ஒரு உந்துதலும், உறுதி அளித்தலும் தேவைப்பட்டிருக்கிறது. மீடு இயக்கம் அதை அளித்திருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கும், வலியுடன் உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருப்பவர்களுக்கும் நிச்சயம் இந்த ஆதரவு தேவை. ஆக, MeToo இயக்கம் இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது.

மீடு இயக்கம் தொடர்பான வெளிபடுத்தல்களை புரிந்து கொள்ள கூகுளின் இந்த சேவை உதவும்: https://metoorising.withgoogle.com/