“இணையம், நமது தலைமுறையின் இடையீடு, அது கோடிக் கணக்கானோருக்கு தொழில்நுட்ப வசதியை தந்து வருகிறது”- மோகன்தாஸ் பை
கோடிக்கணக்கான மக்களுக்கு தொழில்நுட்பம், இதனைத் தொடங்குவதற்கு நல்வழி என்ன- “இன்றைய மிகப்பெரிய இடையீடு நடந்துகொண்டிருக்கிறது அது இணையம்.”
“எழுபது லட்சம் மக்கள் ஒருவருக்கொருவர் விரைவில் இணையத்தின் மூலம் இணைக்கப்படுவார்கள்” என்கிறார் டி.வி.மோகன்தாஸ் பை. 2015ம் ஆண்டின் ஆறாவது டெக் ஸ்பார்க்ஸ் நிகழ்வில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இன்று உலகத்துடன் தொடர்புகொள்ள உங்களுக்கு செல்போனோ, வைஃபையோ தேவையாக இருப்பதாகவும் அவர் கூறுகிறார். இன்றைய உலகம் உண்மையில் நசிந்து கிடக்கிறது. “செயற்கையான அறிவு மற்றும் எந்திரத்தனமான கற்றலும் உண்மையற்றவை அல்ல அல்லது கற்பனையல்ல” என்கிறார் பை.
காலம் காண காலக்கருவி
இன்னும் 10 ஆண்டுகளில் உலகம் மாறிவிடுவதை நாம் தெரிந்துகொள்வோம். காலத்தைப் பின்னோக்கிப் பார்க்கச் சொல்கிறார் மோகன்தாஸ் பை. உலகைப் பார்க்கவேண்டும் என்றால் இந்த இடையீடைப் புரிந்துகொள்ளவேண்டும் என்றால், வரலாற்றைப் பார்க்கவேண்டிய தேவை இருக்கிறது.
“சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு நாம் மனித உழைப்பை நம்பியிருந்தோம். பிரமிடுகள் மற்றும் மிகச்சிறந்த நினைவுச் சின்னங்களையும் மனித உழைப்பின் உதவியுடன் நாம் கட்டினோம்” என்று சொல்கிறார் மோகன்தாஸ் பை.
அடுத்து, நீராவி இயந்திர ஆற்றலின் சேணத்தின் திறனை திடீரென நாம் பெற்றிருந்தோம் என்று சுட்டிக்காட்டுகிறார். “சில விஷயங்களை சமாளிக்க ஒருவருக்கு 100 பேர் தேவைப்படுவார்கள்” என்கிறார். மேலும் மோகன்தாஸ் பை, இந்த உலகம் பல இடையீடுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார். அது வேகத்தைத் தந்திருக்கிறது.
வட்டாரங்களையும் வெளிகளையும் ரயில்வே இணைத்துவைத்திருக்கிறது. தொழில் புரட்சிக்கு அது வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. தொழிற்சாலைகள் கட்டப்பட்டும் வணிகம் வளர்ந்தது.
ஒரு பெரிய இடையீடு நடைபெறுகிறது
மோகன்தாஸ் பை சொல்வதைப்போல, இது ஒரு எளிய இடையீடு. அதுதான் இணையதளம். நம்முடைய தினசரி வாழ்வின் முக்கியமான பகுதியாக இருக்கிறது என்று கூறும் பை, ஒற்றை தளமான அது உலகின் பின்தங்கிய மூலை முடுக்குகளில் வசிக்கும் மனிதர்களையும் சேர்த்துவைத்துவிட்டது என்கிறார். தகவல்கள் கிடைக்கின்றன, வணிகம் இணைக்கப்படுகிறது, மனிதர்கள் எல்லோரும் பொதுவான சந்தைப் பகுதியில் இணைக்கப்படுகிறார்கள். இணையதளம் இன்று ஒரு பட்டனை அழுத்தினால் அறிவையும் தகவலையும் தருகிறது.
“இனிமேல், தகவலை அழுத்திவைத்திருக்கமுடியாது” டிவிட்டர் புரட்சிக்கு நன்றி சொல்லவேண்டும். இன்று தனி நபர்கள் அதிகாரம் பெற்றிருக்கிறார்கள்” என்று மோகன்தாஸ் பை உற்சாகத்துடன் கூறுகிறார். அது எல்லோருக்கும் குரலைக் கொடுத்திருக்கிறது.
உலகை இணைக்கிறது
மற்ற எண்ணற்ற தொழில்நுட்பத்திற்கும் கருவிகளுக்கும் இணையதளம் வளர்ச்சி, முன்னேற்றத்துக்கான வசதிகளைத் தருகிறது. மேலும், நுகர்வோர்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் இடையில் பல்வேறு அளவிலான வெளிப்படைத்தன்மையை திறந்து வைத்திருப்பதாக மோகன்தாஸ் பை நினைவு கூர்கிறார். உலக அளவில் கிடைக்கக்கூடிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை தெரிந்துகொள்வதால் வணிகத்துக்கான வழங்கல் வலைப்பின்னலை செம்மையாக வைத்திருக்கமுடிகிறது. “ எல்லோருமே இன்று அதிகாரம் பெற்றிருக்கிறார்கள்” என்கிறார் பை.
இன்று பனாராஸ் பட்டுப்புடைவையை உருவாக்கும் நெசவாளி, பெங்களூருவில் ஒரு வாடிக்கையாளரை எளிதாக தொடர்புகொள்ளமுடியும். பல ஆண்டுகளுக்கு முன்பு அது சாத்தியமில்லை. இந்த வசதி டொமைன்கள், கல்வி, நிதித்துறை, சந்தை மற்றும் உலகில் வேறுபட்ட அம்சங்களைப் பரப்புவதாக இருக்கிறது.
மாறிவரும் லைப் ஸ்டைல்
மோகன்தாஸ் கூறுவதைப் போல, நீண்ட வாழ்நாளுக்கு ஸ்டெம் செல்லைப் பயன்படுத்தும் ஆராய்ச்சி இனிமேல் கனவாக இருக்கிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்துவது எளிதாகிவிடும். இன்று தொழில்நுட்பம் உதவுவதுபோல வேறெந்த காலமும் இருந்ததில்லை.
“இணையத்தின் வசதியால் இடையூறுகள் ஏற்பட்டிருக்கின்றன. தொழி்ல்நுட்பத்தாலும் இணைப்பினாலும் புதுமைகள் சாத்தியமாகியிருக்கின்றன” என்று கூறுகிறார் மோகன்தாஸ் பை.