பேரம் பேசுவதை விரும்பும் இந்தியர்களை சாதுர்யமாக கவரும் 'கிராப் ஆன்'
இணைய தளத்தின் மூலமாக வியாபாரம் செய்து பெரும் சாதனை புரிந்த கிராப் ஆன், அபரிதமான வளர்ச்சி கண்டுள்ளது.
இணையம் வழியாக கூப்பன் வழங்கல் மற்றும் விற்பனைத் தொழில் புரியும் நிறுவனமான "கிராப் ஆன்" (GrabOn), முற்றிலும் புதிய நுட்பத்துடன் விற்பனையில் இறங்கியிருக்கிறது. சமீபத்தில் புஷ் மீ என்ற பெயரில் செல்பேசி மற்றும் டெஸ்க் டாப் வழியாக கவனம் ஈர்க்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய கவன ஈர்ப்பு, குமிழ் டெஸ்க்டாப்பில் தோன்றி பயன்பாட்டாளர்களின் கவனத்தைத் தனது புத்தம்புதிய கூப்பன் பக்கம் திருப்புகிறது.
கிராப் ஆனின் நிறுவனரும் முதுநிலை அதிகாரியுமான அசோக் ரெட்டி கூறுகிறார் "இந்த முறை எங்களது புதிய திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயன்பாட்டாளர்கள் தனிச்சிறப்புக் கூப்பன்களை கிராப் ஆனிடம் இருந்து நேரடியாக செல்பேசி வாயிலாகவும், வேலைத் தளங்களின் வாயிலாகவும் பெற்று வருகின்றனர். இந்த முறை எங்களது திட்டத்தின் மூலம் கிராப் ஆன் நியாயமான காலத்திற்குச் செல்லுபடியாகக் கூடிய கூப்பன்களை புத்தாக்க நுட்பத்தில் இரண்டு அடுக்குகளாக அறிமுகப்படுத்தியுள்ளது’’.
இந்தக் காலகட்டத்தில் இத்தகைய புத்தாக்க விற்பனைத் தளத்தை முதன் முதலாகத் துவக்கியது நாங்கள் தான் என்று கூறிக் கொள்ளும் கிராப் ஆன், இவ்வளவு விரைவான தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி மிகக் குறைந்த சந்தை விலையில் பொருளை வாங்குபவர்கள் எமது திட்டத்தின் இறுதி வாங்குனர்தான் என்கிறது. இதுவே கடைசி விற்பனை என்ற அடிப்படையில் ஒவ்வொரு விற்பனைக்கும் ஒரு விலை வைத்து விற்பனை செய்து பணம் ஈட்டிக் கொண்டுள்ளது.
விற்பனைத் துறையில் ஆகச் சிறந்த பொருளை பயன்பாட்டாளருக்குக் கொடுப்பதன் மூலம் வாடிக்கையாளர்களுடன் நிரந்தர உறவு ஏற்படுத்திக் கொள்வதில் தனது கவனத்தைக் குவித்திருப்பதாகக் கூறுகிறார் அசோக் ரெட்டி. அவரது விற்பனைப் பங்காளிகளும் அடிக்கடி தங்களது விற்பனை விலையை மாற்றிக் கொள்வதால் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு நாளும் ஒரே விலையை எதிர் பார்ப்பதில்லை என்கிறார்.
நேரடி விற்பனை உத்தியில் வியாபாரம் செய்கிற நாட்டின் மிகப்பெரிய இணைய விற்பனைதாரர் கிராப்ஆன். சந்தையில் உள்ள பெரும் கம்பெனிகளிடம் பொருட்கள் பெற்றுத் தருகிற 2000 உறவாளர்கள் தங்களிடம் இருப்பதாக கூறுகிறது கிராப் ஆன். கிராப் ஆனின் உறவாளர்கள் உபேர், பாய்டிம், ஃப்ரீ சார்ஜ், ஸ்னாப்டீல், ஃப்ளிப் கார்ட், ஜாபாங், ஸ்விக்கி மற்றும் மோபிவிக்.
வளர்ச்சித் தோற்றம்
லேண்ட் மார்க் ஐடி சொலுசன்ஸ் ஆதரவில் கடந்த ஆண்டு கிராப் ஆன் 250,000 அமெரிக்க டாலரை நிதியாகப் பெற்றுள்ளது. இத்தொகையை நிர்வாக அலுவர்களை அதிகரிக்கவும், உள் கட்டமைப்பை மேம்படுத்தவும், நுட்பத்திறனை விரிவுபடுத்திக் கொள்ளவும், வாடிக்கையாளர்களைக் கைப்பற்றும் விளம்பரங்கள் செய்வதற்கும் பயன்படுத்திக் கொள்ளவிருக்கிறது. கடந்த ஒன்றரை வருடங்களில் வாடிக்கையாளர்களின் வருகையும், வருமானத் தொகையும் எண்ணிக்கையளவில் குறிப்பிடத் தக்க அளவு உயர்ந்திருப்பதாக கூறுகிறது கம்பெனி நிர்வாகம்.
‘’எமது புதிய திட்ட அறிவிப்பினால் மாதந்தோறும் தனிச்சிறப்பு மிக்க நான்கு மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனை நிகழ்த்தியிருக்கிறோம். மாதத்திற்கு சுமார் 5.5 மில்லியன் கூப்பன்கள் பெறப்படும் என்றும் சுமார் 1.4 கோடி பக்கங்கள் பார்வையாளர்களால் பார்க்கப்படும் என்றும் எதிர்பார்க்கிறோம். மேலும் 2016 ஜூன் இறுதியில் 12 கோடி சாதனை அளவை எட்டப்படும் என்றும், டிசம்பர் 1.5 கோடியில் துவக்க முடியும் என்றும் எதிர்பார்க்கிறோம்’’ என்கிறார் அசோக்.
தொடர் திட்டங்களை உருவாக்கும் வேலையில் தான் ஈடுபட்டிருப்பதாகக் கூறினார் மேலும். நேரடி விற்பனை மற்றும் தொழில் நுட்ப விரிவாக்கத்திற்காக 15 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியாதாரத்தை எதிர்நோக்கி இருக்கிறார்கள். இத்தொகை இன்னும் இரண்டு மாதங்களில் கிடைத்து விடும் என்கிறார் அசோக்.
சந்தைப் போட்டி நிலவரம்
கூகுள் மற்றும் ஃபாரஸ்டர் ரிசர்ச் வெளியிடும் ஆன்லைன் விற்பனை தொடர்பான ஆண்டறிக்கைப்படி இந்திய ஆன்லைன் கூப்பன் விற்பனையில் கிராப் ஆன் 13.5% வளர்ச்சி பெற்றுள்ளது. 7.6 மில்லியன் தனித்த பயன்பாட்டாளர்களைப் பெற்றுள்ள இதன் இ- வணிக விற்பனை வளர்ச்சி விகிதம் 62.9 சதவீதம். (ஆதாரப்பூர்வ பதிவு)
ஒருங்கிணைந்த சந்தைவெளி மிகப்பிரமாண்டமானது. கம்பெனிகள் விற்பனை ஒருபுறம் இருக்க பல கட்டற்ற விற்பனையாளர்களும் கூப்பன்கள் விற்று வாடிக்கையாளர்களைக் கவர்கிறார்கள்.
கிராப் ஆன் ஒருங்கிணைந்த கூப்பன் விற்பனைத் துவக்கத்தைக் கண்டு கூப்பன் துனியா, 27 கூப்பன்ஸ், கூப்போனேசன், பென்னிஃபுல் அண்ட் கேஷ்கரோ என நீளும் பட்டியல் உடைய நிறுவனங்கள் சந்தையில் இறங்க இருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு டைம் இண்டர்நெட் லிமிட்டெட் கூப்பன் துனியாவைக் கைப்பற்றி இந்தப் பிரிவில் மிகப்பெரிய போட்டியாளராக விளங்குகிறது. கைப்பற்றலுக்குப் பின்னரும் இந்தத் துறையில் கிராப்ஆன் குறிப்பிடத் தக்க வளர்ச்சி கண்டுள்ளது. தற்போது பிரிக் அண்ட் மோர்டர் சில்லறை விற்பனையில் நுழைந்திருக்கிறது. செல்பேசி மற்றும் இணைய சாத்தியத்திற்கு இடையில் மாதத்திற்குப் 10 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டு சிறிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது கம்பெனி. தற்போது இத்திட்டத்தின் கீழ் 2000 ஆன்லைன் விற்பனை நிலையங்களையும், 5000 உணவகங்களையும் பட்டியலிட்டுள்ளது.
இந்தத் துறையில் மற்றொரு போட்டியாளரான கூப்போனேசன் கூப்பன் தளத்திற்கு ராக்ட் இண்டர்நெட் ஆதரவு வழங்குகிறது. நிறைய தள்ளுபடி வழங்கும் தனித்துவமான விற்பனையின் மூலம் கேஷ்கரோவும் சரிக்குச் சரியாகப் போட்டிக்கு நிற்கிறது.
பல்வேறு பிரிவினர் இத்துறையில் அளிக்கும் போட்டியை நாங்கள் ஏற்றுக் கொள்வதாகக் கூறும் அசோக் மேலும் கூறுகிறார் ‘’போட்டி வெளியில் மாற்றத்தைக் கொண்டுவர நாங்கள் கடுமையாக முயற்சிக்கிறோம். இரண்டாண்டு முயற்சியிலேயே எங்களால் மாதந்தோறும் ஒரு கோடிக்கும் மேலான பார்வையாளர்களை எட்ட முடிந்திருக்கிறது. போதிய நிதியாதாரத்துடனும், பொருத்தமான தொழில் நுட்பத்துடனும் விரைவில் நாங்கள் ஆன்லைன் விற்பனையிலும், நேரடி விற்பனையிலும் குறைந்த விலையில் விற்பவர்கள் என்ற வகையில் இந்தியாவில் மிகப்பெரிய இடத்தைப் பிடிக்கவிருக்கிறோம்’’ என்கிறார்.
இணையதள முகவரி: GrabOn