‘அசுரன்' தனுஷ், ‘சூப்பர் டீலக்ஸ்’ விஜய் சேதுபதி, ‘விசுவாசம்’ இமான் - தேசிய விருதுகள் அறிவிப்பு!
சிறந்த நடிகராக தமிழ் நடிகர் தேர்வு!
2019ம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. கொரோனா, லாக்டவுன் சூழல் என முடங்கிபோயிருந்த சினிமா உலகம் தற்போது தான் மீண்டு வருகிறது. இந்த நிலையில் தான் இந்த விருது அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பலருக்கு ஊக்கம் அளிக்கக்கூடியதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அசுரன் படத்தில் நடித்ததற்காக ‘சிறந்த நடிகராக' தனுஷ் தேசிய விருதுக்கு மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். தனுசுடன் மனோஜ் பாஜ்பாய் சிறந்த நடிகர் விருதை பகிர்ந்து கொள்கிறார். போன்ஷ்லே படத்திற்காக அவர் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். தமிழ் சினிமா பிரிவில் அசுரன் படம் சிறந்த தமிழ் படமாகவும்,
சிறந்த உறுதுணை நடிகருக்கான தேசிய விருதை ’சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்த விஜய் சேதுபதி பெற்றுள்ளார்.
’கேடி (எ) கருப்புதுரை’ திரைப்படத்தில் நடித்த நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ’ஒத்த செருப்பு’ படத்துக்கு சிறப்பு நடுவர் தேர்வு விருது அறிவிக்கப்பட்டுள்ளது
சிறந்த நடிகையாக சமீபகாலமாக சர்ச்சையில் சிக்கி வரும் கங்கனா ரணாவத் மணிகர்ணிகா மற்றும் பங்கா படத்தில் நடித்ததற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதேபோல் ஹிந்தி பிரிவில் இறந்துபோன சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளியான Chhichhore படம் தேர்வாகியுள்ளது.
சிறந்த இசையமைப்பாளர் பிரிவில் தமிழில் அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம் படத்திற்காக இசையமைத்த டி இமான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேசிய விருதுகள் பெற்ற மற்ற பிரிவுகள் விவரம் :
சிறந்த ரைட்டிங் - சஞ்சய்சூரி எழுதிய 'ஒரு காந்தியன் விவகாரம்' புத்தகத்திற்கு செல்கிறது
சிறப்புப் பிரிவு - பிரியாணி, ஜோனகி போருவா, லதா பகவன்கரே, பிகாசோ ஆகிய படங்களுக்கு கிடைக்கிறது.
சிறந்த ஹரியான்வி படம் - சோரியன் கோரன் சே காம் நஹி ஹோதி
சிறந்த தெலுங்கு படம் - ஜெர்சி
சிறந்த தமிழ் படம் - அசுரன்
சிறந்த மலையாள திரைப்படம் - கள்ளநோட்டம்
சிறந்த மராத்தி திரைப்படம் - பார்டோ
சிறந்த பெங்காலி படம் - கும்னாமி
ஸ்பெஷல் எபெக்ட்ஸ்- மரக்கையர் (மலையாளம்)
சிறந்த இசை - விசுவாசம் இசை அமைப்பாளர் டி.இமான்
சிறந்த எடிட்டிங் - தெலுங்கு திரைப்படம் ஜெர்சி-க்காக நவீன் நூலி என்பவர் பெறுகிறார்.
சிறந்த திரைக்கதை - அசல் திரைக்கதை - ஜ்யேஷ்டோபுட்ரோ;
தழுவிய திரைக்கதை - கும்னாமி
சிறந்த ஒளிப்பதிவு - ஜல்லிக்கட்டு படத்திற்காக கிரிஷ் கங்காதரன்
பிரபலமான படம் - மகரிஷி (தெலுங்கு)
சிறந்த திரைப்படம் மலையாளம் - பிரியதர்ஷன் இயக்கிய மரக்கையர் படம் பெறுகிறது.