மும்பை தொடக்கநிலை நிறுவனம் 'பாக்ஸ்8', 2 ஆண்டுகளில் 500 கோடி இலக்கை நோக்கி பயணம்!
கடந்த 12 முதல் 18 மாதங்களாக தேவை அடிப்படையிலான சர்வீஸ் விரைவான வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது. பிளம்பர், அழகுக்கலை நிபுணர்கள், டைலர்கள் மற்றும் ஓட்டுநர்கள் இணையம் மற்றும் ஆப்ஸ்கள் வழியாக உணவை ஆர்டர் செய்து சேவையைப் பெறுகின்றனர். நுகர்வு அதிகரிப்பும் செலவுமயமான வருமானம் மற்றும் பரபரப்பான வேலைகள் எல்லாம் இந்தியாவில் உணவுத் தயாரிப்புத் தொழில் வளர்வதற்கான ஊக்கமாக இருக்கிறது.
லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சமையல்காரர்கள் நியமனம் உள்பட உணவுத் தயாரிப்புத் தொழிலின் துணை பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தொடக்கநிலை நிறுவனங்கள் முயற்சி செய்கின்றன. நுகர்வோர் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவது தோல்வியடைந்த அனுபவமாக இருக்கிறது. மும்பையைச் சேர்ந்த பாக்ஸ்8 (BOX8) வெற்றிகரமான நிறுவனமாக இருந்தது. இந்த தேவை அடிப்படையிலான தொடக்கநிலை உணவு நிறுவனம் மூலப்பொருட்கள் தொடங்கி உணவுத் தாயரிப்பு மற்றும் விநியோகம் வரையிலான ஒவ்வொரு பிரச்சனைகளையும் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்தது. அதை அலுவலக நடவடிக்கைகள் மூலம் கையாண்டது பாக்ஸ்8.
மெக்சிகன் உணவுவகைகளை மட்டும் விரைவுச் சேவை மூலம் வழங்கும் பாஞ்சோ ( Poncho in 2011), 2011ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் உணவு வகைகள் அதிகரிக்கப்பட்டு பாக்ஸ்8 என்ற பெயரில் 2013 டிசம்பரில் ரீபிராண்ட் செய்யப்பட்டது.
பாக்ஸ்8, நிறுவனத்தின் துணை நிறுவனர் அன்சுல் குப்தா, “எங்களுடைய அணுகுமுறையில் எப்போதும் நுகர்வோருக்குத்தான் முதலிடம். எங்களுக்கு அமைந்துகொண்டதைத் தவிர, நாங்கள் உருவாக்கிய மதிப்புகொண்ட முழு நுகர்வோர் வலைப்பின்னல், நாங்கள் எப்படி 80 சதவிகீத வாடிக்கையாளர்களை திரும்பவும் பெறுகிறோம் என்பதற்கு அதுவே காரணமாகவும் இருக்கலாம்” என்று விளக்கம் அளிக்கிறார்.
பாக்ஸ்8 வளர்ச்சியும் பிரத்யேக விற்பனையும்
அன்சுல் மற்றும் அமித்ராஜ் ஆகிய இருவரின் எண்ணத்தில் உருவான பாக்ஸ்8, தற்போது மும்பையைச் சுற்றிலும் 2,500 ஆர்டர்களைப் பெறுகிறது. பலவகையான கிச்சன்களில் இருந்து உணவை திரட்டாமல், பாக்ஸ்8 அதன் டெலிவரி யூனிட்டில் உணவைத் தயாரிக்கிறது. அதனால் உணவின் பிரஷ்னெஸ் மற்றும் நம்பிக்கை உறுதிப்படுத்தப்படுவதாகக் கூறுகிறார் அமித்.
“முழு உணவுத் தயாரிப்பும் பல வகையான படிநிலைகளைக் கொண்டது. நிலைத்த தன்மை, அளவிடல் மற்றும் விநியோகத்தில் சிறந்த அனுபவம் ஆகியவை கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு அவுட்லெட்டுகளில் (காஸ் சமையலுக்கான தேவையில்லை) திறமையான சுதந்தரமான செயல்முறைகளின் மூலம் ஒவ்வொரு ஆர்டருக்கும் தரம் உறுதி செய்யப்படுகிறது”.
மற்ற திறன் சார்ந்த சுதந்திரமான பணிகள் பணிமனைகளில் நடத்தப்படுகின்றன. அனைத்து மூலப்பொருள் கொள்முதல்களும் மையப்படுத்தப்பட்டதால், தரத்தில் நிலைத்த தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் மாதந்தோறும் 25 முதல் 30 சதவிகிதம் வரையிலான வளர்ச்சியை பெறுவதாக அன்சுல் சுட்டிக்காட்டுகிறார்,
“இந்த வளர்ச்சியில் மிகவும் திருப்திகரமான விஷயம், இது முழுவதும் ஆர்கானிக். வாய்மொழி வழியாக கிடைத்த விளம்பரம்தான். தற்போது நாங்கள் எந்த விளம்பரப் பலகையோ, எந்தவித மார்க்கெட்டிங் உத்திகளையோ பயன்படுத்தவில்லை ”
சில பிரச்சனைகளும் உண்டு
உணவு தயாரிப்புத் தொழிலைப் பொறுத்தவரையில் உணவில் நிலையற்ற தன்மை, காலதாமதமான விநியோகம், ஆர்டரை சரியான இடத்தில் வைப்பதில் கசப்பான அனுபவம் ஆகியவை பொதுவான சவால்கள். பாக்ஸ்8 நிறுவனத்தில் முழு செயல்பாடுகளும் ஒவ்வொரு ஆர்டரின் ஒட்டுமொத்த மதிப்பையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன.
“நாங்கள் தொழில்நுட்பத்தை விரிவாகப் பயன்படுத்தி பல்வேறு செயல்முறைகளை பூர்த்தி செய்கிறோம். தற்போது ஒரு ஆர்டரின் முழு விவரங்களையும் அதாவது ஆர்டர் வரும் இடம் முதல் டெலிவரி செய்வது வரையில் கண்காணிக்கிறோம். அதற்காக ஒர் ஆப்ஸை அறிமுகப்படுத்தியுள்ளோம். அதன் மூலம் நுகர்வோர் முழு செயல்பாடுகளையும் பார்த்துக்கொள்ளமுடியும்” என்று கூறுகிறார் அன்சுல்.
தவறுகளை குறைக்கும் தகவல் ஆய்வு
பாக்ஸ்8 நிறுவனத்தின் ஆய்வுத் தகவல்கள் உணவுத் தயாரிப்பு மற்றும் விநியோக செயல்முறைகளை மேம்படுத்த பயன்படுகின்றன. அமித் விவரிக்கிறார், “தற்போது சேவையைப் பொருத்தவரையில் 0.5 சதவிகிதம் மட்டுமே தவறுகள் நடக்கின்றன. எதிர்வரும் நாட்களில் தவறுகளை பூஜ்யம் அளவுக்குக் குறைத்துவிடுவோம்".
பாக்ஸில் என்ன இருக்கிறது?
உணவு வகைகள் நுகர்வோர்களுக்குப் பிடித்தான வடிவத்தில், சிறந்த சுவையில் இருப்பது மாதிரியான தயாரிப்புகளையும் செயல்முறைகளையும் பாக்ஸ்8 வகுத்துவைத்துள்ளது.
அமித் கூறுகிறார், “எங்களிடம் வலிமையான சமையல் கலைஞர்கள் குழு இருக்கிறது. ஒவ்வொரு உணவும் சுவையிலும் மக்களைக் கவர்வதிலும் சிறந்து விளங்கவேண்டும் என்பதில் அவர்கள் உறுதி அளிக்கிறார்கள்.”
நல்ல தயாரிப்பும் குறைவாக சிந்தும் வாய்ப்பையும் பெற்ற நன்றாக வடிவமைக்கப்பட்ட பெட்டிகளில் உணவு டெலிவரி செய்யப்படுகிறது. குறைந்தபட்சம் பாக்ஸ்8 வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை ஆர்டர் செய்கிறவர்களாக இருக்கிறார்கள். எதிர்காலத்தில் மாதத்திற்கு எட்டு அல்லது பத்து முறை ஆர்டர் செய்ய முயற்சி செய்யப்பட்டுவருகிறது.
குழுவின் வடிவம், முதலீடு மற்றும் எதிர்காலத் திட்டங்கள்
இந்த நிறுவனத்தின் குழு 450 பேர்களுடன் செயல்படுகிறது. அதில் 50 பேர் பாக்ஸ்8 நிறுவனத்தின் முக்கிய அணி. ஐஐடியில் பயின்றவர்கள் மற்றும் ஐடிசி மற்றும் மேரியட் ஹோட்டல்களில் பணியாற்றிய சமையல் கலைஞர்கள் குழுவில் இடம்பெற்றிருக்கிறார்கள். எதிர்காலத்தில் புனே, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் மற்றும் டெல்லி ஆகிய ஐந்து முக்கிய நகரங்களில் பாக்ஸ் 8 கிளைகளை விரிக்க திட்டமிட்டிருக்கிறது.
இந்த ஆண்டின் மே மாதத்தில், முதல்கட்ட முதலீட்டை மேபீல்டு பார்ட்னர்ஸ் நிறுவனத்திடமிருந்து பாக்ஸ்8 பெற்றது.
அன்சுல் நிறைவாகப் பேசுகையில், "இன்னும் இரு மாதங்களில் எங்கள் முக்கிய குழுவை 50 பேரில் இருந்து 100 ஆக உயர்த்தப்போகிறோம். அதேபோல களப்பணியாளர்களையும் 8 லிருந்து 10 ஆக உயர்த்தப்போகிறோம்".
இந்த ஆண்டு இறுதிக்குள் 10 ஆயிரம் ஆர்டர்களை அடையும் இலக்கை வைத்திருக்கிறார்கள். கூடவே அடுத்த 18 மாதங்களில் 500 கோடி ரூபாய் அளவுக்கு வணிகத்தை (GMV) எட்டவும் ஆர்வம் வைத்திருக்கிறார்கள்.
யுவர் ஸ்டோரி கருத்து
உணவு என்பது இந்தியாவில் மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளதாக இருக்கிறது. நீங்கள் வளர்ந்து வரும் சந்தையைப் பார்த்தால், பல்வேறு வகையான பல பில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனங்கள் உணவுத் துறையில் இருக்கின்றன. இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்துவருகிறது. இந்த பிஸியான நிலையில், பணியாற்றும் ஊழியர்கள் உணவை ஆர்டர் செய்வது அந்த நேரத்திற்கான தேவையாக மாறிவிட்டது.
தற்போது இந்தியாவில் உணவு விநியோகத் துறையானது 1.6 பில்லியன் டாலர் அளவுக்கு மதிப்புள்ளது. ஆண்டுதோறும் 30 சதவிகித வளர்ச்சியை அடைந்துகொண்டிருக்கிறது. பாக்ஸ்8 நிறுவனத்தைத் தவிர, தொடக்கநிலை நிறுவனங்களான ஸ்பூன்ஜாய், பெங்களூருவை சார்ந்த ப்ரெஷ் மனு மற்றும் குர்கோனைச் சேர்ந்த எப்ஆர்எஸ்எச் உள்பட பல நிறுவனங்கள் சொந்த கிச்சன் வழியாக உணவுத் தொழில்நுட்பத்தை உருமாற்றியிருக்கின்றன.
ஸ்விக்கி, ரோட்ரன்னர் மற்றும் க்விக்லி போன்ற உணவு விநியோக நெட்வொர்க்குகளைவிட பாக்ஸ்8 உணவு விநியோகத்தில் சற்று மேலே இருக்கிறது, மூன்று வகையான மதிப்பீட்டு குழுவை (உணவு தயாரிப்பில் இருந்து விநியோகம் வரையில்) வைத்திருக்கிறது. முக்கியமாக, விநியோகம் மட்டுமே செய்யும் நிறுவனங்களைவிட சொந்தமாக உணவு தயாரிக்கும் தொடக்கநிலை நிறுவனங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. ஹைப்பர் லோக்கல் மற்றும் இ. காமர்ஸ் தவிர, உணவு தொழில்நுட்ப வெளியானது கவர்ச்சியானதாக இருக்கிறது.
இணையதள முகவரி: BOX8