Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

NDTV-யின் 99.5% பங்குகளைக் கைப்பற்றிய அதானி - அடுத்து செய்யப்போவது என்ன?

என்டிடிவிக்கான ஓப்பன் ஆஃபர் கடந்த திங்கட்கிழமை நிறைவடைந்ததை அடுத்து, அதானி குழுமம் அந்நிறுவனத்தின் 99.5 சதவீத பங்குகளை கைப்பற்றியுள்ளது.

NDTV-யின் 99.5% பங்குகளைக் கைப்பற்றிய அதானி - அடுத்து செய்யப்போவது என்ன?

Wednesday December 07, 2022 , 3 min Read

"

NDTV-க்கான ஓப்பன் ஆஃபர் கடந்த திங்கட்கிழமை நிறைவடைந்ததை அடுத்து, அதானி குழுமம் அந்நிறுவனத்தின் 99.5 சதவீத பங்குகளை கைப்பற்றியுள்ளது.

NDTV-யை தன் வசப்படுத்திய அதானி

என்டிடிவியின் 29.18 சதவீத பங்குகளை மறைமுகமாக வாங்கிய அதானி குழுமம், மேலும் 26 சதவீத பங்குகளை வாங்க திறந்த சலுகையை கடந்த நவம்பர் மாதம் 22ம் தேதி அறிவித்தது.

ஓபன் ஆபர் பங்கு விற்பனை மூலம், பங்குதாரர்கள் 5.3 மில்லியன் பங்குகளை அல்லது 31.78% இதுவரை பங்குகளை அதானி குழுமம் வாங்கியுள்ளது. செய்தி நிறுவனத்தில் 32.26 சதவீதத்தை வைத்திருக்கும் நிறுவனர்களான ராதிகா மற்றும் பிரணாய் ராய் ஆகியோரை விட இது 37.44 சதவீத பங்குகளை அதானி குழுமம் கைப்பற்றியுள்ளது. இதன் மூலமாக என் டிடிவியின் மிகப்பெரிய பங்குதாரராக அதானி குழுமம் மாறியுள்ளது.

அதானி வசமானது எப்படி?

கடந்த ஆண்டு, அதானி மீடியா வென்ச்சர்ஸ் லிமிடெட் (AMVL), குழுமத்தின் முதன்மையான அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் (AEL) கீழ் உள்ள ஊடகப் பிரிவான Quintillion Business Media Pvt Ltd (QBM) என்ற டிஜிட்டல் வணிகச் செய்தி தளத்தை வாங்கியது.

\"Adani\"

விஷ்வபிரதான் கமெர்ஷியல் பிரைவேட் லிமிட்டட் (VCPL) என்ற நிறுவனத்திடம் என்டிடிவியின் 29.18 சதவீத பங்குகளை வைத்துள்ள ஆர்.ஆர்.பி.ஆர். ஹோல்டிக் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கடன் வாங்கியிருந்தது. கடனை திரும்ப செலுத்த முடியாமல் போனாதால், 29.18 சதவீத பங்குகள் விஷ்வபிரதான் கமெர்ஷியல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் வசம் வந்தன.

இதனிடையே, அதானி மீடியா வென்ச்சர்ஸ் லிமிடெட் (AMVL) நிறுவனம், VCPL என்ற நிறுவனத்தின் 100% பங்குகளையும் ரூ.113.7 கோடிக்கு வாங்கியது. இதனையடுத்து, அதானி மீடியா வென்ச்சர்ஸ் லிமிடெட் துணை நிறுவனமாக VCPL மாறியது.

தடைகளை தகர்த்த செபி:

என்டிடிவியின் மேலும் 26 சதவீத பங்குகளை ரூ.493 கோடிக்கு வாங்கத் தயாராக உள்ளதாக அதானி மீடியா வென்ச்சர்ஸ் லிமிடெட் மற்றும் அதன் துணை நிறுவனமான விஷ்வபிரதான் கமெர்ஷியல் பிரைவேட் லிமிட்டட் ஆகிய நிறுவனங்கள் அறிவித்தன.

முன்னதாக என்டிடிவியில் 29.18% பங்குகளை கையகப்படுத்தும் நடவடிக்கை, தங்களுடன் எவ்வித பேச்சுவார்த்தையோ, என்டிடிவி நிறுவனர்களின் ஒப்புகையின்றியோ அதானி குழுமம் செய்துள்ளதாக என்டிடிவி அறிக்கை வெளியிட்டு இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

அடுத்து என்ன செய்யப்போவது என்ன?

என்டிடிவி இயக்குநர்களை விட அதிக பங்குகளை கொண்டுள்ள அதானி குழுமம் NDTV குழுவை மறுசீரமைக்க முன்மொழிய உரிமை உண்டு. இதற்காக, அதானி குழுமம் பங்குதாரர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும் மற்றும் குழுவில் புதிய இயக்குனர்களை முன்மொழிய வேண்டும். இந்த முன்மொழிவு பங்குதாரர்களால் வாக்களிக்கப்பட வேண்டும், இது 50 சதவீத பங்குதாரர்களின் அனுமதியை தீர்மானம் மூலம் பெற வேண்டும்.

மும்பையைச் சேர்ந்த ப்ராக்ஸி ஆலோசனை நிறுவனமான பங்குதாரர்கள் எம்பவர்மென்ட் சர்வீசஸ் நிர்வாக இயக்குநர் ஜே.என்.குப்தா கூறுகையில்,

\"என்டிடிவி நிறுவனர்கள் மற்றும் அதானி குழுமம் நிறுவனத்தின் சுமூகமான நிர்வாகத்தை உறுதிசெய்ய ஆர்வமாக இருந்தால் இணைந்து செயல்படுவதற்கான வழியைக் கண்டறிய வேண்டும்,” எனத் தெரிவித்துள்ளார்.
\"Adani\"

இயக்குநர்களை நியமித்தல், மூலதனம் திரட்டுதல் மற்றும் மறுசீரமைப்பு செய்தல், இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல், நிறுவனத்தின் பெயர் மற்றும் பதிவு செய்யப்பட்ட அலுவலகத்தை மாற்றுதல் ஆகியவை பங்குதாரர்களின் சிறப்பு தீர்மானங்கள் மூலமாக நிறைவேற்றப்பட வேண்டும். இங்கு, வாக்களிக்கும் பங்குதாரர்களில் குறைந்தது 75 சதவீதம் பேர் இதற்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

\"என்டிடிவியில் அதானி குழுமம் மிகப்பெரிய பங்குதாரராக இருந்தாலும், பங்குதாரர்களின் அடிப்படையில் ராய்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளார். மேலும் ராய் தம்பதிகளின் பங்குகள் அதிகமாக இருப்பதால் NDTV குழுவில் இயக்குநர்களாக நீடிக்கவும் முடியும்.”

அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி கடந்த மாதம் பைனான்சியல் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில், NDTV-யை சர்வதேச செய்தி பிராண்டாக மாற்ற விரும்புவதாகவும், பிரணாய் ராய் நிறுவனத்தின் தலைவராக நீடிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

ஒரு ஊடக நிறுவனம் சுதந்திரமாக மாறுவதற்கும் உலகளாவிய தடம் பெறுவதற்கும் உங்களால் ஏன் ஆதரிக்க முடியாது? என்டிடிவி வாங்குவதை ஒரு வணிக வாய்ப்பாகக் காட்டிலும் ஒரு பொறுப்பாகப் பார்க்கிறேன் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

loved this story\" contenteditable=\"false\" data-new-ui=\"true\" data-explore-now-btn-text=\"Explore Now\" data-group-icon=\"https://images.yourstory.com/assets/images/alsoReadGroupIcon.png\" data-pageurl=\"https://yourstory.com/tamil/ys-tamil-explainer-increasing-digital-transactions-leads-india-towards-cashless-society-economy-analysis\" data-headline=\"1529 people loved this story\">

"