கேன்ஸ் விழாவில் 'சிறந்த நடிகை விருதை வென்ற முதல் இந்திய நடிகர்' - வரலாறு படைத்த அனசுயா சென்குப்தா!
கேன்ஸ் திரைப்படவிழாவில் இந்திய நடிகை அனசுயா பென்குப்தா சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார். இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தும் முதல் இந்திய நடிகர் என்ற பெருமையைத் தட்டிச் சென்றுள்ளார் இவர்.
கேன்ஸ் திரைப்படவிழாவில் இந்திய நடிகை அனசுயா பென்குப்தா சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார். இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தும் முதல் இந்திய நடிகர் என்ற பெருமையைத் தட்டிச் சென்றுள்ளார் அனசுயா சென்குப்தா.
கேன்ஸ் திரைப்பட விழாவில் Un Certain Regard பிரிவுக்கான விருதுகள் வழங்கப்பட்டன அதில் 'ஷேம்லெஸ்' (Shameless) படத்தில் நடித்ததற்காக இந்த விருது அனசுயாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஷேம்லெஸ் படத்தில் பாலியல் தொழிலாளியாக அனசுயா சென்குப்தா நடித்துள்ளார். இந்தப் பாத்திரத்துக்காக அவர் தற்போது மதிப்பு மிக்க கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமை பெற்றார். இந்த படத்தை பல்கேரிய திரைப்பட தயாரிப்பாளர் கான்ஸ்டன்டைன் போஜனாவ் இயக்கியுள்ளார்.
டெல்லியில் போலீசாரைக் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடும் பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் படம் தான் ‘ஷேம்லெஸ்’. அவர் இந்த விருதை queer மற்றும் விளிம்புநிலையில் உள்ள சமூகங்களுக்கு அர்ப்பணித்தார்.
விருதைப் பெற்றுக் கொண்டு பேசிய அனசுயா,
“சமத்துவத்திற்காகப் போராட நீங்கள் வேறுபட்ட பாலியல், பாலின அடையாளங்களைக் கொண்டவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. காலனியாதிக்கம் கொடுமையானது என்பதை உணர காலனியாதிக்கத்தை நேரடியாக அனுபவிக்க வேண்டியக் கட்டாயமில்லை. இவற்றையெல்லாம் உணர நாம் மிக மிக நாணயமான மனிதர்களாக இருப்பது அவசியம்,” என்றார்.
தற்போது கோவாவில் வசிக்கும் நடிகை அனசுயா, மும்பையில் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணிபுரிந்தவர். நெட்ஃபிக்ஸ் நிகழ்ச்சியான 'மசாபா மசாபா'வின் செட் வடிவமைப்பில் அவர் பங்களித்தார். கொல்கத்தாவைச் சேர்ந்த அவர், ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் தனது கல்வியைத் தொடர்ந்தார். அவர் பெங்காலி இயக்குனர் அஞ்சன் தத்தின் ராக் மியூசிக்கல் ‘மேட்லி பங்காலி’ (2009)யில் அறிமுகமானார்.
அனசூயா மும்பைக்கு குடிபெயர்ந்தார். அங்கு அவரது சகோதரர் அபிஷேக் சென்குப்தா திரைப்படங்களில் பணிபுரிந்து கொண்டிருந்தார். இருப்பினும், மும்பையில் தனக்கென ஓர் இடத்தை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை, எனவே கலைத் துறையை நோக்கி நகர்ந்தார். சீன திரைப்பட தயாரிப்பாளர் ஹு குவான் இயக்கிய 'பிளாக் டாக்' படத்திற்கு கேன்ஸ் அன் செர்டெய்ன் ரிகார்ட் பரிசு வழங்கப்பட்டது.