Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

'வானமே எல்லை' - நிலவு, கோள் மற்றும் கிரகங்களைப் பார்க்க உதவும் ‘Starscapes'

குருகிராமைச் சேர்ந்த வானியல் சுற்றுலா ஸ்டார்ட் அப் நிறுவனம், ஸ்டார்ஸ்கேப்ஸ், வானியல் ஆய்வு, வானியல் புகைப்பட கலைக்கான தொழில்முறை உபகரணங்கள் கொண்ட தனியார் வானியல் மையங்களை அளிக்கிறது. வானியலை எல்லோருக்கும் கொண்டு செல்வதற்கான வானியல் நிகழ்வுகள், பயிலரங்குகளையும் அளிக்கிறது.

'வானமே எல்லை' - நிலவு, கோள் மற்றும் கிரகங்களைப் பார்க்க உதவும் ‘Starscapes'

Friday October 07, 2022 , 4 min Read

நம் எல்லோருக்கும், ஓவிய மேதை ’வான் கா’வின் ஸ்டாரி நைட் ஓவியம் போல எப்போதும் தோன்றச்செய்வது கடினம் தான். ஆனால், நம்மால் இரவு வானத்தை பார்த்து மெய் மறக்க முடியும். இளம் பால் சாவியோவும் அப்படி தான் இருந்தார்.

சிறுவனாக இருந்த போது பால் தனது தந்தையுடன் இரவு வானத்தை ரசித்த படி வளர்ந்திருக்கிறார். பெங்களூருவில் இருந்த போது, வானியல் மையத்திற்கு அடிக்கடி சென்று, நாசா மற்றும் இஸ்ரோ நடத்தும் நிகழ்வுகள், போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார்.

2010ல் கொல்கத்தா ஐஐஎம்- ல் பட்டம் பெற்ற பிறகு அவர் ஏர்டெல், நோக்கியா, சாம்சங்கில் பணியாற்றிவிட்டு, தனது ஈடுபாட்டின் அடிப்படையில் பொருள் ஈட்ட தீர்மானித்தார். 2015ல், பால் மற்றும் ரமேசிஷ் ராய் இனைந்து, வானியல் சுற்றுலா ஸ்டார்ட் அப் 'ஸ்டார்ஸ்கேப்ஸ்’ (Starscapes Experiences) துவக்கினர். இந்நிறுவனம், வானியல் மையங்களை நடத்தி வருகிறது.

“வர்த்தக வாழ்க்கையில் இருந்த போது, எங்கள் ஈடுபாட்டை வர்த்தகமாக மாற்றினோம். இதன் வாய்ப்பை கண்டறிந்து செயல்படுத்துவது உற்சாகம் அளித்தது. புதிய ஒன்றை உருவாக்கும் சாகசத்திற்காக விண்வெளி பக்கம் வந்தோம்,” என்கிறார் பால்.
வான்

ஒருங்கிணைந்த வானியல் அனுபவத்தை அளிப்பதில் கவனம் செலுத்தும் இந்தியாவின் முதல் மேடையாக நிறுவனம் விளங்குகிறது. வானியல் ஆய்வு, வானியல் புகைப்படக் கலைக்கான தொழில்முறை உபகரணங்கள் கொண்ட தனியார் வானியல் மையங்களை அளிக்கிறது.

இலக்கு வாடிக்கையாளர்களாக வானத்தை நோக்குவதில் ஆர்வம் கொண்ட எவரையும் கருதுகிறது.

குருகிராமை சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப்,. உத்தர்காண்டில் பொது மற்றும் தனியார் வானியல் மையங்களையும், தமிழகத்தின் ஊட்டியில் ஒரு மையத்தையும் கொண்டுள்ளது. ராஜஸ்தானின் ஜெய்பூரில் நடமாடும் மையம் கொண்டுள்ளது.

மகிந்திர குழுமத்தின் விருந்தோம்பல் பிரிவான கிளப் மகிந்திராவுடன் இனைந்து கோவா, புதுச்சேரி மற்றும் மட்கேரியில் இருப்பு கொண்டுள்ளது. இங்குள்ள விருந்தினர்கள் அருகே உள்ள ’ஸ்டார்ஸ்கேப்ஸ்’ மையங்களில் இரவு வானத்தை கண்டு ரசிக்கலாம்.

மேலும், உத்தர்காண்ட் மாநில சுற்றுலா வாரியத்துடன் இணைந்து அங்குள்ள பெனிடால் கிராமத்தை இந்தியாவின் முதல் வானியல் கிராமமாக உருவாக்கி வருகிறது.

சேவைகள்

இரவு நேர வான நிகழ்வுகள், வானியல் விருந்துகள், சூரிய நோக்குதல்கள், நட்சத்திரங்களுடன் செல்பி உள்ளிட்ட சேவைகளை நிறுவனம் வழங்குகிறது. இவற்றை நிறுவன வழிகாட்டிகள் அளிக்கின்றனர்.

வான்
“வானியல் அனுபவத்தை எல்லோருக்கும் அளிக்க விரும்புகிறோம். எல்லோரும் என்பது முக்கியமானது. வானியல் ஆர்வலர்கள் மட்டும் அல்லாது, அனைவருக்கும் அளிக்க விரும்புகிறோம். புதியவற்றை விரும்பும் எல்லோருக்குமானது,” என்கிறார் பால்.

அனைத்து மையங்களும், தொலைநோக்கிகள் மற்றும் தேவையான உபகரணங்கள் கொண்டுள்ளன. இவற்றில் வானியல் அருங்காட்சியகங்களும் உள்ளன. இவை மூலம், கண்காட்சிகள், விஆர் அனுபவங்கள் அளிக்கப்படுகின்றன.

நிறுவனம் தனது மையங்களில் பல்வேறு வகை அனுபவங்களை அளிக்கிறது. பகல் நேர காட்சிகள் ரூ.300-ரூ.500 வரை ஆகின்றன என்றால் இரவு நேர நிகழ்வுகள் ரூ.500 முதல் ரூ.800 வரை ஆகின்றன.

“நீங்கள் நிலவை பார்க்கலாம், கோள்களை தெளிவாகப் பார்க்கலாம், சனி கிரகத்தின் வளையங்களை, நிலவு போன்ற தோற்றம் கொண்ட வீனஸ் கிரகத்தை, நட்சத்திரங்கள் பிறப்பதற்கு 700 ஒளி ஆண்டுகள் முன் உருவான ஆரியான் நெபுலா போன்ற வானியல் பொருட்களையும் பார்க்கலாம்,” என்கிறார் பால்.

இந்த நிகழ்வுகளை, வரலாறு, அறிவியல், சூரிய மண்டல அமைப்புகள், கோள்கள் போன்றவற்றி பயிற்சி பெற்ற 25 ஊழியர்கள் அளிக்கின்றனர். இதில் பங்கேற்பவர்கள், நட்சத்திரங்கள் மற்றும் நட்சத்திர தொகுப்பை கண்டறியவும் பழகலாம்.

நிறுவனத்தை நாடி வர முடியாதவர்களுக்காக ஸ்டார்ஸ்கேப்ஸ் அவர்கள் வீட்டிற்கே உபகரணங்களுடன் வந்து இந்த அனுபவத்தை அளிக்கிறது. எனினும், பெருந்தொற்றுக்கு பிறகு இத்திட்டம் கைவிடப்பட்டது.

சிறுவர்களுக்காக ராக்கெட் செய்முறை, சூரிய கடிகாரம் அமைப்பது, விண்கள மாதிரிகள் செய்வது ஆகிய பயிற்சி அளிக்கப்படுகிறது. வானியல் மற்றும் புகைப்பட ஆர்வலர்கள் இதில் பங்கேற்கலாம். பத்தாயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

வான்

நிறுவனம் விடுதிகள் மற்றும் ஓட்டல்களுடன் இணைந்து வானியல் அனுபவத்தை வழங்கி வருகிறது. இந்த தொடர்புகள் மூலமான வாய்மொழி விளம்பரத்தால் வளர்ந்து வருகிறது.

“கிளப் மகிந்திரா நிறுவனத்துடன் கூட்டு வைத்துள்ளோம். அதன் ஆறு பெரிய ரிசார்ட்களில் சேவை அளிக்கிறோம். நான்கு பெரிய சர்வதேச விருந்தோம்பல் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்,” என்று பால் கூறுகிறார்.

"மேலும் பல சிறிய ஹோம்ஸ்டேக்கள், ஓட்டல்களில் எங்கள் நிகழ்வுகளை அளிக்கிறோம்” என்கிறார்.

நட்சத்திர நோக்கல், நட்சத்திர தொகுப்பு அறிதல், வானியல் புகைப்படக் கலைக்கான மூன்று மணி நேர வானியல் விருந்து நிகழ்வும் அளிக்கப்படுகிறது. இவற்றுக்கு ரூ.40,000 வரை கட்டணம் ஆகலாம். (போக்குவரத்து தனி). ஒவ்வொரு நிகழ்விலும், 30 பேர் பங்கேற்கலாம்.. இந்தியா முழுவதும் முக்கிய அடர் வான இடங்களில் அளிக்கப்படுகிறது.

குடியிருப்புகளுடன் இணைந்தும் நிகழ்வுகளை அளிக்கிறது. ஜெய்பூரில் உள்ள லட்சுமிபதி பல்கலை மற்றும் தில்லியின் சிவ் நாடார் பல்கலையுடன் இணைந்து செயல்படுகிறது.

பெருந்தொற்று காலத்தில் வர்த்தகம் பாதிக்கப்பட்டு 2021ல் மீண்டும் ஸ்டார்ட் அப் தனது செயல்பாடுகளை துவக்கியது. அதன் பிறகு,

ஸ்டார்ட் அப் 50 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்துள்ளது. 2021ல் முதல் பத்து மாதங்களில் ரூ.35 லட்சம் வருவாய் ஈட்டியது. அடுத்த 12 மாதங்களில் 11 மடங்கு வளர்ச்சி அடைந்து ரூ.3.8 கோடி வருவாய் எதிர்பார்க்கிறது.
வான்

வானியல் சுற்றுலா இந்தியாவில் சுற்றுச்சூழல் சுற்றுலாவின் ஒரு பகுதியாக உருவாகி வருகிறது. மத்திய சுற்றுலா அமைச்சகமும், இயற்கை சார்ந்த சுற்றுலா மூலம் ஆதரிக்கிறது. இந்த கருத்தாக்கம் அமைச்சகத்தின் இணைய தொடரில் முன்வைக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் மாநில கலை மற்றும் கலாச்சார துறையின் கீழ் வானியல் பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன. லடாக்கில், இந்திய வானியல் இயற்பிறல் கழகத்துடன் இனைந்து அரசு, ஹான்லே கிராமத்தில் வானியல் சுற்றுலாவை அறிமுகம் செய்துள்ளது.

இந்தத் துறையில் வானமே எல்லை என்பதால் மற்ற நிறுவனங்களும் நுழைந்து வருகின்றன. சென்னையச் சேர்ந்த ஸ்பேஸ் ஆர்கேட், தில்லியின் ஸ்பார்க் ஆஸ்ட்ரானமி ஆகியவை போட்டி நிறுவனங்களாக உள்ளன. எனினும், ஸ்டார்ஸ்கேப்ஸ் மட்டும் தான் வானியல் மையங்களை கொண்டுள்ளது.

Starscapes கூர்கில் புதிய மையம் அமைக்க உள்ளது, மேலும், ல்டாக், ஸ்பிடி பள்ளத்தாக்கு உள்ளிட்ட அடர் வான் இடங்களுக்கு சுற்றுலா திட்டத்தை மீண்டும் துவக்க உள்ளது. இவை பெருந்தொற்று காலத்தில் நிறுத்தப்பட்டன.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடனும் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளது. ரூ.20 லட்சம் ஆரம்ப முதலீட்டில் துவக்கப்பட்ட ஸ்டார்ஸ்கேப்ஸ், இந்த நிதியாண்டில் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. அடுத்த நான்கு மாதங்களில் ஊழியர் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்த உள்ளது.

“பல வர்த்தக மாதிரிகளை சோதித்து வருகிறோம். வானியல் ஆர்வம் கொண்ட முதலீட்டாளரையும் எதிர்நோக்குகிறோம்” என்கிறார் பால்.

ஆங்கிலத்தில்: அமிஷா அகர்வால் | தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan