Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

வெடிக்காத எல்பிஜி கேஸ் சிலிண்டர்: 100% பாதுகாப்பான ’Go Gas Elite' அறிமுகம்!

எடைக்குறைவான, 100% பாதுகாப்பான ப்ளாஸ்ட் ப்ரூஃப் கேஸ் சிலிண்டர்களை அறிமுகப்படுத்தியது தனியார் நிறுவனம்!

வெடிக்காத எல்பிஜி கேஸ் சிலிண்டர்: 100% பாதுகாப்பான ’Go Gas Elite' அறிமுகம்!

Monday May 13, 2019 , 2 min Read

கடந்த சில வருடங்களாகவே எல்பிஜி கேஸ் சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளதை செய்திகள் மூலம் நாம் பார்த்து வருகிறோம். அதிலும் பல சமயங்களில் மொத்த குடும்பமே அந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த சோகங்கள் நம்மை நடுங்கச்செய்வது உண்மையே. ஒவ்வொரு முறை புதிய கேஸ் வாங்கி வைக்கும் போதும், கேஸ் லீக் வாடை வந்தாலுமே சற்று பயந்து போகும் நமக்கு ஓர் நற்செய்தி வந்துவிட்டது.

வெடிக்காத 100 சதவீத பாதுகாப்பான கேஸ் சிலிண்டரை ‘Confidence Petroleum India Limited’ என்ற நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்தியது. Time Technoplast Limited என்ற பாலிமர் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து இந்த பாதுகாப்பான ‘Go Gas elite' 'கோ கேஸ் எலைட்’ என்ற வகை சிலிண்டர்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்தியா முழுதும் அறிமுகமான இந்த சிலிண்டர்கள் எடைக் குறைவான, ப்ளாஸ்ட் ப்ரூஃப் அதாவது 100% வெடிக்காத பாதுகாப்பானவை என்று confidence நிறுவனம் தெரிவித்துள்ளது

நிறுவன சிஇஒ மற்றும் எம்டி

மும்பையில் அறிமுகமான ‘கோ கேஸ் எலைட்’ சிலிண்டர்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது என்று நிறுவனத்தார் தெரிவித்துள்ளனர்.

கேஸ் லீக் சமயத்திலும் இவ்வகை சிலிண்டர்கள் வெடிக்காது என்றும், நெருப்பு சூழ்ந்தாலும் சிலிண்டர் வெடிக்காமல் 100% பாதுகாப்பாக இருக்கும் வீதம் வெளிப்பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

சாதாரண எல்பிஜி சிலிண்டர் வகைகள் 4-5 வருடங்கள் மட்டுமே பயன்பாடில் இருக்கும் என்றும், ‘கோ கேஸ் எலைட்’ சிலிண்டர்கள் 20 ஆண்டுகள் வரை பாதுகாப்பாக இருக்கும் என்பது கூடுதல் சிறப்பு. கோ கேஸ் சிலிண்டர்கள் ஃபைபரால் செய்யப்பட்டுள்ளதால் எடைக்குறைவாகவும், உள்ளுக்குள் எந்த அளவு கேஸ் இருக்கிறது என்பதை கண்காணிக்கும் வசதியோடும் இருப்பது பயனாளிகளுக்கு நிச்சயம் வசதியான விஷயம். என்ன இத்தனை சிறப்பு வசதிகள் இருப்பதால் இவ்வகை சிலிண்டர்கள் சாதாரண வகையை விட 20%-25% விலை அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.

இந்தியாவில் சுமார் 22 மில்லியன் மக்கள் எல்பிஜி சிலிண்டர்களை பயன்படுத்தி வருவதால் அதற்கான தேவை அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது. வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் பாதுகாப்பான கேஸ் சிலிண்டர்களுக்கு நிச்சயம் மக்களிடையே வரவேற்பு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கட்டுரை தொகுப்பு: இந்துஜா ரகுனாதன்