சிறந்த வணிக ஐடியாவுக்கு முதலீடு வேண்டுமா? ரூ.10 கோடி வரை வெல்லும் வாய்ப்பை தரும் ‘குபேரன் வீடு’

By YS TEAM TAMIL|21st Jan 2021
புதுமையான வணிக யோசனை கொண்டுள்ள தொழில் முனைவோர்கள் முதலீட்டாளர்களை அணுக வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்பதே Kuberan’s House நோக்கம்.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

தொழில்முனைவு முயற்சியில் ஈடுபட விரும்புபவர்களுக்கு தொழில் புரிவதில் ஆர்வம் இருப்பதுடன் சரியான வணிக யோசனையும் இருக்கவேண்டியது அவசியம். இவை தவிர முதலீட்டுக்குத் தேவையான நிதி திரட்டுவது மிகப்பெரிய சவாலாக மாறிவிடுகிறது.


இந்தியா முழுவதும் எத்தனையோ ஸ்டார்ட் அப் குழுக்கள் செயல்பட்டாலும்கூட இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இருப்பவர்களுக்கு மட்டுமே பெரும்பாலும் முதலீட்டாளர்களுடன் இணையும் வாய்ப்பு கிடைக்கிறது.


இது ஒருபுறம் இருக்க முதலீட்டாளர்கள், வென்ச்சர் கேப்பிடலிஸ்ட் போன்றோர் லாபகரமான, புதுமையான வணிக யோசனைகள் கொண்டுள்ள தொழில்முனைவோர்களின் வணிக முயற்சியில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.


தொழில்முனைவோர் சரியான முதலீட்டாளர்களுடன் இணைந்தால் மட்டுமே அவர்களது வணிக முயற்சியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும்.

1

இந்த இருவரையும் ஒன்றிணைக்கும் பாலமாக செயல்படுகிறது ‘Kuberan’s House’. சிறந்த வணிக யோசனை கொண்டுள்ள தொழில்முனைவோர்கள், முதலீட்டாளர்களை அணுக வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்பதே இந்த முயற்சியின் நோக்கம்.

இது ஒரு ரியாலிட்டி ஷோ. சோனு சூட் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி வணிக யோசனைகள் செயல்வடிவம் பெற உதவுகிறது.

இந்தியா முழுவதும் உள்ள சிறந்த, புதுமையான வணிக யோசனைகளை Kuberan’s House காட்சிப்படுத்துகிறது. Kuberan’s House இதுபோன்று செயல்படும் முதல் தளம் என்பது குறிப்பிடத்தக்கது.


சஞ்சீவ் கே குமார் (சிஇஓ மற்றும் இணை நிறுவனர்), ராம் கௌடா (நிர்வாக இயக்குநர் மற்றும் இணை நிறுவனர்), ரஞ்சித் ராயல் (இணை நிறுவனர்) ஆகிய மூவரும் இணைந்து Kuberan’s House நிறுவியுள்ளனர்.

கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய நெருக்கடியான சூழலை எதிர்கொள்ள உலகமே போராடிக் கொண்டிருந்த சமயத்தில் வெவ்வேறு பின்னணி கொண்ட இவர்கள் மூவரும் இணைந்து ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் பங்களிக்கும் வகையில் செயல்படத் தீர்மானித்தார்கள்.

கோவிந்த் பாலகிருஷ்ண ராஜு, ஸ்ரீனிவாஸ் வசந்தலா ஆகிய இருவரும் நிறுவனர்களுடன் இணைந்துகொண்டு நிறுவன செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகித்தார்கள்.

“Kuberan’s House மற்ற ஸ்டார்ட் அப்’களுக்காக செயல்படும் ஸ்டார்ட் அப். இந்தியாவில் எத்தனையோ ஸ்டார்ட் அப் குழுக்கள் செயல்பட்டாலும் எந்த ஒரு குழுவும் மற்ற ஸ்டார்ட் அப்களுக்கு உத்வேகம் அளிப்பதில்லை. Kuberan’s House இதுபோன்று செயல்படும் முதல் தளம். நாட்டின் மூலை முடுக்குகளில் இருப்பவர்களையும் இது சென்றடைகிறது. சிறியளவில் தொடங்கப்பட்ட ஒரு முயற்சி இன்று தேசிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்கிறார் Kuberan’s House நிர்வாக இயக்குநர் மற்றும் இணை நிறுவனர் ராம் கௌடா.

தன்னலமில்லாத நிஜ நாயகன் பாலிவுட் நடிகர் சோனு சூட் இந்நிகழ்ச்சியில் தொழில் முனைவோர்களையும் முதலீட்டாளர்களையும் இணைக்கும் புள்ளியாகச் செயல்படுகிறார்.

யார் இதற்கு விண்ணப்பிக்கலாம்?

நீங்கள் புதுமையான வணிக யோசனைகள் கொண்ட தொழில்முனைவரா? உங்களுக்கு முதலீடு தேவைப்படுகிறதா? அப்படியானால் உங்கள் ஸ்டார்ட் அப் கனவு நனவாக நீங்கள் அணுகவேண்டிய சரியான தளம் Kuberan’s House.


இந்தத் தளத்திற்காக பெறப்படும் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு முன்னணி 500 ஸ்டார்ட் அப்கள் Kuberan’s House ‘ஹால் ஆஃப் ஃபேம்’ பட்டியலில் இணைக்கப்படுவார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் Kuberan’s House ஃபெலோஷிப் சான்றிதழ் வழங்கப்படும்.


பின்னர் இதிலிருந்து 100 ஸ்டார்ட் அப்’கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள் மூன்று நாட்கள் முழுமையான பயிற்சியில் பங்கேற்பார்கள். கார்ப்பரேட், நிதி, ஸ்ட்ராடெஜி, சார்டர்ட் அக்கவுண்டிங், நிதி மேலாண்மை, சட்டம் உள்ளிட்ட தொழில்முறை வல்லுநர்கள் அடங்கிய குழு தலைமையில் இந்த பட்டறை நடைபெறும். தொழில்முனைவோர் முதலீட்டாளர்களுடன் வெற்றிகரமாக இணைவதற்கு உதவும் வகையில் ஒவ்வொரு அம்சங்களிலும் இதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

இறுதியாக தேர்வு செய்யப்படும் 60 ஸ்டார்ட் அப்கள் Kuberan’s House நிகழ்ச்சியில் இடம்பெறுவர். இந்நிகழ்ச்சி மொத்தம் 15 எபிசோட்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு எபிசோடிலும் மூன்று வணிக யோசனைகள் காட்சிப்படுத்தப்படும்.

வழக்கமான ரியாலிட்டி ஷோக்கள் போன்று இதில் வெற்றியாளர்கள், தோல்வியடைந்தவர்கள் என அடையாளப்படுத்தப்பட மாட்டார்கள்.

குபேரன்

இந்தத் தொடரில் சிறந்த வணிக யோசனைகள் முன்வைக்கப்பட்டு அதன் மூலம் நாட்டின் முன்னணி முதலீட்டாளர்களின் கவனம் ஈர்க்கப்படும். இதில் 10 கோடி ரூபாய் வரை நிதி பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

இந்தியாவின் மிகச்சிறந்த, பிரபலமான முதலீட்டாளர்கள் தொழில் முனைவோர்களின் வணிக யோசனைகளை ஆய்வு செய்து 10 லட்ச ரூபாய் முதல் 10 கோடி ரூபாய் வரை முதலீடு செய்வார்கள்.

தனித்துவம்

இந்தியாவில் பொழுதுபோக்கு சானல் ஒன்றில் இதுபோன்ற நிகழ்ச்சி நடத்தப்படுவது இதுவே முதல் முறை. ’மேக் இன் இந்தியா’ திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் இதில் பங்கேற்கும் ஸ்டார்ட் அப்’களின் தொழில் கனவு நனவாகத் தேவையான நிதியும் வழிகாட்டலும் வழங்கப்படும்.


தேசிய தொலைக்காட்சியில் இடம்பெறுவதற்கு ஸ்டார்ட் அப்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு ஆகும்.


  • குபேரன் ஹவுஸ் தளத்தைச் சேர்ந்த இன்குபேஷன் மற்றும் ஆக்சலரேட்டர் நிபுணர்களை அணுகுவதற்கு முன்னணி 500 பங்கேற்பாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.


  • பல்வேறு துறைசார் நிபுணர்கள் அடங்கிய குழு அளிக்கும் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்க முன்னணியில் இருக்கும் 100 பேருக்கு வாய்ப்பு கிடைக்கும்.


  • இறுதியாக தேர்வு செய்யப்படும் 60 விண்ணப்பதாரர்களுக்கு சர்வதேச அளவில் இணைப்புகளை ஏற்படுத்திக்கொள்ள பயிற்சியளிக்கப்படும்.


குபேரன்’ஸ் ஹவுஸ் நிகழ்ச்சியில் பங்குபெற விண்ணப்பிக்க கடைசி தேதி 31ம் தேதி ஜனவரி 2020: kuberan's house


ஆங்கிலத்தில்: யுவர்ஸ்டோரி குழு | தமிழில்: ஸ்ரீவித்யா