நிர்வாகப் பணியை உதரிவிட்டு இயற்கை விவசாய உணவு சந்தை பக்கம் திரும்பிய ஜிதேந்தர் சேங்வான்
சரியான நேரம், காலம் மற்றும் காரணம் அமைந்தால் மட்டுமே நீங்கள் எதிர்ப்பார்த்த விஷயம் நடக்கும் என்று சொல்வார்கள். ஜிதேந்தர் சேங்வான் வாழ்க்கையும் அப்படியே. ஐசிஐசிஐ லொம்பார்ட், அவிவா உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களில் தன்னுடைய பாதை வெற்றிகரமாக சென்று கொண்டிருந்தாலும் ஒரு வெறுமை வாழ்வில் இருப்பதை அவர் உணர்ந்தார். அதனால் சுயமாக ஏதாவது செய்யலாம் என்று நினைத்தார், ஆனால் எதில் கவனம் செலுத்துவது என்ற குழப்பம் இருந்தது அவருக்கு. அப்போது தான் குருஷேத்ரா மாவட்டத்தில் (ஹரியானா) உள்ள தன் சொந்த கிராமமான தொல்-க்கு சென்றார். அங்கு சென்ற பின்னர் தான் ஏன் விவசாயத்தை தொடங்கக் கூடாது என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியது.
ஒவ்வொரு முறையும் நான் தொல்லுக்கு செல்லும் போது விவசாயிகள் மகிழ்ச்சியின்றி இருப்பதைக் கண்டுள்ளேன். விவசாயிகள் தங்களின் வாரிசுகளை விவசாயம் செய்ய அனுமதிப்பதில்லை ஏனெனில் அதற்கு நல்ல எதிர்காலம் இல்லை என்பது அவர்களின் கருத்து என்கிறார் ஜிதேந்தர். இது பற்றி பல வகையிலும் யோசித்து, மாற்று வழியில் விவசாயத்தை செய்து பார்க்கலாம் என்று அவர்களை மனமாற்றம் செய்ய நினைத்தார். அப்போது தான் அவருக்கு இயற்கை விவசாயம் பற்றிய எண்ணம் தோன்றியுள்ளது.
அனைவரையும் உள்ளடக்கிய முற்றிலும் புதிய உலகம்
விவசாயம் செய்யும் ஆர்வம் இருந்தாலும் ஜிதேந்தருக்கு ஒரே ஒரு பிரச்சனை தான் இருந்தது, அது விவசாயத்தில் அவருக்கு அனுபவம் இல்லாததே. அவரின் தந்தை ஐஏஎஃப் அதிகாரி, ஜிதேந்தர் இளநிலை படிக்கும் முன் கேந்திரய வித்யாலாயா பள்ளிகளில் பயின்றார். அதைத் தொடர்ந்து பூனேவில் உள்ள சிம்பயாசிசில் எம்பிஏ படித்தார், இதுவே அவருடைய வாழ்வில் கார்ப்பரேட் பாதையை நோக்கி செல்ல காரணம். “நான் வேலையை விட்டுவிட்டேனா என்பதில் என் பெற்றோருக்கு சந்தேகம் இருந்தது. அது மட்டுமல்ல, நான் மின்சாரம் மற்றும் இணையதள வசதிகளை மறந்து ஒரு கிராமத்தில் வசிக்கப் போகிறேனா என்பதும் அவர்களின் ஐயம்” என்கிறார் அவர். அவர்களை நம்ப வைக்க நெடுங்காலம் ஆன போதும் அவர்களின் ஆதரவு எப்போதும் ஜிதேந்தருக்கு இருந்தது. ஏனெனில் மனோரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் அவர் மிகுந்த நம்பிக்கையோடு இருந்தார்.
நவம்பர் மாதம் 2013ம் ஆண்டு அனுபல் அக்ரோ ப்ராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்டை 1 லட்ச ரூபாய் முதலீட்டில் தொடங்கினார் ஜிதேந்தர். குருஷேத்ராவில் உள்ள தன்னுடைய சொந்த நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து, அந்த பொருட்களை டெல்லி/என்சிஆரில் உள்ள வீடுகளுக்கே கொண்டு சேர்ப்பது தான் இதன் குறிக்கோள். பாரம்பரிய முறையில் பூச்சிக்கொள்ளிகள் மற்றும் ரசாயனம் கலந்தே விவசாயம் செய்யப்பட்டு வருவதால் இயற்கை முறை விவசாயம் தொடர்பான தகவல்களைத் திரட்டுவது அவருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. எனினும் சீரான வளர்ச்சி கண்டு வருவதை ஜிதேந்தர் உணர்ந்தார், அதற்கான நேரமும் கூடி வந்தது, அனுபல் பொருட்களை அறுவடை செய்து டெல்லி மற்றும் என்சிஆர் பகுதி மக்களுக்கு விற்பனை செய்தது. அனுபல் அக்ரோவின் நோக்கமே இந்தியாவில் இயற்கை முறை விவசாயத்தை முன் எடுத்துச் செல்வதே. அதே போன்று செயற்கை உரங்களான ரசாயனங்கள், ஊக்க மருத்துகள் மற்றும் பூச்சிக்கொள்ளிகள் இல்லாமல் இயற்கையான முறையில் வளர்ச்சியை அதிகரிக்க உதவுவதே இதன் நோக்கம். தங்களின் வாடிக்கையாளர்களுக்கு நிலையான இயற்கை முறை உணவு பொருட்களை கொடுக்கவே விரும்புகிறார் அவர். விவசாயிகளும் தாங்களாகவே இயற்கை முறை விவசாயத்திற்கு மாற வேண்டும் என்றும் ஜிதேந்தர் வலியுறுத்துகிறார்.
பண்ணை முதல் சாப்பிடும் மேஜை வரை இயற்கை முறையிலேயே
மரபுவழி விவசாயகிள் மண்டி விலை, பூச்சிக்ககொள்ளி விலையையே பெரிதும் சார்ந்திருக்கும் நிலை உள்ளது. எனினும் இந்தியாவின் நகர்ப்புறவாசிகள் இயற்கை வழி விவசாயத்தை நல்ல முறையில் எடுத்து செல்கின்றனர். இயற்கை உணவு பொருட்களே ஆரோக்கியமானது என்பதால் அதையே விரும்புகின்றனர். பக்கவிளைவுகளை ஏறப்டுத்தும் பழைய முறையில் இருந்து இயற்கை விவசாயத்திற்கு மாற விவசாயிகளை வலியுறுத்தி வரும் ஜிதேந்தர், அவர்களுக்கு இலவசமாக விதைகளை அளிப்பதோடு, இம்முறை விவசாயம் சார்ந்த ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.
தொடக்க காலங்களில் உற்பத்தி குறைவாக இருந்த போது லாபத்தை சரிசெய்ய தங்களின் சொந்த நிதியில் இருந்து சந்தை விலையை விட 10 சதவீதம் கூடுதலாக கொடுத்தாகக் கூறுகிறார் ஜிதேந்தர்.
எங்கள் போட்டியாளர்களை விட நாங்கள் 20-30% குறைவாக விற்பனை செய்தோம் என்கிறார் அவர். நாங்கள் இடைத்தரகர்கள், சில்லறை விற்பனையாளர்களுக்கு அதிக கமிஷன் கொடுப்பதில்லை அதே போன்று பொருட்களுக்கான விலையை அதிகரிக்கும் விளம்பரங்களும் செய்யவில்லை என்பதால் இதன் பயன் வாடிக்கையாளர்களை நேரடியாக சென்றடைகிறது என்று சொல்கிறார். இதனால் விதைக்காக செலவு செய்வது, விவசாயிகளுக்கு தகவல்களை அளிப்பது மற்றும் இயற்கை விவசாய முறையில் பயிர் செய்ய அவர்களை ஊக்குவிப்பது போன்ற காரியங்கள் இலகுவாகிவிட்டது என்பதும் அவரின் கூற்று. இயற்கை விவசாயம் செய்ய விரும்பும் விவசாயிகளுடன் நாங்கள் 10 ஆண்டு ஒப்பந்தம் போட்டுள்ளோம், அதோடு அவர்களின் நிலத்தை எங்கள் உரிமத்தின் கீழ் செயல்படுத்துகிறோம் என்று விளக்குகிறார் ஜிதேந்தர்.
அனுபல் பல்வேறு தானியங்களை விளைவித்து, பதப்படுத்தி பின்னர் அவற்றை உணவுப் பொருட்களாக பேக் செய்கிறது. கோதுமை, முழுகோதுமை மாவு, பாஸ்மதி அரிசி, அரிசி மாவு, முழு கருப்பு உளுந்து, சர்க்கரைவள்ளிகிழங்கு மற்றும் தாளியா(உடைத்த கோதுமை) ஆகியவை இதில் அடங்கும். இதில் சுவாரஸய்மானது என்னவென்றால் அனுபல் கியோஸ்கிகள் மூலம் வார இறுதிகளில் பல்வேறு சமூக மக்களுக்கும் நேரடியாக பொருட்களை விற்பனை செய்கிறது. அவர்களுக்கு நிரந்தர ஊழியர்கள் கிடையாது ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் தற்காலிக ஊழியர்களை ஒப்பந்த முறையிலேயே வைத்திருக்கின்றனர்.
வார இறுதியில் விற்பனை நிலவரம்: பருப்பு வகைகள்: 2-3 குவிண்டால்கள், உருளைக்கிழங்குகள்: 4-5 குவிண்டால்கள், அரிசி: 2-3 குவிண்டால்கள், கோதுமை மாவு: 5-6 குவிண்டால்கள், அரிசி மாவு: 1-2 குவிண்டால்கள் மற்றும் தாளியா: 50 கிலோ- 1 குவிண்டால்.
மாற்றத்திற்கான முகவர்கள்
“மரபுவழி விவசாயத்தை நாங்கள் முற்றிலுமாக மாற்றியுள்ளோம், அதே போன்று இடைத்தரகர்கள் இல்லாமல் எங்கள் தயாரிப்புகளை ஏஎன்எம் முறையில் நாங்களே விற்பனை செய்கிறோம். இந்திய விவசாயிகள் இதுபோன்றதொரு திட்டத்தை நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர், ஆனால் அரசாங்கம் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதரவு இல்லாமல் இதை முன்னெடுத்துச் செல்வது கடினம்” என்று விவரிக்கிறார் ஜிதேந்தர். “இயற்கை வழி விவசாயத்தின் பக்கம் நடுத்தர வர்க்கத்தினரின் கவனத்தை திருப்பி வருகிறோம், நாங்கள் மக்களிடமும் விவசாயிகளிடமும் இது பற்றி அதிக அளவில் கலந்துரையாடுகிறோம், தேவைப்படும் பட்சத்தில் அவர்களை எங்களது விளைநிலங்களுக்கு அழைத்து சென்று விளக்கம் அளிக்கிறோம். இதற்கு முன்னர் இது போன்ற வழிமுறைகளை யாரும் பின்பற்றியதில்லை என்று நாங்கள் நினைக்கிறோம். இந்திய விவசாயத்துறையில் இது மாற்றத்தை ஏற்படுத்தும், அதோடு விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதோடு தொடர்ந்து விவசாயத்தை அடுத்த சந்ததியினரும் தொடர வழிவகுக்கும்” என்பது ஜிதேந்தரின் கருத்து.
இந்திய விவசாயத் துறையின் தற்போதைய நிலைமையில் விவசாயிகள் தற்கொலை தொடர் கதையாகி வருகிறது. அப்படி இருக்கும் நிலையில் தங்களுடைய நிலத்தில் பொருட்களை தயாரித்து சொந்த பிராண்டுகளில் விற்பனை செய்வது முடியாத காரியம், இதற்கு நிதியுதவியும் அரசின் ஆதரவும் கட்டாயம் தேவை. அனுபல் போன்ற நிறுவனங்கள் விவசாயிகளின் திறமையை ஊக்கப்படுத்தி அவர்கள் அதிக அளவில் இயற்கை விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. அதே போன்று பெரிய நிறுவனங்கள் விவசாயிகளை நேரடியாகத் தொடர்பு கொண்டு இது போன்ற திட்டங்களில் முதலீடு செய்வதற்கான சாத்திய கூறுகளையும் ஆராய்ந்து வருகிறது இந்நிறுவனம்.
விரிவாக்கத் திட்டம்
80 சதவீதத்திற்கு அதிகமான ஆர்டர்கள் திரும்ப வாங்கப்படுவதால், அனுபல் அக்ரோ தங்களது பொருட்களை ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு வருகிறது. இந்தியாவிற்குள் மற்ற பெருநகரங்களான மும்பை, பெங்களூரு, பூனே, ஐதராபாத் மற்றும் கொல்கத்தாவில் இதை விரிவுபடுத்த உள்ளனர். நூடுல்ஸ், பாஸ்தா, ஜுஸ்கள் மற்றும் மசாலா பொருட்களின்றி இயற்கை முறையில் பதப்படுத்தப்பட்ட உணவுகளான கான்பிளேக்சுகள் மற்றும் இதர காலைநேர சிற்றுண்டி தானியங்களையும் அறிமுகம் செய்ய உள்ளனர். 2016ம் ஆண்டிற்குள் 50 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டும் நோக்கத்தில் அனுபல் அக்ரோ செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.