உழைப்பின்றி ஊதியம் இல்லை; சிறந்த திட்டமின்றி செல்வம் இல்லை!
பணம் சம்பாதிப்பது என்பதே ஒரு கடினமான செயல், அதிலும் அதை நிர்வகித்தல் என்பது கடினம் மட்டுமல்லாமல் மிகவும் முக்கியமானதும் கூட. உங்கள் சிரமத்தை குறைக்க இலக்குகளை எளிதாக அடைய தனிப்பட்ட நிதித் திட்டம் இருத்தல் நல்லது.
டென்னிஸைப் பின்பற்றுபவர்களுக்கு இது நன்கு தெரியும், அதாவது டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் கடந்த மாதம் லண்டன் நீதிமன்றத்தில் அவர் திவாலாகிப் போனதாக அறிவிக்கப்பட்டது. ஒரு சமயத்தில் அவரோடைய சொத்து மதிப்பு 140 மில்லியன் டாலராகும். ஆனால் தற்பொழுது வெறும் பூஜ்யம்.
சிறந்த ஆற்றல் பெற்ற அவருக்கு இந்த நிலைமை ஏற்படக் காரணம் ஒன்று தான்; அதாவது முறையான திட்டம் இல்லாததே ஆகும்.
எல்லா வெற்றிகரமான முதலீட்டுக்கும் லாபம் மற்றும் கடனுக்கான ஒதிக்கீடு தேவை. அப்படி இருந்தால் மட்டுமே ஏற்ற இறக்கத்திலும் வெற்றியை காண முடியும். பெக்கரின் சம்பவத்தில் கூட இவை தான் நடந்து இருக்கும்; அதாவது திட்டம் இடுத்தல் மற்றும் முறையாக செலவு செய்தல், இவ்விரண்டையும் பெக்கர் நழுவ விட்டு இருப்பார். ஒருவேளை ஒரு திட்டத்துடன் ஒத்திசைவில் இல்லாத விஷயங்களை கூட அவர் செய்து இருக்கலாம்.
இந்த அதிர்ஷ்டமற்ற சூழலில் இருந்து நாம் தெரிந்து கொண்டது என்ன?
• கடின உழைப்பால் மட்டுமே பணம் ஈட்ட முடியம், இதில் எந்த ரகசியமும் இல்லை; ஒவ்வொரு வெற்றிகரமான நபர் தனது வாழ்க்கையில் எவ்வளவு கடினமாக உழைத்தார்கள் என அவர்கள் உணராமல் இல்லை. வெற்றிக்கு குறுக்கு பாதை என்று ஏதும் இல்லை. உலகமெங்கும் பல இடங்களில் டென்னிஸ் விளையாடி உழைத்து செல்வம் சேமித்தார் பெக்கர்.
• சரி! பணம் சேமித்துவிட்டோம், ஆனால் இதோடு நம் வேலை முடியவில்லை. எதிர்காலத்தில் தேவையான குறிக்கோள்களை அடைய உதவுவது மட்டுமல்லாமல் வளரும் என்பதை உறுதிப்படுத்த செல்வத்தை நிர்வகிப்பது மிகவும் முக்கியம்.
• ஒரு சிறந்த நிதி திட்டத்தை போட தீவிரமான சிந்தனை, நேரம் மற்றும் முயற்சி தேவை! ஒரு திட்டத்தை உருவாக்கினால் மட்டும் போதாது இறுதி வரை அதன் படி நடக்க வேண்டும்.
பெக்கர் இதில் முதல் புள்ளியில் வெற்றி அடைந்தார் ஆனால் அடுத்த இரண்டு புள்ளிகளில் தவறவிட்டார். இது அவர் திவாலானதுக்குக் காரணமாக அமையலாம். நம்மால் நிச்சயம் சொல்ல முடியாது நாளை இந்த நிலைமை உங்களுக்கும் ஏற்படலாம்.
சரி! அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
1. வாழ்க்கையில் நாம் கொண்டுள்ள இலக்குகளை அடையாளம்காண வேண்டும்
2. அந்த இலக்கை அடைய முறையான திட்டமிட வேண்டும்
உங்கள் நிதி இலக்குகள் என்ன?
முதலில் சுலபமான கேள்விக்கு விடை காணுவோம். உங்கள் செல்வம் வளர வேண்டுமா? இதற்கான பதில் ஆம் என்று தான் இருக்கும். அதேபோல் அதற்கு ஏன் என்று காரணம் கேட்டால் கூட நம் இடத்தில் பலக் காரணங்கள் இருக்கும்; அதாவது கார் வீடு வாங்க வேண்டும், வேலை ஓய்வுக்கு பிறகு சிறந்த விடுமுறைக்கு செல்ல வேண்டும் என்று பல காரணங்கள். இவை அனைத்தும் நியாயமானவை தான். நிதி இலக்குகளாக தகுதிபெறும் இவை அனைத்தும் நல்ல பதில்கள் தான்.
ஒவ்வொரு இலக்கும் கொள்கையும் உங்கள் வாழ்க்கை பயணத்தின் வெவ்வேறு புள்ளிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதாவது சிறந்த விடுமுறை பயணம் இந்த வருடம் நடக்காலம், சொந்த வீடு கனவு அடுத்து 5 ஆண்டில் நிறைவேறலாம், இவை எல்லாம் உங்களின் தற்போதய சம்பாத்தியம் பொருத்தது. ஆகவே உங்கள் இலக்கை இரண்டாக பிரிக்காலம்; ஒன்று உங்கள் இலக்கை அடைய உங்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும் அடுத்து அதை சம்பாதிக்க எவ்வளவு காலம் தேவை.
வாழ்க்கையின் இலக்கை முடிவு செய்வது கடினமான செயல் அல்ல. அதாவது அது குறிகிய கால இலக்கு அல்லது நீண்ட கால இலக்காகக் கூட இருக்கலாம், ஆனால் இறுதியில் அதை நடைமுறைக்கு கொண்டு வருவதே பெரிய சவாலாக இருக்கிறது. சில மக்களுக்கு தங்கள் இலக்கை அடைய சுலபமாக இருக்கும். ஆனால் சிலருக்கு இரண்டு மடங்கு அதிக உழைப்பு தேவைப்படும். உழைப்பு இருந்தால் இறுதியல் வெற்றி பெறலாம்.
இந்த இலக்குகள் ஒவ்வொன்றிற்கும் தனிப்பட்ட திட்டத்தை உருவாக்குவது எப்படி?
மேலே கூறியது போல அனைத்து இலக்குகளுக்கும் பொருந்தும் வகையில் இங்கு எந்த நிதி திட்டமும் இல்லை. பல திட்டங்களை ஒன்று சேர்த்து ஆராய்ந்த பிறகே உங்கள் இலகிற்கு ஏற்ற திட்டத்தை வரைய முடியும். உங்கள் குறிக்கோளுக்கான முறையான தயாரிப்பை தேர்வு செய்வதே மிகவும் சவாலான ஒன்று. இதுவே செல்வத்தை நிர்வகிப்பதற்கு கடினம் என்பதற்கு எடுத்துகாட்டாகும்.
தற்போதிய சூழலில் சிறந்த முறையில் திட்டமிட ஆன்லைனில் ஆலோசனை பெற பல வசதிகள் உள்ளது SEBI அங்கீகரிக்கப்பட்ட ஆலோசகர் உள்ளனர். இதன் மூலம் உங்கள் திட்டத்தை பற்றி நீங்கள் நன்கு அறியலாம், அதில் இருக்கும் தீமை நன்மை குறித்து அவர்களிடத்தில் ஆலோசனைப் பெறலாம்.
உங்கள் குறிக்கோளை பட்டியல் இட்ட பிறகு அதில் இருக்கும் ஆபத்தையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உங்கள் திட்டத்தின் ஆபத்தை நீங்கள் உணர்ந்து அது உங்களால் ஈடு செய்ய முடியும் என்று நினைத்தால் மட்டும் அது உங்கள் குறிக்கோளுக்கு பொருந்தும். இதில் ஏதும் ஒரு பொருந்தா விஷயம் இருந்தால் கூட அது உங்கள் இலக்கை அடைய முட்டுக்கட்டையாய் அமையும்.
உங்கள் திட்டத்தை முடிவு செய்த பிறகு எந்த சூழலிலும் அதில் எந்த மாற்றமும் செய்யாதீர்கள். இதுவே முறையான செல்வ நிர்வாகமாகும். திட்டத்தில் இருந்து நழுவி பல முதலீட்டாளர்கள் வெற்றி பெற முடியாமல் திணறினர். அதனால் அந்த பெரும் தவறை செய்யாதீர்கள், ஒரு திட்டத்தில் பயணிப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
இவை அனைத்தையும் பின்பற்றுவது என்பது கடினமான ஒன்றே! இதை முதல் முதலாக செய்ய நினைப்பவர்களுக்கு அதீத காலமும் முயற்சியும் தேவை. என்ன இருந்தாலும் பிழியாமல் சாறு எடுக்க முடியாது, உழைப்பின்றி ஊதியம் இல்லை அதனால் சிறு முயற்சி உங்களை வெற்றியை நோக்கி வழி நடத்தும்.
ஒரு டென்னிஸ் வீரராய் போரிஸ் பெக்கர் நமக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஆனால் அவரது செல்வ நிர்வாகம் நமக்கு ஒரு பாடம், நாம் முழித்துக்கொள்ள ஒரு வாய்ப்பு. இப்பொழுதே உங்கள் நிதி சுதந்திரத்தை திட்டம் இடுங்கள்! முறையாக முதலீடு செய்யுங்கள்.