அனிகட் கேப்பிடல் இடமிருந்து ரூ.17 கோடி நிதி திரட்டிய சென்னை ஸ்டார்ட்-அப் Illumine-i
நீடித்த வடிவமைப்பு, பொறியியல் நிறுவனமான இல்யூமினி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் (Illumine-i), தனது செயல்பாடுகளை விரிவாக்க அனிகட் கேப்பிடலிடம் இருந்து ரூ.17 கோடி நிதி திரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த நீடித்த வடிவமைப்பு, பொறியியல் நிறுவனமான இல்யூமினி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் (Illumine-i), தனது செயல்பாடுகளை விரிவாக்க அனிகட் கேப்பிடலிடம் இருந்து ரூ.17 கோடி சிரீஸ் ஏ நிதி திரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த நிதியின் மூலம், தானியங்கிமயம், டிஜிட்டல்மயமாக்கல், சொத்து தரம் மேம்பாடு ஆகியவற்றின் வாயிலாக கட்டுமான நிறுவனர்களுக்கு அதிகாரம் அளித்து, சமூகத்திற்கான சொத்துக்களை உருவாக்கும் தனது நோக்கத்தை இரட்டிப்பாக்க உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், புதிய சந்தைகளில் விரிவாக்கம் செய்யவும் இந்த நிதி உதவும்.
2015ல், சோலார் சிட்டி மற்றும் சன்ரன் ஊழியர்கள் நிதிஷ் சாய்ராம், சுதர்சன் கிருஷ்ணன் ஆகியோரால் துவக்கப்பட்ட இல்யூமினி–ஐ குறைந்த திறன் கொண்ட மின் நிலையங்களை அமைப்பதில் கவனம் செலுத்தியது.
அதன் பிறகு, எரிசக்தி சேமிப்பு மையங்கள், மின் நிலையங்களுக்கு அமைப்பு மற்றும் பொறியியல் நிபுணத்துவம் மற்றும், விநியோக அமைப்புகளை வழங்கும் நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. எரிசக்தி துறை தவிர, டிஜிட்டல் மாடலிங், எம்.இ.பி பொறியியல் மற்றும் திட்ட மேலாண்மை ஆகியவற்றை கட்டிடக்கலை, பொறியியல் மற்றும் கட்டுமான துறைக்கு வழங்கி வருகிறது.
"எங்கள் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி செல்லும் போது அனிகட் கேபிடல் ஆதரவு கிடைப்பது உற்சாகம் அளிக்கிறது,” என நிறுவனர் மற்றும் சி,இ.ஓ நிதிஷ் சாய்ராம் தெரிவித்துள்ளார்.
Illumine-i நிறுவனம் வேகமாக வளரும் சர்வதேச சந்தை மற்றும் இத்தகைய சந்தைக்கு சேவை அளிக்கும் இந்திய திறன் ஆகியவை சந்திக்கும் இடத்தில் உள்ளது. நிதிஷ் மற்றும் சுதர்சன் மறுசுழற்சி எரிசக்தி துறையில் வேகமாக வளரக்கூடிய வர்த்தகத்தை உருவாக்கியுள்ளனர்,” என அனிகட் கேபிடல் துணை தலைவர் ஆதித்ய பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தொழில்முனைவு ஊக்க அமைப்பிடம் இருந்து 4,70,000 டாலர் நிதி பெற்ற சென்னை ஸ்டார்ட் அப் 'Torus Robotics’
Edited by Induja Raghunathan