சென்னை விண்வெளி ஸ்டார்ட்-அப் Agnikul ஸ்ரீஹரிகோட்டாவில் தனது முதல் ஏவு வாகன செயல்பாட்டை துவங்கியது!
ஐஐடி சென்னையில் உருவான முன்னோடி விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனமான அக்னிகுல், தனது முதல் கட்டுப்பாடான விண்வெளி செலுத்துதலை நோக்கில் பாதையில் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.
ஐஐடி மெட்ராசில் உருவான முன்னோடி விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனமான
, தனது முதல் கட்டுப்பாடான விண்வெளி செலுத்துதலை நோக்கில் பாதையில் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.அக்னிகுல் நிறுவனம், அதன் அதிநவீன ’அக்னிபான் SOrTeD’ ஏவுவாகனத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி மைத்தில் உள்ள தனது தனியார் ஏவுதள மைத்தில் கடந்த 15ம் தேதி ஒருங்கிணைக்கும் செயல்முறையை துவக்கியுள்ளது.
இந்த நிகழ்வில், விண்வெளி மைய அதிகாரிகள், IN-SPACe திட்ட நிர்வாகிகள் நிறுவன உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். SDSC-SHAR இயகுனர் ஏ.ராஜராஜன் தலைமை வகிக்க, Agnibaan SOrTeD ஏவுவாகனம் அறிமுகம் செய்யப்பட்டது. அக்னிகுல் மிஷின் கட்டுப்பாடு மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட பின், ஏவுவாகனம் அறிமுகம் செய்யப்பட்டது.
Agnibaan SOrTeD அகினிகுல் நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற அக்னிலெட் இஞ்சின் கொண்டு அமைந்துள்ளது. இது முழுவதும் 3டி நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான ராக்கெட்கள் போல கெயிட் ரெயிலில் இருந்து இயங்காமல் இந்த ராக்கெட் செங்குத்தாக செலுத்தப்பட்டு முன் தீர்மானிக்கப்பட்ட பாதையில் செல்லும். பயணத்தின் போது முன் தீர்மானிக்கப்பட்ட செயல்கள் மேற்கொள்ளப்படும். அடுத்த சில வாரங்களில் நிறுவனம் தனது முதல் ஏவுதலை நிகழ்த்தத் திட்டமிட்டுள்ளது.
அக்னிகுல், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சதீஷ் தவான் மையத்தில் தனது ஏவுதளம் மற்றும் திட்ட கட்டுப்பாடு மையத்தைத் துவக்கியது. எதிர்வரும் ஆண்டுகளில் நிறுவனம் தனது விண்வெளி ராக்கெட் திட்டங்களை இங்கிருந்து செயல்படுத்த உள்ளது.
“இந்த சப் ஆர்பிடல் முயற்சி, அக்னிகுல் ஆட்டோபைலட் , நேவிகேஷன் மற்றும் அல்கோரிதத்தின் வெற்றியை நிரூபித்துள்ளது. மேலும், லட்சிய நோக்கிலான எதிர்கால திட்டங்களுக்கான ஏவுதளத்தின் தயார் நிலையை அறிய இது உதவும். அப்துல் கலாம் தலைமையில் செலுத்தப்பட்ட முதல் ஆர்பிடல் திட்டம் அமைந்த இடம் அருகே எங்கள் மிஷன் கட்டுப்பாடு அமைந்துள்ளது,” என அக்னிகுல் இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ ஸ்ரீநாத் ரவிசந்திரன் கூறினார்.
“அக்னிகுல் நிறுவனம் கண்டுவரும் முன்னேற்றம் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், வெற்றிகரமான நடவடிக்கைகளுக்கு வாழ்த்துகள் என SDSC-SHAR இயக்குனர் ஏ.ராஜராஜன் கூறினார்.
ஏவுதளத்தின் மீது ஏவு வாகனம் பொருத்தப்பட்டது குழுவுக்கு உற்சாகம் அளிப்பதாக இணை நிறுவனர், சி.ஓ.ஓ மொயின் எஸ்.பி.எம் கூறினார்.
அக்னிகுல் நிறுவனம் 2017ல், ஸ்ரீநாத் ரவிச்சந்திரன், மொயின் எஸ்.பி.எம், மற்றும் ஐஐடி பேராசிரியர் எஸ்.ஆர்.சக்ரவர்த்தி ஆகியோரால் துவங்கப்பட்டது. விண்வெளி செலுத்துதலை ஜனநாயகமயமாக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.
ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவுதளத்துடன் ஏவு வாகன ஒருங்கிணைப்பு செயல்முறையை துவக்கியது அக்னிகுல்
Edited by Induja Raghunathan