சென்னை ஸ்டார்ட்-அப் Log2Base2 ரூ.1.20 கோடி நிதி திரட்டியது!
சென்னையை தலைமையகமாக கொண்ட Log2Base2 நிறுவனம், புதிய நிதியை பிராண்ட் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக பயன்படுத்த உள்ளது.
சென்னையை தலைமையகமாக கொண்ட
Edutech Media நிறுவனம், விதை நிதிக்கு முந்தைய சுற்றாக (Pre-seed), ரூ.1.20 கோடி நிதி திரட்டியுள்ளது.நிறுவனம் திரட்டியுள்ள இந்த நிதியை, குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் பிராண்ட் விழிப்புணர்வை மேம்படுத்த பயன்படுத்திக்கொள்ள இருப்பதாக, Log2Base2 நிறுவனர் மற்றும் சி.இ.ஓ பிரேம்குமார் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
“முழு ஸ்டேக் உருவாக்கம், சிஸ்டம் டிசைன் மற்றும் ஆப்ஜெக் ஓரியண்டட் டிசைன் ஆகியவற்றில் புதிய உள்ளடக்கத்தை அறிமுகம் செய்ய இந்த நிதி பயன்படுத்திக்கொள்ளப்படும்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய கல்விநுட்பச் சந்தை, நேரடி வகுப்புகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை சார்ந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“முற்றிலும் தானியங்கி அனிமேஷன் காட்சி, கற்றல் அனுபவம் சார்ந்த புதிய வேறுபட்ட கற்றல் மேடையை உருவாக்கி வருகிறோம். தமிழ், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, இந்தி உள்ளிட்ட உள்ளூர் மொழிகளில் அனிமேஷன் உள்ளடக்கத்தை உருவாக்குவது தான் எங்கள் சிறப்பம்ச,ம்” என்று அவர் கூறியுள்ளார்.
புரோகிராமிங், டேட்டா அமைப்புகள், அல்கோரிதம் மற்றும் கோடிங் நேர்காணலுக்கு தயாரவதற்கான காட்சி கற்றல் மேடையாக Log2Base2 திகழ்கிறது.
கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழில்முறை ஊழியர்களுக்கு இந்த மேடை பயிற்சி அளிக்கிறது. தற்போது நிறுவனம், வேலைவாய்ப்பு உதவி மேடையான hirefreshers.com வசதியை உருவாக்கி வருகிறது. இந்த வசதியின் மூலம் ஸ்டார்ட் அப்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் Log2Base2 திறமையாளர்களில் இருந்து நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்.
இந்நிறுவனம் 3,58,169 பதிவு செய்யப்பட்ட பயனாளிகளைக் கொண்டுள்ளது. மேலும், 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 12,000க்கும் மேற்பட்ட கட்டண பயனாளிகளைக் கொண்டுள்ளது. இதன் 81 சதவீத வருவாய் இந்தியாவில் இருந்து வருகிறது. 11 சதவீத வருவாய் அமெரிக்காவில் இருந்து வருகிறது. எஞ்சியவை, மெக்சிகோ, சவுதி அரேபியா மற்றும் வங்கதேசத்தில் இருந்து வருகிறது.
அனிமேஷன் வடிவில் புரோகிராமிங் மொழிகள்: ரூ.1 கோடி ஆண்டு வருவாய் ஈட்டும் ஸ்டார்ட்-அப்!
Edited by Induja Raghunathan