'உலகின் பணக்கார நாடு' ஆன சீனா: அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி முதலிடம்!
20 டிரில்லியன் டாலராக அதிகரித்த செல்வம்!
உலகின் பணக்கார நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது. முன்னதாக, அந்தப் பெருமையை கொண்ட நாடு அமெரிக்கா. ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் சீன நாட்டின் உலக செல்வத்தின் மதிப்பு மூன்று மடங்கு அதிகரித்ததை அடுத்து அமெரிக்காவை முந்தி முதலிடத்தை பிடித்துள்ளது.
இதனை ப்ளூம்பெர்க் செய்தி தளம் உறுதிப்படுத்தியுள்ளது. மெக்கின்சே அண்ட் கோ என்ற நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் உலகின் மொத்த வருமானத்தில் 60% உள்ளடக்கிய பத்து வெவ்வேறு நாடுகளின் இருப்புநிலைகளை ஆய்வு செய்தன.
இந்த ஆய்வின் முடிவின் அடிப்படையில், தற்போது சீனா முதலிடம் பிடித்துள்ளது. 2000-ம் ஆண்டில் 156 டிரில்லியன் டாலர் 156 டிரில்லியன் டாலர் என்ற அளவில் இருந்த உலகின் நிகர மதிப்பு 2020-க்கு பின் 514 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்த மதிப்பில் சீனா மிகப்பெரிய ஒற்றைப் பங்கை பெற்றுள்ளது என்று அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. அதாவது,
உலகின் வருவாயில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை சீனா பெற்றுள்ளது என அந்த ஆய்வு விளக்குகிறது.
மெக்கின்சே அண்ட் கோ பங்குதாரர் ஜான் மிஷ்கே இந்த ஆய்வு தொடர்பாக பேசுகையில்,
“சீனாவின் செல்வம் 2000ம் ஆண்டில் 7 டிரில்லியன் டாலர் என்ற அளவில் இருந்து தற்போது 20 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதனால் முன்பு இருந்ததை விட இப்போது பணக்காரர்களாக நாங்கள் மாறி இருக்கிறோம். உலக வர்த்தக அமைப்பில் சேருவதற்கு முன்பில் இருந்து சொல்ல முடியாத மிகப்பெரிய வளர்ச்சியை சீனா பெற்று வருகிறது," என்றுள்ளார்.
இதனிடையே, சொத்து விலைகளில் அடிப்படையில் அமெரிக்கா தனது நிகர மதிப்பை 90 டிரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளாக இந்த இரண்டு நாடுகளும் அறியப்பட்டாலும், உலகின் செல்வத்தின் பணக்காரக் குடும்பங்களின் அடிப்படையில் தற்போது அமெரிக்காவை முந்தி சீனா முதலிடம் பிடித்துள்ளது.
அமெரிக்காவின் வருவாயுடன் ஒப்பிடுகையில், ஏறக்குறைய 50% சீனா அதிகமாக பெற்றுளளது என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் உதவி: ப்ளூம்பர்க் | தமிழில்: மலையரசு