Work from home செய்ய லேப்டாப், இன்டெர்நெட், ஸ்பீக்கர் வாடகைக்கு அளிக்கும் சென்னை நிறுவனம்!
அலுவலகம் என்றால் எல்லாவித வசதிகளும் இருக்கும், ஆனால் தயார் இல்லாத வீடுகளில் இருந்து பணி செய்வது எப்படி? அதற்கும் தீர்வு இருக்கிறது இதோ:
இன்று உலகை ஆட்டிப்படைக்கும் கோவிட்-19 காரணமாக தொடர் ஊரடங்கில் மக்கள் வீட்டில் அடைந்துள்ளனர். அலுவலகம் செல்லமுடியாத சூழலில் வீட்டில் இருந்தே பணி (work from home) செய்கின்றனர் பலர்.
ஆனால் மார்ச் 23ம் தேதி முதல் தீடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், வொர்க் ஃப்ரம் ஹோம் என்பது எல்லாருக்கும் சாத்தியமானதாக இருக்கவில்லை. சிலரிடம் பணிக்குத் தேவையான லேப்டாப், கம்யூட்டர், வேகமான இன்டெர்நெட் கனெக்ஷன், வெப் கால்களில் மீடிங்க் அடெண்ட் செய்யத் தேவையான ஸ்பீக்கர், மைக் என எல்லா உபகரணங்களும் எல்லாருடைய வீட்டிலும் இல்லாததால், பலரால் பணியை சரிவர செய்ய முடியாது போனது.
அலுவலகம் என்றால் எல்லாவித வசதிகளுடன் இருக்கும், ஆனால் தயார் இல்லாத வீடுகளில் இருந்து பணி செய்வது கடினமாகியது. ஒருசில நிறுவனங்கள் மட்டுமே ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும் தங்களது ஊழியர்களுக்கு தேவையான லேப்டாப், மற்றும் இதர வசதிகளை வீட்டுக்கு எடுத்துச்செல்ல அனுமதித்தது அல்லது புதிதாக வாங்கித்தந்து அனுப்பியது. ஆனால் பல நிறுவனங்களால் இதை அந்த கடைசிநிமிடத்தில் செய்ய முடியாது போனது. இதனால் பணி முடக்கம் ஏற்பட்டது.
இப்படி தவித்த பல நிறுவனங்களுக்கு உதவிக்கரம் நீட்டியது சென்னை நிறுவனம் ஒன்று. வொர்க் ஃப்ரம் ஹோம் செய்ய ஊழியர்களுக்குத் தேவையான உபகரணங்களை வழங்கும் சேவையை புரியத்தொடங்கியது இந்நிறுவனம்.
FICONNET டெல்கோ எனும் சென்னையில் இருந்து இயங்கும் நிறுவனம் தொழில்நுட்பத் தீர்வுகள் வழங்கும் நிறுவனம் ஆகும். தற்போது இவர்கள் வயர்லெஸ் இணையச் சேவைகளையும் கால்சென்டர்கள் வீட்டில்இருந்து செயல்படுவதற்கான தீர்வுகளையும் வழங்குகிறது.
இதன் நிறுவனர் ஸ்ரீவத்சன் பாலகோபால். இவருக்கு இந்த ஐடியா எப்படி வந்தது? என்னென்ன சேவைகள் இவர்கள் தருகிறார்கள் எனக் கேட்டபோது,
“நாங்கள் 100 இருக்கை வசதி கொண்ட தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட நிறுவனமாகும். கோவிட் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும், வொர்க் ஃப்ரம் ஹோம் செய்ய ஊழியர்களுக்கும், நிறுவனங்களுக்கும் கம்ப்யூட்டர், இன்டெர்நெட் மற்றும் அதற்குத் தேவையான டாங்கில் மற்றும் ஒரு முழுமையான சேவையை வாடகைக்குத் தர முடிவெடுத்தோம்,” என்றார்.
ஸ்ரீவத்சன் பாலகோபால் பல்வேறு தொழில்முனைவு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். BPO, ERP, ITMS/IT என பல துறைகளில் ஏழாண்டுகால அனுபவம் மிக்கவர். அமெரிக்கா, யூகே, ஆஸ்திரேலியா ஆகிய சந்தைப் பகுதிகளில் ஹெல்த்கேர், டெலிகாம், ஆன்லைன் கல்விப் பிரிவு ஆகியவற்றில் லீட் ஜெனரேஷன் மூலம் 3.5 கோடி ரூபாய் விற்றுமுதல் ஈட்டும் அளவிற்கு தன் நிறுவனத்தை வளர்ச்சியடையச் செய்துள்ளார்.
கோவிட்-19 காரணமாக பலர் வேலைகளை இழக்கும் அபாயம் இருந்தது. வருமானம் ஈட்டுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதுபோன்ற சூழலில் ஊழியர்கள் தங்களது வீட்டில் இருந்தே பணிபுரிந்து வருவாய் ஈட்ட உதவுவதில் எங்களுக்கு மகிழ்ச்சி,” என்றார்.
இவரின் வாழ்க்கையில் வர்தா புயல், அவரது அப்பாவின் இறப்பு, கோவிட்-19 ஆகிய மூன்று எதிர்பாராத சம்பவங்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது, என்கிறார். இவரது அப்பா 2017-ம் ஆண்டு இறந்த பிறகு மூன்று மாதங்களில் FICONNET நிறுவனத்தைத் தொடங்கினார்.
ஸ்டார்ட் அப்’பாக தொடங்கப்பட்ட இந்நிறுவனம் கால் சென்டர்களுக்கு வீட்டிலிருந்தே செயல்படுவதற்குத் தேவையான முழுமையான தீர்வுகளை வழங்கத் தொடங்கியது.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தபட்ட ஆரம்பகட்டத்திலேயே இந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்குச் சேவையளிக்கத் தேவையான அனுமதியை அரசிடமிருந்து பெற்றது.
“ஊரடங்கின் போது சில நிறுவனங்கள் தங்களது அலுவலகங்களில் இருந்து ஊழியர்களின் இடங்களுக்கு கம்ப்யூட்டர்களை எடுத்துச் செல்வதில் சிரமங்களை சந்தித்தன. நாங்கள் அவர்களுக்கும் சேவையளித்து, அந்நிறுவன அலுவலகங்களில் இருந்து ஊழியர்களின் வீடுகளுக்கு கம்ப்யூட்டர்களைக் கொண்டு சேர்த்தோம்,” என்றார்.
இந்த நடவடிக்கைகளை மேற்கொள்கையில் தனிமனித இடைவெளியை முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. டெலிவர் செய்யும்போதும் வாடிக்கையாளர்களுடன் நேரடியாகத் தொடர்பில் இருப்பதில்லை இவரின் குழுவினர்.
Ficonnet ஊழியர்கள் கையுறைகள், கண்களுக்குக் கண்ணாடி, முகக்கவசம் ஆகியவற்றை அணிந்து செல்கின்றனர். வாகனங்களில் செல்லும்போது சானிடைசரை உடன் எடுத்துச் செல்கின்றனர்.
“சுமார் 60-100 ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய உதவியுள்ளோம். ஒவ்வொரு நாளும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ள இன்றைய சூழல் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் எங்களது சேவையைப் பெற தங்களது ஊழியர்கள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டுள்ளது. எங்களால் இயன்ற சமயத்தில் டெலிவர் செய்ய கோரிக்கை விடுத்துள்ளது,” என்றார்.
இவர்களின் வாடிக்கையாளர்கள் யார்?
கோயமுத்தூரில் உள்ள பயோடா (Payoda) நிறுவனம் தங்களது முக்கிய வளங்களுக்கான இணைப்பு வசதியை வழங்க இந்நிறுவனத்தை அணுகியுள்ளது. கோவிட்-19 நோய்தாக்கம் பரவி வரும் சூழலிலும் பல்வேறு சிரமங்களைக் கடந்து FICONNET அந்நிறுவனத்தின்
தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளது. பயோடா, ஸ்ட்ரிங் இன்ஃபோ, டேட்டாமார்க் பிபிஓ ஆகிய மூன்று முக்கிய நிறுவனங்களுக்கு FICONNET சேவையளித்துள்ளது.
அதுமட்டுமின்றி சென்னை, பெங்களூரு, மும்பை ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான நிறுவனங்கள் இவர்களைத் தொடர்பு கொண்டு வருகிறது. பல ஆண்டுகளாக FICONNET வாடிக்கையாளராக இருந்து வரும் மும்பையைச் சேர்ந்த பிபிஒ ஒன்று சென்னை செயல்பாடுகளுக்காக வீட்டில் இருந்து பணிபுரிவதற்கான ஏற்பாடுகளுக்கு இவர்களை
அணுகியுள்ளது. இந்தப் பட்டியல் இன்னமும் நீண்டு கொண்டிருக்கிறது, என்றார் ஸ்ரீவத்சன்.
வீட்டில் இருந்து பணிபுரிய என்னென்ன சேவைகள் வழங்க்ப்படுகின்றன?
கால்செண்டர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு FICONNET கீழ்கண்டசேவைகளை வழங்குகிறது:
- டெஸ்க்டாப் மற்றும் ஹெட்செட் வாடகை சேவை
- டாங்கிள் மற்றும் டேட்டா, VoIP
- க்ளௌட் டெலிஃபோனி (ஹோஸ்டட் டயலர்)+சாஃப்ட்போன்
- மென்பொருள், விபிஎன்
- சிஆர்எம்
இனிவரும் காலங்களில் வொர்க் ஃப்ரம் ஹோம் கல்ச்சர் உலகமெங்கும் அதிகரிக்க உள்ளதாக பல நிபுணர்கள் கூறுகின்றனர். அதனால் இவர்களைப் போல் இச்சேவையை புரியும் நிறுவனங்களுக்கு தேவை அதிகரிக்கும்.
காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்று சொல்வது போல், நிறுவனங்கள் பல ஊரடங்கால் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு பெருத்த நஷ்டங்களை சந்தித்து வரும் இவ்வேளையில், இது போன்ற நிறுவனங்கள் சமயோஜிதமாக தங்கள் சேவைகளை விரிவாக்கி பிறருக்கும், உதவி தங்களின் நிலையையும் நிலைநாட்டிக்கொள்வது பாராட்டுக்குரியது.
தொடர்பு கொள்ள்: Ficonnet / 9751641159