சென்னையில் நுகர்வோர் கேமரா ட்ரோன் ‘Droni' அறிமுகப்படுத்திய ‘தல’ தோனி!
கருடா ஏரோஸ்ப்பேஸ் உருவாகியுள்ள நுகர்வோர் பயன்பாடு கேமரா பொறுத்தப்பட்ட ட்ரோன் ‘ட்ரோனி’ எனும் பெயரிலான ட்ரோனை கிரிக்கெட் வீரர் தோனி சென்னையில் அறிமுகப்படுத்தினார்.
ஹெலிகாப்டர் ஷாட்டை பிரபலப்படுத்தியவர் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் மகேந்திர சிங் தோனி. தற்போது இவர் குவாட்காப்டர் நுகர்வோர் கேமரா ஆளில்லா விமானம் ‘ட்ரோனி’ (Droni) என்ற ட்ரோனை அறிமுகப்படுத்தியுள்ளார்.
மேம்பட்ட அம்சங்களைக் கொண்ட இந்த மேட்-இன்-இந்தியா கேமரா ட்ரோன் ’கருடா ஏரோஸ்பேஸ்’ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் பிராண்ட் தூதராக எம்எஸ் தோனி உள்ளார்.
’Droni' ட்ரோன் சிறப்பம்சம்
கருடா ஏரோஸ்பேஸ், விவசாய பூச்சிக்கொல்லி தெளித்தல், சோலார் பேனல் சுத்தம் செய்தல், தொழிற்சாலை குழாய் ஆய்வுகள், மேப்பிங், சர்வே, பொது அறிவிப்புகள், டெலிவரி சேவைகள் போன்றவற்றுக்கு ட்ரோன் தீர்வுகளை வழங்கும் இந்நிறுவனத்தின் புதிய உருவாக்கமே ‘ட்ரோனி’.
நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ் கூறுகையில்,
“ட்ரோனி நுகர்வோர் பயன்பாடு கேமரா பொறுத்தப்பட்ட ட்ரோன் ஆகும். இந்த ட்ரோன் 2022 இறுதிக்குள் சந்தையில் கிடைக்கும்,” என்றார்.
சென்னையில் நடந்த ட்ரோன் நிகழ்வில் விவசாயத் துறையை, குறிப்பாக மருந்துகளை தெளிப்பதற்காக புதிய 'கிசான் ட்ரோன்' அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பேட்டரியில் இயங்கும் ஆளில்லா விமானம் ஒரு நாளைக்கு 30 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் திறன் கொண்டது.
நிகழ்ச்சியில் பேசிய தோனி,
“கோவிட்-19 ஊரடங்கின் போது தான் விவசாயத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததை நினைவு கூர்ந்தார். விவசாயிகளுக்கு ட்ரோன்களின் பங்கை அவர் வலியுறுத்தினார்.”
வெளியீட்டு விழாவில் பேசிய கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ்,
“கருடா ஏரோஸ்பேஸ் பல நோக்கங்களுக்காக அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் தீர்வுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. எங்கள் ’ட்ரோனி’ ட்ரோன் உள்நாட்டு மற்றும் பல்வேறு கண்காணிப்பு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படலாம். இது ஒரு தொழில்நுட்பம் மற்றும் உருவாக்க நிலைப்பாட்டில் இருந்து மேலும் திறமையானது, தடையற்றது மற்றும் உயர் தரமானது,” என்றார்.
இந்திய ட்ரோன் சங்கத்தின் தலைவரும், இந்திய விமானப்படையின் முன்னாள் விங் கமாண்டருமான ஆனந்த் குமார் தாஸ் கூறுகையில்,
"ஆளில்லா விமானம் தொடர்பான நுண்ணறிவுகளைப் பெற தொழில்துறை பங்குதாரர்கள் இணையும் தளத்தில் பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் மற்றும் கருடாவுடன் குளோபல் ட்ரோன் எக்ஸ்போவை ஏற்பாடு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏரோஸ்பேஸ் துறை ட்ரோன் தொழிலை ஊக்குவிப்பதிலும் வளர்ச்சியை வளர்ப்பதிலும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கும்,” என்றார்.
குளோபல் ட்ரோன் எக்ஸ்போவில் 14 சர்வதேச ட்ரோன் நிறுவனங்களின் 1500+ பங்கேற்பாளர்கள் மற்றும் 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இது முதலீட்டாளர்கள், இளைஞர்கள் மற்றும் பங்குதாரர்களை ஈர்த்தது மற்றும் ட்ரோன் தொழில்துறைக்கு முன்னோக்கிச் செல்லும் பாதையை கோடிட்டுக் காட்டியது.
தொழில் வல்லுநர்கள், விவசாயிகள், டீலர்கள், விநியோகஸ்தர்கள், வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளைச் சேர்ந்தவர்கள், கல்வி-நிதி நிறுவனங்கள், அரசுப் பிரதிநிதிகள், விமானிகள் மற்றும் பல்வேறு முதலீட்டாளர்கள் ட்ரோன் கலாச்சாரம் மற்றும் ஆளில்லா விமானங்களின் பயன்பாடு தொடர்பான பல்வேறு சாத்தியக்கூறுகள் பற்றிய நுண்ணறிவுகளைப் பெற இவ்விழா உதவியது.