முதலீட்டாளர்களிடம் இருந்து வெளியிடப்படாத நிதி திரட்டிய சென்னை ஸ்டார்ட் அப் 'IppoPay'

சிறிய நகரங்களில் உள்ள வர்த்தகர்களுக்கான எளிமையான டிஜிட்டல் பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வரும் இப்போபே நிறுவனம், ஒரு லட்சம் வர்த்தகர்களை சென்றடையும் வகையில் வளர நிதியை பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளது.
0 CLAPS
0

சிறிய நகரங்களில் உள்ள வர்த்தகர்களுக்கான எளிமையான டிஜிட்டல் பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வரும் ‘Ippopay' 'இப்போபே' நிறுவனம் பெட்டர் கேபிடல் நிறுவனம் உள்ளிட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து விதை நிதிக்கு முந்தைய நிதி திரட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.

‘Ippopay' நிறுவனம் இந்த நிதியை, 1 லட்சம் வர்த்தர்கர்களை அடையவும், வர்த்தகர்களுக்கான சேவையை விரிவாக்கவும் இந்த நிதியை பயன்படுத்திக்கொள்ள உள்ளது.

Brex for Bharat என்ற கோட்பாடுடன் இயங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனமான இப்போபே (IppoPay), இரண்டாம் அடுக்கு முதல் நான்காம் அடுக்கு வரையான நகரங்களில் உள்ள வங்கிச்சேவை பெறாத லட்சக்கணக்கான வர்த்தகர்களுக்கான எளிதான டிஜிட்டல் பரிவர்த்தனை மற்றும் வங்கிச்சேவைகளை அளித்து வருகிறது.

ஆரம்ப நிலை முதலீட்டாளரான ‘பெட்டர் கேபிடல்’ மற்றும் எம்2பி நிறுனவர் பிரபு ரங்கராஜன், Rocketship விசி பங்குதாரர் சைலேஷ் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரிடம் இருந்து விதை நிதிக்கு முந்தைய நிதியை பெற்றுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

நிறுவனம், அறிமுகமான 9 மாதங்களில் வேகமான வளர்ச்சி பெற்று வருகிறது. 5,000க்கும் மேற்பட்ட வர்த்தகர்களால் மேற்கொள்ளப்பட்ட ஒரு கோடிக்கும் மேலான பரிவர்த்தனைகள் மூலம் ரூ.1750 கோடி பரிவர்த்தனைகள பதிவு செய்துள்ளது IppoPay. யெஸ் பாங்க், ஐசிஐசிஐ பாங்க், பேடிஎம் பேங்க் உள்ளிட்ட வங்கிகளுடன் கூட்டு வைத்துள்ளது.

“கிராமப்புற இந்தியாவில் உள்ள 460 மில்லியன் மக்களைக் கொண்ட வர்த்தகர்கள் இந்தியாவின் 30 சதவீத ஜிடிபிக்கு பங்களிக்கின்றனர். எனவே, இவர்கள் தேவையை நிறைவேற்றுவது மற்றும் டிஜிட்டல் வங்கிச்சேவையின் ஆற்றலை அளிப்பது இந்திய பொருளாதாரம் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்று இப்போபே நிறுவனர் கே.மோகன் கூறியுள்ளார்.

மேலும், கிராமப்புற வர்த்தகர்கள் தங்கள் நிதி விஷயங்களைக் கையாள்வதில் உள்ள சிக்கல்களை முடிவுக்குக் கொண்டு வருவதும், நவீன தொழில்நுட்பங்களால் வேகமான சேவை அளிப்பதும் தங்கள் இலக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வர்த்தகர்களுக்கான பரிவர்த்தனை மற்றும் வங்கித்தீர்வுகள் மூலம், நிறுவனம் லட்சக்கணக்கான வர்த்தகர்களுக்கு ’பிரெக்ஸ்’ (Brex) போன்ற சேவை அளித்து, பலவிதங்களில் பரிவர்த்தனைகளை ஏற்க, ஊழியர்கள், வெண்டர்களுக்கு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த வழி செய்கிறது.

எளிமையான லெட்ஜர் போன்ற வசதி, பி.ஓ.எஸ் செயலி, யுபிஐ இணைப்பு ஆகியவற்றின் மூலம் வர்த்தகர்கள் எளிதாக பரிவர்த்தனைகளை ஏற்கலாம். நிறுவனம் பல்வேறு மொழிகளிலும் வாடிக்கையாளர் சேவை அளித்து வருகிறது.

“இப்போபே கிராமப்புற வர்த்தகர்களுக்கு ஏற்ற சேவையை அளித்து வருகிறது. சிறிய நகரங்களில் உள்ள வர்த்தகர்கள் வளர்வதற்கு ஏற்ற சேவையை அளிக்கிறது,” என பெட்டர் கேபிடல் நிறுவனத்தின் வைபவ் தோம்குந்தவர் தெரிவித்துள்ளார்.

Latest

Updates from around the world