பப்ளிக் எக்ஸாம்களில் தோல்வி; விடாமல் முயன்று முதல் முயற்சியில் ஐஏஎஸ் ஆன அஞ்சு சர்மா கதை!
10 ஆம் வகுப்பில் வேதியியலிலும், 12 ஆம் வகுப்பில் பொருளாதார தேர்விலும் பெயிலான அஞ்சு சர்மா, முதல் முயற்சியிலேயே யூபிஎஸ்சி தேர்வில் வென்று தனது ஐஏஎஸ் கனவை நனவாக்கியுள்ளார்.
10 ஆம் வகுப்பில் கெமிஸ்ட்ரியிலும், 12 ஆம் வகுப்பில் பொருளாதார தேர்விலும் பெயிலான அஞ்சு சர்மா, முதல் முயற்சியிலேயே யூபிஎஸ்சி தேர்வில் வென்று தனது ஐஏஎஸ் கனவை நனவாக்கியுள்ளார்.
யுபிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெறுவது என்பது மிகவும் சாதாரணமான விஷயம் அல்ல, அதனால் தான் கடந்த சில நாட்களாகவே கடுமையாக முயன்று சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் வெற்றிக்கதைகளை பார்த்து வருகிறோம்.
இன்று நாம் பார்க்கப்போவது ஐஏஎஸ் அதிகாரி அஞ்சு சர்மாவை பற்றி, 22 வயதில் UPSC தேர்வில் வெற்றி பெற்று, தோல்வியை வெற்றியாக மாற்றிய சிங்கப்பெண் அவர்.
தோல்விக்கு யாரும் உங்களைத் தயார்படுத்த மாட்டார்கள், வெற்றியை மட்டுமே தயார் செய்வார்கள் எனக்கூறுவார்கள். ஆனால், அஞ்சு ஷர்மா தோல்வியில் இருந்து பூத்த வெற்றி மலர்.
12ஆம் வகுப்பு படிக்கும் போது இறுதித் தேர்வில் எக்னாமிக்ஸ் பரீட்சையில் தோல்வியுற்றார், அதற்கு முன்னதாக 10ஆம் வகுப்பிலும் வேதியியலிலும் தோல்வியடைந்தார். இருப்பினும், மற்ற பாடங்களில் சிறப்பாக தேர்ச்சி பெற்றார்.
ஆனால்,, பொதுத்தேர்வில் அஞ்சு சர்மாவுக்கு கிடைத்த இரண்டு அனுபவங்கள் தான் அவரது வாழ்க்கையை வலுவானதாக மாற்ற உந்துதல் தந்துள்ளது. இதுகுறித்து அஞ்சு சர்மா கூறுகையில்,
“எனது ப்ரீ-போர்டு எக்ஸாமின் போது நான் நிறைய படிக்க வேண்டியிருந்தது. ஆனால் அதனை நான் படிக்காததால் இரவு உணவுக்கு முன்பிருந்தே என்னை ஒருவித அச்சம் தொற்றிக்கொண்டது. நிச்சயம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் நான் தோல்வியடைவேன் என்பது எனக்கு தெரிந்துவிட்டது. 10ம் வகுப்பில் எடுக்கும் மார்க்கு எவ்வாறு எனது உயர் கல்வியை தீர்மானிக்க முக்கியமானது என்பதை சுற்றியிருந்த அனைவரும் எனக்கு வலியுறுத்தினார்கள்,” என்கிறார்.
இந்த கடினமான நேரத்தில், அஞ்சுவின் அம்மா அவருக்கு ஆறுதல் மற்றும் ஊக்கமளித்துள்ளார். கடைசி நிமிட படிப்பை நம்பி இருக்கக்கூடாது என்ற பாடத்தையும் கற்றுக்கொண்டார். எனவே அவர் ஆரம்பத்திலிருந்தே கல்லூரித் தேர்வுகளுக்குத் தயாராகத் தொடங்கியதால், ஜெய்ப்பூரில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி மற்றும் எம்பிஏ படிப்பில் அஞ்சு சர்மா தங்கம் பதக்கம் வென்றுள்ளார்.
இந்த உத்தியை அஞ்சு சர்மா தனது யூபிஎஸ்சி தேர்விலும் பயன்படுத்தியுள்ளார். சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பாடங்களை அனைத்தையும் முன்னதாகவே படித்து முடித்த அஞ்சு, படித்தவற்றை மீண்டும், மீண்டும் ரீகால் செய்ய பயன்படுத்தியுள்ளார். இதன் மூலமாகவே அஞ்சு சர்மா ஐஏஎஸ் டாப்பர்கள் பட்டியலில் இடம் பிடித்ததாக தெரிவிக்கிறார்.
அஞ்சு 1991ல் ராஜ்கோட்டில் உதவி கலெக்டராக தனது பணியைத் தொடங்கினார். அவர் தற்போது சசிவாலயா, காந்திநகரில் அரசாங்கக் கல்வித் துறையின் உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி முதன்மைச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.
தகவல் உதவி - டிஎன்ஏ | தமிழில் - கனிமொழி