பாரத் ரத்னா விருது வென்ற 5 பெண்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...
இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதான பாரத் ரத்னா விருதை பெற்றுள்ள மொத்தம் 48 பேரில் ஐந்து பேர் மட்டுமே பெண்கள். அவர்களைப் பற்றி ஒரு பார்வை.
நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னா 1954ம் ஆண்டு நிறுவப்பட்டது. எந்த ஒரு துறையிலும் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது. ராஜாஜி, ராதாகிருஷ்ணன், சிவி.ராமன் ஆகியயோருக்கு முதல் பாரத ரத்னா விருதுகள் வழங்கப்பட்டன.
அதன் பிறகு, மொத்தம் 48 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து பேர் மட்டும் தான் பெண்கள்.
இந்திரா காந்தி
இந்தியாவின் முதல் மற்றும் இதுவரை ஒரே பிரதமரான இந்திரா காந்திக்கு, 1972ம் ஆண்டு பாரத ரத்னா வழங்கப்பட்டது. நேரு குடும்பத்தைச்சேர்ந்த இந்திரா காந்தி, இளம் வயதில் இருந்தே அரசியலில் ஆர்வம் கொண்டிருந்தார். 1959ல் காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திரா காந்தி, தனது தந்தை நேருவுக்கு முக்கிய ஆலோசகர்களில் ஒருவராக இருந்தார்.
1966 ல் அவர் இந்திய பிரமரானார். பாரத ரத்னா பெறுவதற்கு முன், அவர் நிகழ்த்திய முக்கிய சாதனையாக, 1971ல் வங்கதேச விடுதலை உதவிய நிகழ்வு அமைகிறது.
அன்னை தெரசா
தன்னலமற்ற ஆளுமையாகவும், ஆதரவற்றவர்களுக்கான பாதுகாவலராகவும் போற்றப்படும் அன்னை தெர்சா 1980ல் பாரத ரத்னா விருது பெற்றார். மசிடோனியாவில் பிறந்த அன்னை தெரசா, தனது 18வது வயதில் கன்னியாஸ்திரியாகி, 1929ல் இந்தியாவுக்கு வந்தார். ஆசிரியையாக பணியாற்றியவர், 1950ல், கைவிடப்பட்டவர்களுக்கான அமைப்பான மிஷினரிஸ் ஆப் சாரிட்டி அமைப்பை துவக்கினார்.
இன்று இந்த சேவை அமைப்பு உலகம் முழுவதும் கிளைகளைக் கொண்டு ஆதரவற்றவர்களுக்கு தொண்டாற்றி வருகிறது.
அருணா ஆசப் அலி
சுதந்திர போராட்ட வீராங்கனையான அருணா ஆசப் அலி, 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது, மும்பை குவாலியா டாங்க் மைதானத்தில் இந்திய தேசியக்கொடியை ஏற்றியதற்காக அறியப்படுகிறார். அவர் மறைந்த பிறகு 1997ல் பாரத ரத்னா வழங்கப்பட்டது.
1928 அவர் காங்கிரஸ் தலைவரான ஆசப் அலியை திருமணம் செய்து கொண்டதன் மூலம் அரசியலில் ஈடுபடத்துவங்கினார். 1930ல் தண்டி யாத்திரையில் கலந்து கொண்டார். 1932ல், சிறைக்கைதிகள் நலனுக்காக திகார் சிறையில் அவர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்கள் பிரிவான, இந்திய பெண்களுககான தேசிய கூட்டமைப்பை அவர் ஏற்படுத்தினார். தில்லியின் முதல் மேயராக 1958ல் தேர்வானார்.
துணிச்சலான செயல்பாடுகளுக்காக அவர், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நாயகி என்று பாராட்டப்பட்டார்.
எம்.எஸ்.சுபலட்சுமி
கர்நாடக இசை உலகின் முன்னோடிகளில் ஒருவரான எம்.எஸ்.சுபலட்சுமி 1998ல் பாரத ரத்னா பெற்றார். இந்த விருதை பெறும் முதல் இசைக்கலைஞராகவும் அவர் விளங்குக்கிறார்.
இசைக்குடும்பத்தில் பிறந்த எம்.எஸ்.சுபலட்சுமி, திருச்சி மலைக்கோட்டையில் 11வது வயதில் முதல் இசை நிகழ்ச்சியை நடத்தினார். 1929ல் 13 வயதிலேயே சென்னை மியூசிக் அகாடமியில் இசை நிகழ்ச்சி நடத்தி சங்கீத வித்வான்களை வியப்பில் ஆழ்த்தினார். 17 வயதில் அவர் புகழ் பெற்ற இசைக்கலைஞரானார்..
1963ல் நடைபெற்ற எடின்பர்க் சர்வதேச திருவிழா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விழாக்களில் இந்தியா சார்பில் அவர் பங்கேற்றிருக்கிறார். நியூயார்க் கார்னகி ஹால் மற்றும் லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹால் ஆகியவற்றிலும் அவர் இசை நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார். உலகின் பல்வேறு நாடுகளில் பயணித்து கர்நாடக இசையை அவர் பிரபலமாக்கினார்,
லதா மங்கேஷ்கர்
30க்கும் மேற்பட்ட மொழிகளில் லட்சக்கணக்கான பாடல்கள் பாடியுள்ள லதா மங்கேஷ்கர், இந்திய திரைப்பட உலகின் புகழ்பெற்ற பாடகியாக விளங்குகிறார். 2001ல் அவருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டது.
1942ல் மராத்தி மற்றும் இந்தி படங்களில் அவர் நடிகையாத தனது வாழ்க்கையை துவங்கினார். 1845ல் கஜபஹு எனும் இந்தி படத்தில் முதலில் பாடினார். 1949ம் மதுபாலாவுக்காக அவர் பாடியல் பாடல் அவருக்கு புகழைத் தேடித்தந்தது. அதன் பிறகு முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பாடி குவித்துள்ளார்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா ராணுவ வீரர்கள் புகழ்பாடும் பாடல் ஒன்றை பாடினார்.
ஆங்கிலத்தில்: சாஷா | தமிழில் : சைபர்சிம்மன்