Freshworks நிறுவனத்தின் சிஇஒ ஆக டெனிஸ் உட்சைடு நியமனம்; செயல் நிர்வாகத் தலைவர் ஆனார் கிரிஷ் மாத்ருபூதம்!
ஃப்ரெஷ்வொர்க்ஸில் சேருவதற்கு முன்பு, டென்னிஸ் உட்சைட் டிராப்பாக்ஸில் தலைமை இயக்க அதிகாரி மற்றும் மோட்டோரோலா மொபிலிட்டியின் CEO உட்பட பல பொறுப்புகளை வகித்தார். அவர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சர்வீஸ் நவ் குழுவில் பணியாற்றினார்.
கலிபோர்னியாவில் உள்ள சாஃப்ட்வேர் சர்வீஸ் (SaaS) நிறுவனமான
நிறுவனத்தின் செயல் நிர்வாகத் தலைவராக இனி கிரிஷ் மாத்ரூபூதம் இருப்பார் என்றும், தற்போது தலைவராக இருக்கும் டெனிஸ் உட்சைடு தலைமைச் செயலதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.டெனிஸ் உட்சைடு நிறுவனத்தின் பிரெசிடெண்ட் ஆக இருந்தவர் இப்போது சி.இ.ஓ.வாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்பு சி.இ.ஓ.வாக இருந்த மாத்ருபூதம் தற்போது தலைமை செயல் நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஃப்ரெஷ்வொர்க்ஸில் சேருவதற்கு முன்பு, டென்னிஸ் உட்சைட் டிராப்பாக்ஸில் தலைமை இயக்க அதிகாரி மற்றும் மோட்டோரோலா மொபிலிட்டியின் CEO உட்பட பல பொறுப்புகளை வகித்தார். அவர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சர்வீஸ் நவ் குழுவில் பணியாற்றினார்.
கிரிஷ் மாத்ருபூதம் வலைப்பதிவு இடுகையில் நிறுவனத்தின் மாற்றங்கள் பற்றி எழுதியுள்ளார்.
“இன்று, எங்கள் நிறுவனத்தின் வரலாற்றில் மற்றும் எனது தொழில் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை அறிவிக்கிறேன். ஃப்ரெஷ்வொர்க்ஸ்-இன் தலைமை சி.இ.ஓ. பதவியில் இருந்து விலகி, தலைமைச் செயல் நிர்வாகி பதவிக்கு மாற முடிவு செய்துள்ளேன். இந்த முடிவு சாதாரணமாக இலகுவாக எடுக்கப்பட்டதல்ல. மேலும், எங்களது கூட்டு தொலநோக்குப் பார்வை மற்றும் எங்கள் நிறுவனத்தின் எதிர்காலம் ஆகியவற்றில் ஆழ்ந்த நம்பிக்கையுடன் எடுக்கப்பட்ட முடிவாகும்,” என்று கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு, ஃப்ரெஷ்வொர்க்ஸ் 2023 டிசம்பரில் அதன் தயாரிப்பு போர்ட்ஃபோலியோவிற்குள் செயற்கை நுண்ணறிவை (ஜெனரல் ஏஐ) ஒருங்கிணைப்பதன் மூலம் டிசம்பரில் முடிவடைந்த காலாண்டில் வருவாயில் கணிசமான 20% வளர்ச்சியை அடைந்தது.
மேலும், கிரிஷ் மாத்ருபூதம், புதிய சி.இ.ஓ. டெனிஸ் உட்சைடு பற்றித் தெரிவிக்கும் போது,
“நானும் உட்சைடும் இப்போது 18 மாதங்களுக்கும் மேலாக இணைந்து வேலை செய்துள்ளோம், மேலும் டென்னிஸ் ஃப்ரெஷ்வொர்க்ஸ் வணிகத்தைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெற்றவர். எங்கள் வேலை மற்றும் இந்தியாவில் உள்ளவர்கள் மீதான அவரது அன்பு மற்றும் பாராட்டு, சிறந்த திறமைகளை ஈர்க்கும் மற்றும் உலகத் தரம் வாய்ந்த அணிகளை உருவாக்கும் திறன், மற்றும் ஃப்ரெஷ்வொர்க்ஸுக்கு அவர் கொண்டு வரும் செயல்பாட்டு சிறப்பானது, அவர் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பை ஏற்க சரியான தலைவர் என்பதில் எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது,” என்றார்.
2010ல் சென்னையில் நிறுவப்பட்ட ஃப்ரெஷ்வொர்க்ஸ், வாடிக்கையாளர் உறவு மேலாண்மை (CRM), ஐடி சேவை மேலாண்மை (ITSM) மற்றும் இணையவழி சந்தைப்படுத்தல் கருவிகளில் நிபுணத்துவம் கொண்டது. அக்டோபர் 2023 நிலவரப்படி, நிறுவனம் 60,000 வர்த்தகங்களைத் தாண்டிய வாடிக்கையாளர் தளத்தைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.