Gold Rate Chennai: நகை வாங்க பொன்னான வாய்ப்பு; இன்று சவரன் எவ்வளவு குறைஞ்சியிருக்கு தெரியுமா?
இன்று தங்கத்தின் விலை யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு தடாலடியாக குறைந்துள்ளது.
இன்று தங்கத்தின் விலை யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு தடாலடியாக குறைந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம் (04/02/2023)
கடந்த சில நாட்களாகவே கிடுகிடுவென உயர்ந்து வந்த தங்கம் விலை, நேற்றும், இன்றும் மளமளவென சரிந்து நகை வாங்க காத்திருந்த மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் போது, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,415 ரூபாய்க்கும், சவரன் 42,680 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (சனிக்கிழமை), 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து 5,335 ரூபாயாகவும், சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து 42,680 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 80 ரூபாய் குறைந்து 5,697 ரூபாய்க்கும், சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து 45,576 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலையை போலவே கடந்த சில தினங்களாக அதிகரித்து வந்த வெள்ளியின் விலையும் இன்று அதிரடியாக குறைந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமிற்கு ஒரு ரூபாய் 80 காசுகள் குறைந்து 74 ரூபாய் 20 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 1,800 ரூபாய் குறைந்து ஒரு கிலோ 74 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
சரிவுக்கான காரணம் என்ன?
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகளை உயர்த்தியதைத் தொடர்ந்து டாலரின் மதிப்பு உயரத் தொடங்கியுள்ளது. இதனால் முதலீட்டாளர்களின் கவனம் டாலர் மீது திரும்பியுள்ளதை அடுத்து, தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்துள்ளன. இதனால் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய நகரங்களின் தங்கம் விலை நிலவரம்:
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,335 (மாற்றம்: ரூ.80 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.42,680 (மாற்றம்: ரூ.640 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,697 (மாற்றம்: ரூ.80 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 45,576 (மாற்றம்: ரூ.640 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,240 (மாற்றம்: ரூ.70 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.41,920 (மாற்றம்: ரூ.560 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,716 (மாற்றம்: ரூ.77 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 45,728 (மாற்றம்: ரூ.616 குறைவு)