Gold Rate Chennai: ஏறுமுகத்தில் தங்கம் விலை - கிராம் ரூ.7,125-க்கு விற்பனை!
கிறிஸ்துமஸ் தொடங்கி தொடர்ந்து மூன்றாவது நாளாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இது, நகை வாங்க விரும்புவோருக்கு கவலை அளிக்கும் தகவலாக உள்ளது.
கிறிஸ்துமஸ் தொடங்கி தொடர்ந்து மூன்றாவது நாளாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இது, நகை வாங்க விரும்புவோருக்கு கவலை அளிக்கும் தகவலாக உள்ளது.
சென்னையில் வியாழக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.25 உயர்ந்து ரூ.7,125 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.200 உயர்ந்து ரூ.57,000 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.28 உயர்ந்து ரூ.7,773 ஆகவும், சவரன் விலை ரூ.224 உயர்ந்து ரூ.62,184 ஆகவும் இருந்தது.
தங்கம் விலை நிலவரம் - வெள்ளிக்கிழமை (27.12.2024):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.25 உயர்ந்து ரூ.7,150 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.200 உயர்ந்து ரூ.57,200 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.27 உயர்ந்து ரூ.7,800 ஆகவும், சவரன் விலை ரூ.216 உயர்ந்து ரூ.62,400 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (27.12.2024) 1 கிராம் வெள்ளி விலை ரூ.100 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,00,00 ஆகவும் மாற்றமின்றி விற்பனையாகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வெகுவாக வீழ்ச்சி கண்டுள்ளது. தங்கத்தின் தேவை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதும், ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,150 (ரூ.25 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.57,200 (ரூ.200 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,800 (ரூ.27 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.62,400 (ரூ.216 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை

Edited by Induja Raghunathan