Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: தங்கம் விலை உயர்வு; இருந்தாலும் நகை வாங்க காத்திருப்போர் மகிழ்ச்சி!

கடந்த வாரம் முதலே தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வந்த நிலையில், நேற்று யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு சரிந்தது. ஆனால் இன்று மீண்டும் தங்கம் விலை அதிகரித்த போதும், நகை வாங்க காத்திருப்போர் அதனைக் கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில் கடந்த காலத்தில் சில நூறு ரூபாய் அளவிற்கு உயர்ந்து வந்த தங்கத

Gold Rate Chennai: தங்கம் விலை உயர்வு; இருந்தாலும் நகை வாங்க காத்திருப்போர் மகிழ்ச்சி!

Friday November 18, 2022 , 2 min Read

கடந்த வாரம் முதலே தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வந்த நிலையில், நேற்று யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு சரிந்தது. ஆனால், இன்று மீண்டும் தங்கம் விலை அதிகரித்த போதும், நகை வாங்க காத்திருப்போர் அதனைக் கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏனெனில், கடந்த காலத்தில் சில நூறு ரூபாய் அளவிற்கு உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு 8 ரூபாய் மட்டுமே உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 4,950 ரூபாய்க்கும், சவரன் 39,600 ரூபாய்க்கும் விற்பனையானது.

இன்றைய நிலவரப்படி, (வெள்ளி கிழமை), 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து 4,951 ரூபாயாகவும், சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்து 39,608 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
gold

இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 1 ரூபாய் அதிகரித்து 5,353 ரூபாய்க்கும், சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்து 42,824 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்று வெள்ளியின் விலை கணிசமான அளவு சரிந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு 20 காசுகள் குறைந்து, 67 ரூபாய்க்கும், ஒரு கிலோவிற்கு 200 ரூபாய் குறைந்து 67,000 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

உயர்வுக்கான காரணம் என்ன?

ரஷ்யா - உக்ரைன் போர் பதற்றம், புவிசார் அரசியல் ஏற்றத்தாழ்வுகள், அமெரிக்க டாலர் குறியீட்டு எண் மற்றும் கருவூல விளைச்சலில் ஏற்பட்ட சரிவு காரணமாக தங்கத்தின் விலையில் நிலையற்ற தன்மை நிலவுவதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சீனாவும் அமெரிக்காவும் ஜி-20 உச்சிமாநாட்டில் தங்கள் உறவுகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை கைவிட்டதால், நேற்று டாலர் குறியீடு 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சுமார் ₹105 அளவுக்கு சரிந்துள்ளது. இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய நகரங்களின் தங்கம் விலை நிலவரம்:

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 4,951 (மாற்றம்: ரூ.1 அதிகரிப்பு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.39,608 (மாற்றம்: ரூ.8அதிகரிப்பு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,353 (மாற்றம்: ரூ.1 அதிகரிப்பு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 42,824 (மாற்றம்: ரூ.8 அதிகரிப்பு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.4,876 (மாற்றம்: ரூ.1 அதிகரிப்பு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.39,008 (மாற்றம்: ரூ.8அதிகரிப்பு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,319 (மாற்றம்: ரூ.1 அதிகரிப்பு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.42,552 (மாற்றம்: ரூ.8 அதிகரிப்பு)