Gold Rate Chennai: இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 குறைந்தது!
தங்கம் விலை இன்று (சனிக்கிழமை, 13-4-2024) காலை நிலவரப்படி சென்னையில் ஆபரண மற்றும் சுத்தத் தங்கம் ஆகியவற்றின் விலைகள் குறைந்துள்ளன.
தங்கம் விலை இன்று (சனிக்கிழமை, 13-4-2024) காலை நிலவரப்படி, சென்னையில் ஆபரண மற்றும் சுத்தத் தங்கம் ஆகியவற்றின் விலைகள் குறைந்துள்ளன.
சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.6,780க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.54,240 ஆகக் குறைந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம் (13-04-2024): சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கத்தின் விலை 1 கிராம் 25 ரூபாய் குறைந்து 6,780 ரூபாய்க்கும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் ரூ.28 குறைந்து ரூ.7,396 -ற்கும் விற்று வருகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.54,240 ஆகக் குறைந்துள்ளது.
இன்றைய தினம் வெள்ளி விலையும் சற்றே குறைந்து காணப்பட்டது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1. 00 குறைந்து 89 ரூபாயாகவும் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1000 குறைந்து 89,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தங்கம் விலை குறைவு- காரணம் என்ன?
வாரம் முழுதும் தங்கம் விலைகளில் மாற்றங்கள், ஏற்ற இறக்கங்கள் இருந்த போதிலும் சனிக்கிழமையான இன்று ஏப்ரல் 13-ம் தேதி விலை எடுத்த எடுப்பிலேயே குறைந்ததற்குக் காரணம் ஜுவெல்லரி நகை தயாரிப்பாளர்களின் குறை தேவை காரணமாக இன்று விலைகள் சற்றே குறைந்துள்ளன.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 6,780 (மாற்றம்: ரூ.25 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.54,240 (மாற்றம்: ரூ.200 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,396 (மாற்றம்: ரூ.28. குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.59,168 (மாற்றம்: ரூ.224 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 6,650 (மாற்றம்: ரூ.70 குறைவு)
22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 53,200 (மாற்றம்: ரூ.560குறைவு)
24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 7,255 (மாற்றம்: ரூ.76 குறைவு)
24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. ரூ.58,040(மாற்றம்: ரூ.608 குறைவு)