Gold Rate Chennai: ஷாக் கொடுத்த தங்கம் விலை; சவரனுக்கு ரூ.120 உயர்வு!
நேற்று கணிசமான அளவு குறைந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்துள்ளது.
நேற்று கணிசமான அளவு குறைந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்துள்ளது.
சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில், 22 காரட் ஆபரண தங்கம் 4,610 ரூபாய்க்கும், சவரன் 36,880 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (புதன் கிழமை), 22 காரட் ஆபரணம் தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து 4,625 ரூபாயாகவும், சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து 37,000 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 15 ரூபாய் அதிகரித்து 5,027 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து 40,216 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளியின் விலையைப் பொறுத்தவரை கிராமிற்கு 70 காசுகள் குறைந்து 60 ரூபாய்க்கும், கிலோவிற்கு 600 ரூபாய் குறைந்து 60,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
காரணம்: டாலர் மதிப்பு உயர்ந்து வருவது தங்கத்தின் விலையில் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறது. அதிக பணவீக்கம் மற்றும் சாத்தியமான அமெரிக்க மந்தநிலை பற்றிய அச்சம் தங்கத்தின் போக்கில் ஒரு உறுதியற்ற தன்மையை தூண்டியுள்ளதால் விலை ஏற்றம், இறக்கங்கள் ஏற்படுவதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய நகரங்களின் தங்கம் விலை நிலவரம்:
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 4,625 (மாற்றம்: ரூ.15 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.37,00 (மாற்றம்: ரூ.120அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,045 (மாற்றம்: ரூ. 16 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 40,360 (மாற்றம்: ரூ.128 அதிகரிப்பு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.4,580 (மாற்றமில்லை)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.36,640 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,045 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 39,976 (மாற்றமில்லை)