Gold Rate Chennai: ஆயுதபூஜையில் அதிரடி மாற்றம்; தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்வு!
ஆயுதபூஜை நாளான இன்று யாருமே எதிர்பாராத வகையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் வரை அதிகரித்துள்ளது நடுத்தர வர்த்தகத்தினர் மற்றும் நகை வாங்க காத்திருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆயுதபூஜை நாளான இன்று யாருமே எதிர்பாராத வகையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் வரை அதிகரித்துள்ளது நடுத்தர வர்த்தகத்தினர் மற்றும் நகை வாங்க காத்திருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில், 22 காரட் ஆபரண தங்கம் 4,4705 ரூபாய்க்கும், சவரன் 37,640 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (செவ்வாய் கிழமை), 22 காரட் ஆபரணம் தங்கத்தின் விலை கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து 4,775 ரூபாயாகவும், சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து 38,200 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 77 ரூபாய் உயர்ந்து 5,210 ரூபாய்க்கும், சவரனுக்கு 616 ரூபாய் அதிகரித்து 41,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுவரை இல்லாத அளவிற்கு வெள்ளியில் விலையில் இன்று அதிரடி மாற்றம் அரங்கேறியுள்ளது. வெள்ளி கிராமிற்கு 4.20 காசுகள் அதிகரித்து 66.70 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 4,200 ரூபாய் அதிகரித்து 66,700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
காரணம்: பண்டிகை கால தேவை காரணமாக தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது நிலையில், இது மேலும் அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய நகரங்களின் தங்கம் விலை நிலவரம்:
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 4,775 (மாற்றம்: ரூ. 70 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.38,200 (மாற்றம்: ரூ. 560 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,107 (மாற்றம்: ரூ. 15 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 40,856 (மாற்றம்: ரூ.120 அதிகரிப்பு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.4,735 (மாற்றம்: ரூ.50 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.37,880 (மாற்றம்: ரூ.400 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,166 (மாற்றம்: ரூ.55 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 41,328 (மாற்றம்: ரூ.440 அதிகரிப்பு)