Gold Rate Chennai: தங்கம் விலை கம்மி தான்; நகை வாங்க உடனே கிளம்புங்க!
இன்று தங்கத்தின் விலை கிராமிற்கு 12 ரூபாய் அளவிற்கு குறைந்துள்ளது நகை வாங்க காத்திருந்தோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்று தங்கத்தின் விலை கிராமிற்கு 12 ரூபாய் அளவிற்கு குறைந்துள்ளது நகை வாங்க காத்திருந்தோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை நிலவரம் (31/01/2023)
2023ம் ஆண்டின் தொடக்கத்திலேயே தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்திருந்தனர். அதற்கு ஏற்றார் போல் ஜனவரி மாதம் முதலே தங்கத்தின் விலை பல நாட்கள் உயர்ந்து வந்தன. இந்நிலையில் நேற்று தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில், இன்று அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக விலை குறைந்துள்ளது.
சென்னையில் கடந்த வார வர்த்தகத்தின் இறுதியில், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,350 ரூபாய்க்கும், சவரன் 42,800 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (செவ்வாய் கிழமை), இன்றைய நிலவரப்படி, (சனிக்கிழமை), 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 12 ரூபாய் குறைந்து 5,338 ரூபாயாகவும், சவரனுக்கு 96 ரூபாய் குறைந்து 42,704 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 12 ரூபாய் குறைந்து 5,700 ரூபாய்க்கும், சவரனுக்கு 96 ரூபாய் குறைந்து 45,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலையை போல் அல்லாமல் வெள்ளியின் விலை சற்றே குறைந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமிற்கு 20 காசுகள் குறைந்து 74 ரூபாய் 50 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 200 ரூபாய் குறைந்து ஒரு கிலோ 74 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
சரிவுக்கான காரணம் என்ன?
2023ம் ஆண்டுக்கான முதல் அமெரிக்க ஃபெடரல் வங்கியின் கூட்டத்தில் வட்டி விகிதம் தொடர்பாக என்ன மாதிரியான முடிவு எடுக்கப்படும் என்பதில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தி வருவதால், இன்று தங்கத்தின் மீதான முதலீடு கணிசமான அளவு குறைந்துள்ளது.
ஏனெனில், ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் பொருட்டு, டாலர் மற்றும் பாண்ட் குறியீடுகளின் மதிப்பு அதிகரிக்கும் என்பதால், முதலீட்டாளர்கள் அதன் மீதான முதலீடுகளை அதிகரிக்க திட்டமிடுவர். எனவே தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய நகரங்களின் தங்கம் விலை நிலவரம்:
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,338 (மாற்றம்: ரூ.12 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.42,704 (மாற்றம்: ரூ.96 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,700 (மாற்றம்: ரூ.12 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 45,600 (மாற்றம்: ரூ.96 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,250 (மாற்றம்: ரூ.15 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.42,000 (மாற்றம்: ரூ.120 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,727 (மாற்றம்: ரூ.17 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 45,816 (மாற்றம்: ரூ.136 குறைவு)