துல்லியமான வானிலை கணிப்புகள் மூலம் விவசாயிகளுக்கு உதவும் ’கோயம்பத்தூர் வெதர்மேன்’

இவரின் முகநூல் பக்கத்தை 6,800க்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். அவ்வப்போதைய வானிலை குறித்தும் குறைந்தபட்சம் மூணு மாதங்களுக்கான பருவகால முன்கணிப்புகள் குறித்தும் முகநூலில் தொடர்ந்து பதிவிடுகிறார்.

12th Sep 2019
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

இந்தியாவில் விவசாயமே மக்களின் வாழ்வாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. விவசாயத் துறையில் உற்பத்திக்கும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் போதிய அளவு நீர் கிடைப்பதும் பருவநிலையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பயிர் உற்பத்திக்கு பருவநிலையின் போக்கினை கண்காணிப்பது அவசியம். இதற்கு நிபுணத்துவம் தேவை என்பதால் இந்தப் பகுதியில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் சில அரசாங்க முயற்சிகளும் தனிநபர்களும் பங்களிக்கின்றன.


அவ்வாறு விவசாயிகளுக்கு உதவும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களில் ஒருவர்தான் ’கோயமுத்தூர் வெதர்மேன்’ என்றழைக்கப்படும் ஜி சந்தோஷ் கிருஷ்ணன். இவரது முகநூல் பக்கத்தை 6,800க்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.

1

சந்தோஷ் கிருஷ்ணன் ஒரு விவசாயியின் மகன் என்பதால் பருவநிலை குறித்த தகவல்கள் கிடைக்கப்பட்டால் விவசாயிகள் அதற்கேற்றவாறு பயிர்களை திட்டமிடலாம் என்பதை நன்கறிவார். எனவே முகநூல் பக்கத்தைத் தொடங்கினார். Edex Live உடனான உரையாடலில் அவர் கூறும்போது,

“நான் 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் 'கோயமுத்தூர் வெதர்மேன்' பக்கத்தைத் தொடங்கினேன். 2016-17ல் கோயமுத்தூரில், குறிப்பாக கிராமப்புறங்களில் வறட்சி ஏற்பட்டது. நான் விவசாயப் பின்னணியைச் சேர்ந்தவன் என்பதால் விவசாயிகள் சந்திக்கும் சிக்கல்களை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். இந்த சிக்கல்களுக்கு தீர்வினை ஆராய்ந்து அவர்களுக்கு உதவ விரும்பினேன்,” என்றார்.

சந்தோஷ் கிருஷ்ணா கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றவராக இருப்பினும் வானிலையை கணிப்பதில் சிறு வயது முதலே ஆர்வம் இருந்து வந்தது. இவர் தனது தாத்தாவிற்கு விவசாயத்தில் உதவியாக இருந்துள்ளதாகவும் வானிலையின் போக்குகளை கண்காணிப்பது குறித்து கற்றுக்கொண்டதாகவும் ’தி இந்து’ தெரிவிக்கிறது.

’தி இந்து’ உடனான உரையாடலில் அவர் கூறும்போது,

”என் தாத்தா கவனித்த விஷயங்களை அடிப்படையாகக் கொண்டே எனக்கு அனைத்தையும் கற்றுக்கொடுத்தார். நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது இதன் பின்னணியில் இருக்கும் அறிவியல் ரீதியான காரணங்களை ஆராயத் தொடங்கினேன். இணையத்தின் உதவியுடன் அழுத்தம், ஈரப்பதம், மழைப்பொழிவு, காற்று குவிதல் மற்றும் அது மழைப்பொழிவை பாதிக்கும் விதம் ஆகியவற்றைக் குறித்துத் தெரிந்துகொண்டேன்.”

நாடு முழுவதும் உள்ள வானிலை வல்லுநர்கள் அடங்கிய ’கியா வெதர் ப்ளாக்’ குறித்து 2011ம் ஆண்டு கேள்விப்பட்டார். அவர்களைத் தொடர்பு கொண்டு இவர் தனது சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக்கொண்டார்.

முகநூல் பக்கம் துவங்கினார்

முதல் வாரத்தில் சந்தோஷ் கிருஷ்ணனின் முகநூல் பக்கத்தை 15 பேர் பின் தொடர்ந்தனர். பருவமழை வரும் சமயத்தில் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. அவர் மேலும் கூறும்போது,

“தற்போது பல விவசாயிகள் விவசாயம் குறித்த தீர்மானங்களை எடுப்பதற்கு முன்பு என்னைத் தொடர்பு கொள்கின்றனர். ஏதேனும் விழா ஏற்பாடு செய்வதற்கான நாளை முடிவு செய்வதற்கு முன்பு வானிலையை கணித்து சொல்லுமாறு மக்கள் கேட்கின்றனர்,” என்றார்.

கிருஷ்ணன் குறைந்தபட்சம் அடுத்த மூன்று மாதங்களுக்கான பருவநிலை கணிப்புகளையும் அப்போதைய வானிலை நிலவரங்களையும் தனது பக்கத்தில் பகிர்ந்து கொள்கிறார். நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, நாமக்கல், கரூர், திருப்பூர், தேனி உள்ளிட்ட பகுதிகள் குறித்து தகவல்களை வழங்குகிறார்.


கிருஷ்ணன் European Centre for Medium Range Weather Forecasting, Global Forecasting System ஆகியவற்றின் மூலம் தகவல்களைப் பெறுகிறார். இவற்றைக் கொண்டு அவரால் வானிலையை கணிக்க முடிகிறது.

2
”நான் 2018-ம் ஆண்டு கஜா புயல் குறித்தும் 2019ம் ஆண்டு ஃபனி புயல் குறித்தும் முன்னரே கணித்தேன். மக்கள் பீதியடைவதைத் தடுக்க அது குறித்த தகவல்களை மூன்று நாட்களுக்கு முன்னரே என்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருந்தேன்,” என்று தெரிவித்ததாக ’தி இந்து’ குறிப்பிடுகிறது.

இவரது வீட்டின் மொட்டைமாடியில் வானிலையை உணரும் திறன் கொண்ட கருவியை நிறுவியுள்ளார். இது ஒரு கிலோமீட்டர் பரப்பளவு வரை செயல்படும். இதன் மூலம் அவரது அறையில் தனிப்பட்ட பயன்பாடுகளுக்காக வைக்கப்பட்டுள்ள மானிட்டரில் உள்ளீடுகளைத் தெரிந்துகொள்கிறார்.


கட்டுரை: THINK CHANGE INDIA


  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக

Our Partner Events

Hustle across India