வீட்டிலே மருத்துவ சேவை: உடல்நல சேவை மைய மேலாளர் ஆன மருத்துவர் அனிதா ஆரோக்கியசாமி!
"என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத சம்பவம் ஒன்று நடந்தது. நாங்கள் நான்கு வருடம் தேடிக் கொண்டிருந்தது போலவே, எங்களுக்கு சென்னையில் ஒரு வாடிக்கையாளர் கிடைத்தார். அப்பெண்ணிமணியின் மகன் அமெரிக்காவில் வாழ்கிறார். இந்தியாவில் அவரை பார்த்துக் கொள்ள யாரும் இல்லை. ஒரு நாள் இரவில் மாரடைப்பு ஏற்பட்டு அந்த முதியவர் இறந்து விட்டார். செய்தி அறிந்ததும் அவர் மகன் உடனடியாக இந்தியாவிற்கு வர கிளம்பினாலும், அவர் இங்கு வந்து சேரவே ஒரு நாளுக்கு மேல் ஆகிவிட்டது. அச்சமயத்தில் அவர் இறப்பை நினைத்து துக்கப்படவோ, அவருடன் இருக்கவோ ஒருவரும் இல்லை. நானும் என் ஊழியர்கள் மட்டும்தான் அங்கு இருந்தோம். அந்த ஒரு நாள் தான், இன்று நான் செய்து கொண்டிருக்கும் பணியின் முக்கியதுவத்தை எனக்கு உணர்த்தியது", என்று கூறினார் 36 வயதான அனிதா ஆரோக்கியசாமி. இவர் பிறரின் உடல்நலத்தைக் கவனித்து கொள்ளும் மேலாளராக மாறியுள்ள மருத்துவர் ஆவார்.
தற்போது இவர், 'இந்தியா ஹோம் ஹேல்த்கேர் சர்வீஸஸ்' (India home healthcare services) அமைப்பின் நகர தலைவராக உள்ளார். அவருடைய சம வயதில், வேலை பார்ப்பவர்களை விட, அவரது தொழில் லாபமின்றி இருந்தாலும், தான் செய்யும் தொழில் மீது அவருக்கு இருந்த நம்பிக்கையும் அர்ப்பணிப்பும் ஒவ்வொரு வாடிக்கையாளரையும் உயர்த்திக் கொண்டே போனது.
சேவையின் தேவை
மதுரையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் மூன்றாம் வருடம் படிக்கும்போது, தனக்கு மருத்துவத்தில் உடல்நல மேம்பாட்டில் தான் அதிகம் நாட்டம் இருப்பதை அனிதா உணர்ந்தார். குறைவான ஆதாரங்கள் கொண்ட அரசு கல்லூரியில் பயின்றதால், அவரால் நல்ல மேலாண்மை இன்றி' இருக்கும் மருத்துவமனையின் சூழலை புரிந்து கொள்ள முடிந்தது. அமெரிக்காவின் பால்டிமோர் நகரத்தில் இருக்கும் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைகழகத்தில் சுகாதார நிதி மற்றும் மேலாண்மை துறையில் முதுகலைப் படிப்பை முடித்ததுடன், அங்கிருக்கும் பல்கலைகழக மருத்துவமனையிலே இரண்டு வருடம் தொடர்ந்து பணிபுரிந்தார்.
பின் 2006-இல் இந்தியா திரும்பியதை அடுத்து, பெங்களூரில் உள்ள செயின்ட் ஜான் காம்பஸ்ஸில் இருந்த ஒரு தொடக்க மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். அதனையடுத்து குர்கான் சார்ந்த ஒரு சுகாதார மேலாண்மை ஆலோசனை ஏஜென்சியின் டேக்நோபாக் அட்வைசர்ஸுடன் (Technopac Advisors) பணிபுரிந்த காலத்தில், இந்தியா ஹோம் ஹேல்த்கேர் சர்வீஸஸ் (IHHC) அமைப்பில் பங்களிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. தன் பெற்றோர்கள் முதியவர்களாகுவதை மனதில் கொண்டு, அதற்காக இந்தியா திரும்பிய அனிதா, நிபுணத்துவம் நிறைந்த வீட்டு கவனிப்பு சேவையின் முக்கியதுவத்தை உணர்ந்தார்; அந்த அக்கறை வழங்கும் பொறுப்பை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார்.
நோயாளிகளுக்கு சிறந்த கவனிப்பை வழங்க வேண்டும் எனும் நோக்கத்தோடு, 2009-இல் ஜெர்மனி நாட்டவரான ஃபிரான்க் கோல்லர் என்பவரால் தொடங்கப்பட்டது தான் இந்தியா ஹோம் ஹேல்த்கேர் சர்வீஸஸ். இந்த அமைப்பு சென்னையில் தொடங்கப்பட்டு இருந்தாலும், மற்ற நகரங்களிலும், முதியவர்களைத் தனிப்பட்ட முறையில் கவனித்து கொள்வதன் தேவை அதிகரித்துக்கொண்டு வருவதை இந்த குழு உணர்ந்தது. பெங்களூரிலும் இதே போன்ற நிலை இருந்ததால், 2011-இல் ஐ.ஹச்.ஹச்.சி, தன் சேவையை பெங்களூரில் அமைத்தது. அந்த கிளைக்கு டாக்டர் அனிதா-வை நகர தலைவராக நியமித்தது. அதே நேரத்தில், இந்தியாவில் மூலோபாய பங்குதாரர்களை எதிர்நோக்கி இருந்த அமெரிக்கா-சார்ந்த "பயாட (BAYADA) ஹோம் ஹேல்த்கேர்" அமைப்பு, ஐ.ஹச்.ஹச்.சி அமைப்பில் முதலீடு செய்தது.
ஐ.ஹச்.ஹச்.சி, அதன் மூன்று நிலை கொண்ட கவனிப்பு மற்றும் மறுவாழ்வு சேவைகள் மூலம் நல்ல நர்சிங் சேவையை வழங்கி வருகிறது.
*முதியோரை கவனித்து கொள்ளுதல்,
* அறுவை சிகிச்சைக்கு பின் பராமரித்தல்,
*பக்கவாதம் சிகிச்சைகளை கவனித்து கொள்ளுதல்,
*இதய மறுவாழ்வை கவனித்து கொள்ளுதல்,
*நரம்பியல்-தசை சீர்கேட்டை கவனித்து கொள்ளுதல்,
*வலிநிவாரண பராமரிப்பு மற்றும்
*பிறந்த குழந்தைகள் கவனிப்பு
என பல சேவைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இதற்காக ஒரு நாளைக்கு 700-இல் இருந்து 2500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மருத்துவமனை மேம்பாடுத் துறையில் அனிதா கண்ட முரண்பாடுகள், அவரை உடல்நல கவனிப்பு மேம்பாட்டுத் துறையை தேர்ந்தெடுக்க வைத்துள்ளது. ஆனால் இப்படி ஒரு ஹோம்கேர் அமைப்பை தலைமை தாங்குவது, இவரை ஒரு புதிய சூழலுக்கும் வெளிப்படுத்தி உள்ளது.
ஐ.ஹச்.ஹச்.சி-இன் ஒரு கிளையை பெங்களூரில் அமைப்பதில், பல சவால்களை எதிர் கொண்டார் அனிதா. நோயாளிகளின் வீட்டிற்கு சென்று கவனித்துக் கொள்ளவதில் ஆர்வம்கொண்ட திறமை வாய்ந்த செவிலியர்களைப் பிடிப்பது கடினமான ஒன்றாக இருந்துள்ளது. நிறைய செவிலியர்கள் மருத்துவமனையில் பணிபுரிவதையே விரும்பினர்; ஹோம்கேர் சேவையை தாழ்வாக நினைத்தனர். புதிய பணியாளர்களுக்கு பயிற்சி கொடுத்ததும், நோக்குநிலை நிகழ்வு நடத்தியும், சவால்களை முறியடித்துள்ளார் அனிதா.
"எங்களின் நிறைய நோயாளிகள் 70 வயதுக்கு மேலான முதியவர்கள். அவர்களின் பிள்ளைகளெல்லாம் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். இந்த நோயாளிகளுக்கு நல்ல மருத்துவ கவனிப்பை விட, அன்பு தான் அதிகம் தேவைப்படுகிறது."
என்று கூறி, நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ கவனிப்பாளர்களை விட, நோயாளிகளின் மன உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் வண்ணம் ஆட்கள் தேவைப்படுவதை விளக்கினார், அனிதா.
அனுபவம் தந்த ஆக்கம்
அமெரிக்க மருத்துவமனையில் வேலை பார்த்த அனுபவம், நல்ல மருத்துவ மேம்பாட்டு துறைக்கான வழி முறைகளை அனிதாவுக்கு கற்று கொடுத்துள்ளது. அம்முறைகளை நம் இந்திய மேம்பாட்டு முறையிலும் செயல்படுத்த, உதவி உள்ளது.
"இந்தியாவில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் எல்லாம், பிரச்சனை ஏற்பட்ட பின்னரே செயலில் ஈடுபடுமாறு இருக்கின்றனர். மருத்துவமனை மேலாண்மை பொறுத்தவரையில் நாம் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்று இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இருக்கும் வித்தியாசத்தைக் குறித்து தெரிவித்தார் அனிதா.
இச்சேவை செய்வதில், ஒரு பெண்ணாக இருப்பதை நன்மையாக கருதுகிறார், அனிதா. பெண்ணாக இருப்பதால், நோயாளிகளின் குறைகளை பொறுமையாக கேட்கவும் முடிகிறது; அவர்களும் இவர் மீது நம்பிக்கைக் கொண்டு ஒத்துழைக்கின்றனர். முடிந்தவரையில் வாடிக்கையாளர்கள் ஐ.ஹச்.ஹச்.சி- ஐ சவுகரியமாக அணுகுமாறு அனிதா முயற்சி செய்து வருகிறார். ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் அவசரத் தேவைக்கு தொடர்பு கொள்ள இரண்டு நபர்களின் தொடர்பு எண்கள் வழங்கப்படும். ஒருவர், மேம்பாட்டு வேலைகளுக்கு பொறுப்பான கிளைன்ட் ரீலேசன்ஷிப் மேனேஜர் ஆவார். மற்றொருவர், பயிற்சி பெற்ற மருத்துவ ஊழியரான கிளினிக்கல் மேனேஜர் ஆவார். ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் செவிலியர்களை நியமித்து, அவர்கள் வேலையை சரிபார்க்கும் பணியை, கிளினிக்கல் மேனேஜர் மேற்கொள்வார்.
அனிதா தினமும் காலையில் அவர் கிளையின் அனைத்து அலுவகங்களின் செயல்களையும் மீளாய்வு செய்துவிட்டு, அதற்கு தொடர்பான ஆட்களிடம் பேசுவார். பின், ஒவ்வொரு அலுவலக இயக்குனர்களுடனும், செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவார். நிறுவனத்தின் வளர்ச்சி முழுக்கமுழுக்க ஆட்கள் செய்யும் வேலையை சார்ந்து இருப்பதால், புது ஆட்கள் எடுத்து, அவர்களுக்கு சிறந்த பயிற்சி அளிப்பதில் சிறிது காலம் தான் அனிதாவால் செலவழிக்க முடிகிறது. தேவைப்படும் போதெல்லாம் வியூக திட்டத்தோடு, அனிதா தொழில் வளர்ச்சியையும் பார்த்துக் கொள்கிறார்.
சொந்த வாழ்க்கையும் சேவையும்
"என்னுடன் துணை நிற்கும் குடும்பம் எனக்கு அமைந்ததற்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நான் நேரில் சந்திக்க வேண்டியவர்களைப் காலையிலே பார்த்து பேசி விடுவேன். தொலைபேசி தொடர்பு கொள்ள வேண்டியவர்களிடம் மாலையில் பேசுவேன். இதனால் என் இரு குழந்தைகளிடமும் என்னால் நேரம் செலவழிக்க முடிகிறது" என்றார் அனிதா.
ஐ.ஹச்.ஹச்.சி, தன் நிறுவனத்தை மேலும் நான்கு நகரங்களில் விரிவடைய செய்ய உள்ளது. தென் நகர பகுதிகளிலும் விரிவடைய செய்ய வழி பார்த்து கொண்டிருக்கின்றனர்.
அதிகமான முதியோர்கள் இருக்கும் மக்கள் தொகை கணக்கில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. மூத்த குடிமக்களின் உடல்நிலையின் அக்கறையை இது உணர்த்துகிறது.
"இந்த துறைக்கான தனி அடையாளம் உருவாக பலர் உதவி செய்வர். நெறிபடுத்தப்பட்ட சேவைகள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற ஊழியர்களின் உதவி கொண்டு, முதியவர்களுக்கு சிறந்த சேவை வழங்கவே வழி காண்கிறோம்,"
என்று கூறி விடைப்பெற்றார் அனிதா.