Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

ரூ.99.8 கோடி மதிப்பிலான ஏஐ டேட்டா நிறுவனத்தை கட்டமைத்த 16 வயது இந்தியச் சிறுமி!

16 வயதான பிரஞ்சலி அவஸ்தி தனது ரூ.99.8 கோடி மதிப்பிலான ஏஐ ஸ்டார்ட்-அப் நிறுவனமான Delv.AI மூலம் தொழில்நுட்ப உலகில் புயலைக் கிளப்பியுள்ளார்.

ரூ.99.8 கோடி மதிப்பிலான ஏஐ டேட்டா நிறுவனத்தை கட்டமைத்த 16 வயது இந்தியச் சிறுமி!

Wednesday October 11, 2023 , 2 min Read

அதிநவீன செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் ஆராய்ச்சித் துறையில் தரவுப் பிரித்தெடுப்பதில் புரட்சியை ஏற்படுத்துவதற்காக, Delv.AI என்ற ஸ்டார்ட்அப்பை அறிமுகப்படுத்திய இளம் தொலைநோக்கு பார்வையாளரான பிரஞ்சலி அவஸ்தியின் பயணம் வியக்கத்தக்கது.

16 வயதான பிரஞ்சலி அவஸ்தி தனது ஏஐ ஸ்டார்ட்-அப் Delv.AI மூலம் தொழில்நுட்ப உலகில் புயலைக் கிளப்பியுள்ளார். மியாமி டெக் வீக் நிகழ்வின்போது, ​​அவஸ்தி தனது நிறுவனத்தை ஜனவரி 2022-இல் நிறுவியதாகவும், வெற்றிகரமாக சுமார் ரூ.3.7 கோடி நிதியுதவியைத் தருவித்துக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

Pranjali awasthi

தொலைநோக்குடைய சிறுமி

பிரஞ்சலியின் தொழில்நுட்பப் பயணத்தின் உந்துவிசை அவரது கணினி பொறியியல் துறையின் நிபுணரான அவரது தந்தைதான். குறியீடுகள் எழுதும் தனது தொழில்நுட்பப் பயணத்தை 7 வயதில் தொடங்கினார் பிரஞ்சலி. சிறுவயதிலேயே பெரிய விஷயங்களை புரிந்து கொண்டு செயல்படும் அறிவுத்திறன் மிக்க குழந்தையாக பிரஞ்சலி இருந்தார்.

பிரஞ்சலிக்கு 11 வயதாக இருக்கும்போது அவரது குடும்பம் ஃபுளோரிடாவுக்குச் சென்றபோது, ​​​​கணினி அறிவியல் மற்றும் போட்டி கணித உலகம் திறந்து, தொழில்நுட்பத்தின் மீதான அவரது ஆர்வத்தை தீவிரப்படுத்தியது.

ஆயினும், ஃபுளோரிடா இன்டர்நேஷனல் யுனிவர்சிட்டி ஆராய்ச்சி ஆய்வகத்தில் 13 வயதில் அவர் பெற்ற இன்டர்ன்ஷிப் பயிற்சிதான் அவரது தொழில்முனைவோர் முயற்சிக்கு களம் அமைத்தது என்றால் மிகையாகாது. இந்த இன்டர்ன்ஷிப்பின் போது, ​​கோவிட் தொற்றுநோய் காரணமாக மெய்நிகர் வகுப்புகளில் உயர்நிலைக் கல்வியைக் கற்றுக்கொண்டிருக்கும்போதே இயந்திரக் கற்றலில் பிரஞ்சலி ஈடுபட்டார்.

பயிற்சியில் முளைத்த யோசனை

இந்த நேரத்தில்தான் OpenAI ChatGPT-3 பீட்டாவை வெளியிட்டது, இது AI-ஐ பயன்படுத்தி ஆராய்ச்சி தரவு பிரித்தெடுத்தல் மற்றும் சுருக்கவுரை தயாரித்தல் மற்றும் தரவுகளை ஒழுங்குபடுத்துவதற்கான அவரது யோசனையைத் தூண்டியது.

இந்தப் பயிற்சியின்போதுதான் Delv.AI நிறுவனம் பற்றிய யோசனை முளைத்தது. திறமையான முறையில் தரவு பிரித்தெடுத்தல் செயல்முறைகளுக்கான சந்தையில் ஒரு இடைவெளியை பிரஞ்சலி கண்டறிந்தார். அத்துடன் வளர்ந்து வரும் ஆன்லைன் தகவல் கடல் வழியாக வழிகாட்டும் ஆராய்ச்சியாளர்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டு தரவு ஓட்டைகளை அகற்ற முயன்றார்.

மியாமியில் AI ஸ்டார்ட்-அப் ஆக்ஸிலரேட்டரில் சேர்ந்தபோது அவரது பயணம் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியது. உயர்நிலைப் பள்ளியை தற்காலிகமாக விட்டுச் சென்றாலும் கூட, பிரஞ்சலியின் அர்ப்பணிப்பு அவரது கனவுகளைத் தொடரும் உறுதியை அளித்தது. Product Hunt-இல் Delv.AI-இன் பீட்டா வெளியீடு பெரிய வெற்றியைக் கண்டதாக அவர் தெரிவித்தார்.

Product Hunt என்பது எவரும் தங்கள் மென்பொருளை இலவசமாகப் பகிர உதவும் ஒரு தளமாகும். வளர்ந்து வரும் ஆன்லைன் பொருளடக்கங்களுக்கு மத்தியில் குறிப்பிட்ட தகவல்களை திறமையாக அணுகுவதில் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுவதே Delv.AI-இன் முதன்மையான குறிக்கோள் என்று அவஸ்தி கூறுகிறார்.

ஆன் டெக் மற்றும் வில்லேஜ் குளோபல் நிறுவனத்திடமிருந்து முதலீடுகளைப் பாதுகாக்க பிராஞ்சலிக்கு உதவுவதில் இந்தத் திட்டம் முக்கியப் பங்காற்றியது.

delv

ரூ.99.8 கோடி மதிப்பு நிறுவனம்

Delv.AI மொத்த நிதியில் $450,000 (சுமார் ரூ.3.7 கோடி) திரட்டியது. தற்போது தோராயமாக $12 மில்லியன் (ரூ.99.8 கோடி) மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. பிரஞ்சலியின் இந்தியப் பெற்றோருக்கு பிரஞ்சலியின் கல்வியே இன்றியமையாதது. ஆனால், பிரஞ்சலிக்கோ தனது பொறுப்புகள் மற்றும் வளர்ந்து வரும் நிறுவனத்தின் மீதான ஆர்வத்துக்கு முன்னுரிமை அளிப்பது பிரதானமாக இருந்தது. ஆகவே, கல்லூரி படிப்பை இப்போதைக்கு ஒத்திவைக்க முடிவு செய்துள்ளார்.

பிரஞ்சலி எதிர்காலத்தில் உயர்கல்வியை மறுபரிசீலனை செய்வதன் மூலம் தனது தொழில்முனைவோர் பயணத்துக்கு பயனளிக்கும் வணிகத் திறன்களைப் பெற வேண்டும் என்று எண்ணுகிறார்.

பிரஞ்சலியின் வெற்றி என்பது நுண்ணறிவுத் திறன் கொண்ட குழந்தைகளின் பெற்றோருக்கும் ஓர் உத்வேகமாக அமைந்துள்ளது.

தங்கள் குழந்தைகளை வழக்கமான எலிப்பந்தயக் கல்வி மற்றும் கடும் பணிப்போட்டி சந்தைக்குத் தயார்படுத்துவதாக இல்லாமல் உண்மையான திறமையைக் கண்டுப்பிடித்து, அதில் வளர்த்தெடுப்பது என்ற மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதற்கு பிரஞ்சலியின் இந்த வெற்றி, பெற்றோரின் சிந்தனையிலேயே சட்டக மாற்றங்களை விளைவிக்கக் கூடியது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.


Edited by Induja Raghunathan