Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

லாபப் பாதையில் ஓலா பயணிக்கத் துவங்கியது எப்படி?

அடுத்த 18 முதல் 24 மாதங்களில் ஓலா பொது பங்குகளை வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில், நிறுவனம் லாபப் பாதையின் பயணிக்க மேற்கொண்ட மாற்றங்கள் பற்றி ஒரு பார்வை!

லாபப் பாதையில் ஓலா பயணிக்கத் துவங்கியது எப்படி?

Saturday November 16, 2019 , 5 min Read

இந்தியாவில் உருவான யூனிகார்ன் நிறுவனமான ஓலா உற்சாகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. 6 பில்லியன் டாலர் மதிப்புள்ளதாக கருதப்படும் இந்த ரைடு சேவை ஸ்டார்ட் அப், இந்தியா, ஆஸ்திரேலியா, யு.கே மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் செயல்பட்டு வருகிறது.


நிறுவனம் விரிவாக்கத்திலும் ஈடுபட்டுள்ளது. கிளவுட் கிட்சன் சேவையில் இறங்கியுள்ளது. ’ஓலா எலெக்ட்ரிக்’ எனும் (இதுவும் யூனிகார்ன் நிறுவனம்) மின்சார வாகன நிறுவனத்தைத் துவக்கியுள்ளது. ஓலா டிரைவ் மூலம் செல்ப் டிரைவிங் பிரிவிலும் நுழைந்துள்ளது.

ஓலா

ஓலா நிறுவனர்கள்

இது வரை, 3.5 பில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ள இந்த ஸ்டார்ட் அப், டெமாசீக் மற்றும் சாப்ட்பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களை முதலீட்டாளர்களாக கொண்டுள்ளது. சச்சின் பன்சல் மூலம், தனிப்பட்ட முதலீட்டையும் ஈர்த்துள்ளது. தொழில்நுட்ப நிறுவனமான, மைக்ரோசாப்டிடம் இருந்து, 150 முதல் 200 மில்லியன் (ரூ.1,050- ரூ.1,400 கோடி) திரட்டுவதற்கான பேச்சுவார்த்தையில் நிறுவனம் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இவற்றை எல்லாம் விட முக்கியமாக, 2018 ஜூலையில் நிறுவனத்தின் இந்திய வர்த்தக செயல்பாடுகள், லாபகரமாக மாறிய நிலையில், ஒவ்வொரு ஓலா ரைடும் லாபம் ஈட்டுவதாக அமைந்துள்ளது. இன்னமும் ஒட்டு மொத்த வர்த்தகம் லாபகரமாக மாறவில்லை எனினும், கம்பெனிகள் பதிவாளர் அமைப்பிடம் நிறுவனம் தாக்கல் செய்துள்ள விவரங்கள் நல்லவிதமாக அமைந்துள்ளன. வருவாய் இரு மடங்காகி இருக்கும் நிலையில், நஷ்டம் பாதியாக குறைந்துள்ளது.

ரைடு பகிர்வு உலகில் பயன்படுத்தப்படும் மொழியில், இந்தியாவில் நிறுவனத்தின் நிகர நெட் டேக் (இ.என்.டி.ஆர்) நல்லவிதமாக அமைந்துள்ளது. அதாவது ஊக்கத்தொகை அளிப்பது மற்றும் வாடிக்கையாளர்களை பெறுவதற்கான செலவுகளை குறைப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. அது மட்டும் அல்லாமல், அடுத்த 18 முதல் 24 மாதங்களில் நிறுவனம் பொது பங்குகளை ( ஐபிஓ) வெளியிடவும் திட்டமிட்டுள்ளது.


இந்த ஆண்டு பெங்களூருவில் பலவிதமான கட்டுப்பாடுப் பிரச்சனைகளை எதிர்கொண்ட நிலையிலும், இந்த செயல்பாடுகளை பெற்றுள்ளது.

சலுகைகள் குறைப்பு

ஒவ்வொரு ரைடு சேவை நிறுவனமும், ஒரே விதமான வர்த்தகச் சுழற்சியை- தேவையை அதிகரிக்க வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் அளிப்பது, தேவையை நிறைவேற்ற போதுமான வாகனங்களை பெற்றிருப்பது (டிரைவர்களுக்கு ஊக்கத்தொகை), கூடுதல் வாகனங்கள் சேர்ப்பதை நியாயப்படுத்த போதுமானத் தேவை இருப்பதை உறுது செய்வது எனும் சுழற்சியை எதிர்கொள்கிறது.   

“எந்த ஒரு ரைடு சேவை வர்த்தகத்திலும், வர்த்தகத்தை அதிகமாக செலவிட வைக்கும் இரண்டு முக்கிய அம்சங்கள் (வாடிக்கையாளர்களை பெறுவது மற்றும் வாகனங்களை தக்க வைப்பது) இருப்பதாக ஓலாவில் உள்ள நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில், 125 மில்லியன் பயனாளிகள் மற்றும் ஒரு மில்லியனுக்கு மேல் டிரைவ் பங்குதாரர்களை ஓலா கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. தனது சேவை மூலம் ஆண்டுக்கு ஒரு பில்லியனுக்கு மேல் சவாரிகளை அளிக்கிறது.  


இரண்டு ஆண்டுகளுக்கு முன் நிலைமை வேறுவிதமாக இருந்தது. உபெர் நிறுவனத்துடன் ஓலா கடுமையாக போட்டியிடும் சூழல் இருந்தது. நிறுவனம், சந்தையில் மேலும் ஊடுருவுவதில் தீவிர கவனம் செலுத்தியது.

 “போட்டி நிறுவனங்கள் அதிக பணத்தை செலவு செய்து கொண்டிருந்தன, நாங்களும் செலவு செய்தோம். பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தோம்,” என்று இந்த ஆண்டு யுவர்ஸ்டோரியின் டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்ச்சியில், பவிஷ் அகர்வால் கூறினார். 2017 வரை இது நீடித்தது.
ஒலா
ஒவ்வொரு ரைடுக்கும் ஓலா, ரூ.200 வரை இழந்து கொண்டிருந்தது. டிரைவர்களுக்கான ஊக்கத்தொகை 25 சதவீத்ம் வரை இருந்தது. நிறுவனம் தனக்கான 20 சதவீத கமிஷனை பெற்று வரும் நிலையில் டிரைவர்கள் ஊக்கத்தொகை 5 முதல் 6 சதவீதமாக குறைந்துள்ளது.

2017 முதல் நிறுவனம், வாகனங்களை தக்க வைத்துக்கொள்வதற்கான செலவை குறைப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.


 “20 சதவீத கமிஷன் என்பது, 5 முதல் 6 சதவீத ஊக்கத்தொகை மேற்கொள்ள வழி செய்கிறது. ஊக்கத்தொகை குறைந்திருப்பதை மீறி, டிரைவர்களுக்கு தொடர் வருவாயை உறுதி செய்வதன் மூலம், அவர்களை தக்க வைத்துக்கொள்ள முடிகிறது,” என்றார் அவர்.

இந்த தொடர் வருவாய் எப்படி செயல்படுகிறது?

நிறுவனக் குழு, தனது சொந்த வாகன வர்த்தைகத்தைச் சுற்றி செயல்பட தீர்மானிக்கிறது. நிறுவனம் தற்போது, 1,00,0000 வாகனங்களை பெற்றுள்ளது. இதை டிரைவர்களுக்கு குத்தகைக்கு விடுவதன் மூலம் அவர்களிடம் இருந்து மாத வருவாய் பெறுகிறது.


ரைடுகள் மற்றும் டிரிப் எண்ணிக்கையை டிரைவர்கள் தேர்வு செய்ய வாய்ப்புள்ள சந்தை வர்த்தகத்தில், அவர்கள் வருமானம், ரைடு எண்ணிக்கை, ரேட்டிங், செயல்பாட்டு தரம் ஆகிய அம்சங்கள் அடிப்படையில் அமைகிறது.


மேலும் தள்ளுபடியை குறைப்பதன் மூலம், வாடிக்கையாளர்களை பெறும் செலவையும் 50 சதவீதம் குறைத்துள்ளது.

ஊக்கத்தொகை இல்லை

கம்பெனிகள் பதிவாளரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள தகவல்கள் படி, விளம்பரம் உள்ளிட்டவற்றுக்கான செலவு 2017 நிதியாண்டில், ரூ.438 கோடியில் இருந்து, 2018 நிதியாண்டில், ரூ.285 கோடியாக குறைந்துள்ளது.

இதற்கு மாறாக நிறுவனம் தனது சேவைகளை பரவலாக்கியுள்ளது.

“கடந்த 24 மாதங்களில், எங்களை வகைகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். சில நகரங்களில் பைக் அல்லது ஆட்டோவை தேர்வு செய்வதில் துவங்கி, எஸ்.யூவி அல்லது வாடகை அல்லது அவுட்ஸ்டேஷன் வாய்ப்பை தேர்வு செய்து கொள்வது வரையான வாய்ப்புகளை வழங்குகிறது,” என நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“வாடிக்கையாளர் எந்த வகையான போக்குவரத்தையும் தேர்வு செய்து கொள்ளும் வகையில், அனைத்து வகை சேவை அளிக்க விரும்புகிறோம்” என டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்ச்சியில் பவிஷ் அகர்வால் கூறினார்.


மேலும் ரைடு பகிர்வு வாய்ப்பும் இருக்கிறது. “பகிர்வு போக்குவரத்தை அதிகமாக்குவது இந்தியாவில் எங்கள் கவனமாக இருக்கும் என்றும் அவர் கூறினார். பரவலான வகைகள், லாப விகிதத்தின் சாதகத்தையும் ஓலாவுக்கு அளிக்கிறது. ஓலா ஆட்டோ மற்றும் மைக்ரோ ரைடு லாபம் குறைவாக இருந்தாலும் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.


பிரைம் பிரிவில் லாபம் அதிகமாக இருந்தாலும் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஓலா பிளே

 “ஓலாவுக்கான தனித்தன்மையாக அமைந்திருப்பது ஓலா பிளே மற்றும் ஆட்டோ கனெக்ட். உபெருக்கு எதிரான போட்டியில் நிறுவனத்திற்கான துருப்புச்சீட்டாக இது அமைந்தது.”

வாகனத்தில் 60 நிமிடம் வரை காத்திருக்க நேரும் போது, செயல்திறன் அம்சங்களுக்காக சிறிது கட்டணம் செலுத்தத் தயாராக இருக்கும் வாடிக்கையாளர்களின் தன்மையை பிளே பயன்படுத்திக்கொண்டது, என ஆரம்ப கால முதலீட்டாளரின் வட்டாரம் தெரிவிக்கிறது.


இதில் டேப் போன்ற சாதனம் காரில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள், பாட்டு கேட்கலாம், இ-புக் படிக்கலாம் மற்றும் இணையத்தில் உலாவலாம்.


வாடிக்கையாளர்கள் பிரவுசிங் வரலாறு உடனடியாக சேமிக்கப்படுவதால், ரைடை முடித்த பிறகும், படம் அல்லது பாட்டில் நிறுத்திய இடத்தில் இருந்து அடுத்த ரைடில் தொடரலாம்..  ஓலா மற்றும் ஓலா பிளே, தினமும் ரைடுகளில் இருந்து தகவல்கள் அடிப்படையில் புரிதலை பெறுகின்றன. இதன் மூலம் நிறுவனம் தனது சேவையை மேம்படுத்திக்கொள்ள முடிகிறது.


யுவர்ஸ்டோரியுடனான முந்தைய உரையாடலில், புளும் வென்சர்ஸ் மேனேஜிங் பாட்னர், சஞ்சய் நாத் கூறியது போல,

“புதுமைகள் தான் முக்கியம். ஓலா வழங்குவது போல மற்றவர்கள் வழங்குவதில் இருந்து வேறுபட்ட சேவைகள் அல்லது தொழில்நுட்ப மாற்றம் முக்கியம்.”

மாற்றம்

இந்த வர்த்தக மாற்றத்திற்கு ஏற்ப ஈடுகொடுக்க நிறுவனத்திற்குள்ளும் மாற்றம் வர ஓலா உழைத்துள்ளது. டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்ச்சியில் பேசிய பவிஷ் அகர்வால், பணம் இல்லாமல், மனிதர்கள் இல்லாமல், டென்ஷன் இல்லாமல் முதல் கட்ட வளர்ச்சி அருமையாக இருந்தது என்று கூறினார்.


2011 முதல் 2013 வரையான காலகட்டம் இது. அப்போது, தானே காரோட்டிச்செல்வது பற்றியும் அவர் நினைவு கூர்ந்தார். அதன் பிறகு நிறுவனம் வளர்ந்தது. பின்னர், ஓலா வளர்ச்சி அடைந்த நிலையில், ஓலா எலெக்ட்ரிக் ஸ்டார்ட் அப் கட்டத்தில் இருந்தது.

“சிறந்த நிறுவன அமைப்பை உருவாக்கி, முதல் கட்டத்தில் பணியாற்றியிராதவர்களை, ஆனால் நிலையான கட்டத்தில் சிறப்பாக பணியாற்றக்கூடியவர்களை கண்டறிய வேண்டும்.”

வளர்ச்சியை நிர்வகிப்பதே, கடந்த சில ஆண்டுகளாக சவாலாக இருந்து வருவதாகவும் அவர் கூறுகிறார்.

"நீங்கள் பணம் ஈட்டத் தேவையில்லாத நிலையில் வளர்ச்சியை நிர்வகிப்பது எளிது. ஆனால், உண்மையான வர்த்தகத்தை உருவாக்கும் போது எல்லாம் மாறுகிறது. பெரிய பன்னாட்டு நிறுவனம் போலவே பொறியில் சிக்கிக் கொள்ளும் அபாயம் இருப்பதால், தரையில் நடப்பதை கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்,” என்றார் அவர்.

ஆனால் இப்போது நிலைமை மாறியிருக்கிறது. “இந்தியாவில் லாபகரமாக வர்த்தகத்தை நடத்துகிறோம். மற்ற விஷயங்களை விட லாபம் தான் முக்கியம். நிலையான வர்த்தகத்தை உருவாக்கி இருப்பதால் சர்வதேச அளவில் செல்ல விரும்புகிறோம்.


உலக அளவிலான இந்திய நுகர்வோர் வர்த்தகத்தை உருவாக்குவது எங்கள் லட்சியம். இன்று உலக அளவில் இந்திய பிராண்ட் இல்லை. நம்மால் முடியாதது என்றில்லை, சூழல் சாதகமாக அமையவில்லை. உள்ளூர் சந்தை சிக்கலானது. ஆனால் அடுத்த பத்தாண்டுகளில், மேலும் பல இந்திய பிராண்ட்கள் உருவாகும்.போக்குவரத்தில் நாங்கள் முன்னிற்க விரும்புகிறோம்’ என்று பவிஷ் கூறினார்.


ஆங்கில கட்டுரையாளர்: சிந்து காஷ்யப் | தமிழில்: சைபர்சிம்மன்