நியூஸ் வியூஸ்

ரம்ஜான் ஸ்பெஷல்: இஸ்லாமியர்கள் உண்ணும் இஃப்தார் மெனு, இதில் பிரியாணி இல்லை!

Mahmoodha Nowshin
16th May 2019
48+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

இது ரம்ஜான் மாதம், உலகமெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் சூரியன் உதயத்திலிருந்து மறைவு வரை உணவு உண்ணாமல் நோன்பு நோற்கும் மாதம். இந்த புனித மாதத்தில் நோம்பிருந்து முடிவில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் அன்று, நம் இஸ்லாமிய நண்பர்கள் பகிரும் பிரியாணியை நம்மால் நிச்சயம் மறக்க முடியாது. ஆனால் ஒரு மாதம் கழித்து ரம்ஜான் பண்டிகை அன்று மட்டுமே சிறந்த உணவை உண்பார்கள் என்று நினைத்தால் அது தவறு.

தினமும் சூரியன் மறைவுக்கு பின், நோன்பு திறக்கும் பொழுது அதாவது இஃப்தாரின் (நோன்பு திறக்கும் நேரம்) போது வகைவகையான பண்டங்களை வைத்து தங்கள் நோன்பை முடிப்பார்கள். அப்படி எல்லா இஸ்லாமியர்கள் வீட்டிலும் முக்கியமாக தமிழகத்தில் தவிர்க்க முடியாமல் இருக்கும் சில சிறந்த உணவுகளை பார்ப்போம்.

ஆனால் இல்லை, இல்லை நிச்சயம் இந்த பட்டியலில் பிரயாணி இல்லை!! இந்தியாவில் தினமும் இஃப்தாரின் போது எவரும் பிரயாணி உண்பதில்லை.

பேரிச்சைபழம்

இஸ்லாமியர்கள் நோன்பு திறக்கும் நேரத்தில் முதலில் உண்பது பேரிச்சைபழம் தான். சிறிய பழமாக இருந்தாலும் அதில் அடங்கிருக்கும் ஊட்டச்சத்து ஏராளம். நாள் முழுவதும் உண்ணாமல் பேரிச்சை பழத்தை உண்பதால் புத்துணர்வு கிடைக்கும். அரபு நாட்டில் அதிகமாக இது விளைவதால் நோன்பு மட்டுமின்றி மற்ற நாட்களிலும் அதிகமாக இது உண்ணப்படுகிறது.

ஐயர்ன் ஊட்டச்சத்து நிறைந்த பழம் இது என்பதால் நாமும் இதை தினம் உண்ணலாம்.

பட உதவி: https://interaztv.com

சப்ஜா விதை (Basil seeds) ஜூஸ், ரூஆப்சா

நோன்பு பெரும்பாலும் உடல் சூட்டை அதிகரிக்கும் அதனால் குளிர்ச்சியான பழச்சார்களையும் உணவுகளையும் பகிர்வது வழக்கம். பெரும்பாலான இஸ்லாமியர்கள் சப்ஜா விதையை பாலிலோ தண்ணீரிலோ கலந்து குடிப்பது வழக்கம். அதே போன்று ரோஸ் மில்க் போன்றவை நிச்சயம் இருக்க வேண்டியவை.

பட உதவி: yummyindiankitchen & imgrumweb

நீங்களும் இதைக் குடிக்கலாம், சப்ஜா விதையை ஊறவைத்து பாலில் சக்கரையுடன் கலந்து குடிக்கலாம். சுவைக்கு ரோஸ் எசென்ஸ் அல்லது ஏதேனும் எசென்சை சேர்த்துக் கொள்ளலாம். தண்ணீரில் லெமன், சக்கரை மற்றும் சப்ஜா விதையை சேர்த்தும் குடிக்கலாம்.

ஹலீம் / நோன்பு கஞ்சி

ஹலீம் அல்லது நோன்பு கஞ்சி இல்லாத இஃப்தாரை எங்கும் பார்க்க முடியாது. இந்தியா மட்டுமின்றி அரபு நாடுகள், மற்ற ஆசிய நாடுகளில் உள்ள இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும்பாலும் இஃப்தாருக்கு வைக்கப்படும் உணவு இது. அரிசி, மாமிசம் வைத்து செய்யப்படும் இது நிச்சயம் சுவைக்க வேண்டிய ஒன்று. மேயின் உணவாக ஹலீம் அல்லது நோம்பு கஞ்சியை இஸ்லாமியர்கள் நோன்பு திறக்கும் நேரத்தில் பகிர்வர்.

பட உதவி: hungryforever.com & chitrasfoodbook.com

இது ரம்ஜான் மாதம் என்பதால் பல உணவகங்களும் ஹலீம் விற்பனையை துவங்கிவிட்டனர். நீங்களும் உணவகத்தில் இருந்து இந்த உணவை டேஸ்ட் செய்துப் பாருங்கள்.

கீமா சமோசா, கபாப்ஸ்..

சிற்றுண்டி இல்லாத இஃபத்தாரா? பெரும்பாலும் மாலை நேரங்களில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது வழக்கம் அது எப்படி நோன்பு திறக்கும் நேரத்தில் தவறிப்போகும். ஹலீமுடன் கீமா சமோசா, வடை, கட்லட், கபாப்ஸ் வைப்பது வழக்கம். ஒவ்வொரு நாள் ஒவ்வொரு சிற்றுண்டி நிச்சயம் இஃப்தாரின் போது இருக்க வேண்டும். இந்தியா மட்டுமல்ல உலகமெங்கிலும் இவ்வுணவுவகைகள் இல்லாத இஃப்தாரே இல்லை.

பட உதவி: யூடியுப்

இனிப்புகள் – சைனா கிராஸ், கஸ்டர்ட், புட்டீங்

ஒரு நல்ல சாப்பாடு இனிப்பில்லாமல் முடியாது. நோன்பு நாட்களில் எப்பொழுது செய்யும் பாயசம் பீர்னி போன்று இல்லாமல் புதுவிதமாகவெ சமைக்கின்றனர். முதலில் சைனா கிராஸ், இதை பாலில் சக்கரையுடன் கொதிக்கவைத்து அதன் பின் ஆறவைத்து கேக் போன்று இருக்கும் ஓர் உணவு. ஒரு சில இஸ்லாமியர்கள் வீட்டில் இது நிச்சயம் இருக்கும். அதை தவிர்த்து ஃப்ரூட் கஸ்டர்ட், கேரமல் புட்டிங் போன்ற எதோ ஒரு இன்னிப்பு வகை நிச்சயம் இருக்கும்.

பட உதவி: sharmispassions.com & vegrecipesofindia.com

இவைகளே நாம் பெரும்பாலும் இஃபதார் நேரத்தில் பார்க்கக் கூடிய மெனு வகைகள். நீஞ்களும் வீட்டில் செய்தோ அல்லது கடையில் வாங்கியோ சாப்பிட்டுப் பாருங்கள். அல்லது உங்கள் இஸ்லாமிய நண்பருக்கு ஒரு மெசேஜை தட்டி விடுங்கள்.

48+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags