Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

'கல்வியை விட ஆடம்பரத் திருமணங்களுக்கு அதிகம் செலவு செய்யும் இந்தியர்கள்' - அறிக்கையில் தகவல்!

சீனாவில் ஆண்டொன்றுக்கு 70 முதல் 80 லட்சம் திருமணங்கள் நடக்கிறது என்றால் இந்தியாவில் 80 லட்சம் திருமணங்கள் முதல் 1 கோடி திருமணங்கள் நடைபெறுகின்றன. அமெரிக்காவில் 20-25 லட்சம் திருமணங்கள் வருடத்திற்கு நடபெறுகின்றன, என்கிறது அறிக்கை.

'கல்வியை விட ஆடம்பரத் திருமணங்களுக்கு அதிகம் செலவு செய்யும் இந்தியர்கள்' - அறிக்கையில் தகவல்!

Tuesday July 02, 2024 , 3 min Read

இந்தியர்கள் திருமணத்திற்காக ஆண்டிற்குச் செலவு செய்யும் தொகையின் அளவு சுமார் ₹10 லட்சம் கோடி ($130 பில்லியன்). உணவு மற்றும் மளிகைப் பொருட்களுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் திருமணம் உள்ளது, சராசரியாக ஒரு இந்தியர் கல்வியை விட திருமண விழாவிற்கு இரண்டு மடங்கு செலவு செய்கிறார் என்று ஒரு அறிக்கை கூறுகிறது.

சீனாவில் ஆண்டொன்றுக்கு 70 முதல் 80 லட்சம் திருமணங்க்ள் நடக்கிறது என்றால் இந்தியாவில் 80 லட்சம் திருமணங்கள் முதல் 1 கோடி திருமணங்கள் நடைபெறுகின்றன. அமெரிக்காவில் 20-25 லட்சம் திருமணங்கள் வருடத்திற்கு நடபெறுகின்றன.

ஜெஃப்ரீஸ் என்னும் தரகு நிறுவனம் தன் அறிக்கையில் கூறும்போது,

“இந்திய திருமணத்துறை என்பது அமெரிக்காவை விட (சுமார் 70 பில்லியன் டாலர்கள்) இந்தியத் திருமண விழாக்களின் செலவு இருமடங்கு. ஆனாலும் சிறிய அளவில் சீனாவில் (170பில்.டாலர்) இந்தியாவை விட அதிகம் செலவு செய்கின்றனர்.

திருமணங்களை ஒரு தனி செலவினம் என்னும் வகைப்பாட்டில் சேர்த்தால் உணவு மற்றும் மளிகை (681பில் டாலர்கள்) செலவினங்களை விட திருமணச் செலவினம் இந்தியாவில் 2ம் இடத்தில் உள்ளது, என்று கூறியுள்ளது.

இந்தியாவில் திருமணங்கள் பலவிதமான சடங்குகளினால் விரிவானதாகவும் செலவு அதிகம் பிடிப்பதாகவும் உள்ளது. அதாவது, திருமணத்திற்குத் தேவையான நகைகள், ஆடைகள் ஆகியவற்றினால் அந்தத் துறைகளின் வர்த்தகத்தில் நுகர்வு அதிகமாகிறது. மறைமுகமாக ஆட்டோக்கள் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றிற்கும் திருமணங்கள் பயனளிப்பதாக அமைகிறது.

wedding

ஆடம்பரத் திருமணங்களைக் கட்டுப்படுத்துவதற்கான அரசியல் தரப்பு முயற்சிகள் இருந்தும் பளபளப்பான, கவர்ச்சியான இடங்களில் ஆடம்பரத்திருமணங்கள் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இது இந்தியர்களின் செழிப்பைக் காட்டுவதாக நம்பப்படுகிறது.

ஆண்டுதோறும் 80 லட்சம் முதல் 1 கோடித் திருமணங்கள் நடைபெறுவதால், உலகளவில் இந்தியா மிகப்பெரிய திருமணச் சந்தையாக உள்ளது. மொத்த செலவினம் ஆண்டுக்கு $130 பில்லியன் அளவில் மதிப்பிடப்பட்டுள்ளது, CAIT இன் படி, திருமணத் தொழில் அமெரிக்காவை விட இந்தியாவில் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது மற்றும் முக்கிய நுகர்வு வகைகளில் முக்கியப் பெரிய பங்களிப்பாளராகவும் திருமணங்கள் உள்ளன,” என்கிறது ஜெஃப்ரீஸ்.

இந்திய திருமணங்கள் பல நாள் மற்றும் பல நிகழ்வுகள், கொண்டாட்டங்களுடன் எளிமையானது முதல் மிக ஆடம்பரமானது வரை நிகழ்கின்றன. பிராந்தியம், மதம், சாதி மற்றும் பொருளாதார பின்னணி திருமணங்களில் பல நிலைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சந்திர சூரிய அமைப்பைப் பின்பற்றும் இந்து நாட்காட்டி சிக்கலானது, ஏனெனில் திருமணங்கள் குறிப்பிட்ட மாதங்களில் நல்ல நாட்களில் மட்டுமே நடைபெறும்.

மற்றபடி மதிப்பீடுகள் குறித்த பிரக்ஞை கொண்ட இந்திய சமூகம் திருமணங்களில் அதிகம் செலவு செய்கின்றன. அதாவது, வரவுக்கு மீறி தங்கள் சக்திக்கு மீறியே செலவு செய்கின்றனர். இதில் சாதி மத வேறுபாடில்லை, திருமணங்களை அலங்காரமாக நடத்தச் செலவு செய்வதில் ஒருவருக்கொருவர் சளைப்பதில்லை என்கிறது இந்த அறிக்கை.

ஒரு திருமணத்திற்கான சராசரி செலவு $15,000. இது தனிநபர் வருவாய் அல்லது வீட்டின் மொத்த வருவாயை விட பல மடங்கு அதிகம். அதாவது, கல்விக்குச் (ஆரம்பக் கல்வி முதல் பட்டப்படிப்பு வரை) செலவழிப்பதை விட திருமணங்களுக்கு இந்திய குடும்பங்கள் இருமடங்கு அதிகம் செலவழிக்கின்றன.
wedding

Representative image. (iStock photo)

மாறாக அமெரிக்காவில் கல்விக்குச் செலவழிக்கும் தொகையில் பாதிக்கும் குறைவான தொகையையே திருமணங்களுக்குச் செலவு செய்கின்றனர்.

ஆடம்பரமான, கவர்ச்சிகர உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு திருமண ஹால்கள், சத்திரங்கள், ஆடம்பர தங்குமிடங்கள், நட்சத்திர சமையல் குழுவினால் தயாரிக்கப்படும் அதிசெலவு சாப்பாட்டு ஐட்டங்கள், தொழில் முறை கலைஞர்கள் மற்றும் பிரபலங்களின் நிகழ்ச்சிகள் என்று இந்தியத் திருமணங்கள் ஒரு தனி அனுபவம் என்கிறது இந்த அறிக்கை. இதோடு திருமணங்களுக்கான அலங்காரச் செலவினங்கள் மிகவும் குறைத்தே மதிப்பிடப்பட்டு வருகின்றன.

அளவு மற்றும் செலவினங்களின் வால்யூம் என்ற அளவில் இந்தியாவில் நகைகள், ஆடைகள், கேட்டரிங், தங்குதல் மற்றும் பயணம் போன்ற பல துறைகளில் திருமணங்கள் முக்கிய வளர்ச்சி உந்துதலாக உள்ளன.

எடுத்துக்காட்டாக, நகைத் துறையின் வருமானத்தில் பாதிக்கு மேல் திருமண நகைகளால் வழிநடத்தப்படுகிறது, அதே சமயம் அனைத்து ஆடைச் செலவுகளில் 10% திருமணங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் மூலம் உந்தப்படுகிறது என்கிறது அறிக்கை.

ஆட்டோமொபைல், நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ், பெயிண்ட்கள் போன்ற பல்வேறு துறைகளுக்கு திருமணங்கள் மறைமுகமாக வர்த்தகத் தூண்டுதலாக உள்ளது. பல தொழில் துறையினர் முகூர்த்தக் காலக்கட்டங்களுக்காகவே சிறப்பு உத்திகளையும் சலுகைகளையும் வழங்கி அந்த தினத்தில் வர்த்தகப் பெருக்கத்தை எதிர்நோக்கி பல விஷயங்களைச் செய்கின்றனர்.