Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

நெட்பிளிக்ஸ் மூலம் புதிய மொழி கற்க உதவும் இணைய சேவை!

நெட்பிளிக்ஸ் மூலம் புதிய மொழி கற்க உதவும் இணைய சேவை!

Wednesday February 20, 2019 , 3 min Read

ஸ்டிரீமிங் சேவையான நெட்பிளிக்சில் திரைப்படங்கள் பார்க்கலாம், தொலைக்காட்சி தொடர்கள் பார்க்கலாம் என்பதெல்லாம் தெரிந்த விஷயம் தான். நெட்பிளிக்ஸ் மூலமே புதிய மொழியை கற்றுக்கொள்ளலாம் என்பது தெரியுமா? இதற்கு வழி செய்யும், புதிய இணைய சேவை அறிமுகமாகியுள்ளது.

’லர்னிங் லாங்குவேஜ் வித் நெட்பிளிக்ஸ்’ (languagelearningwithnetflix) எனும் பெயரிலான அந்த சேவை மூலம், நீங்கள் நெட்பிளிக்சில் அயல் மொழி படங்களை பார்க்கும் போதே, அந்த மொழியையும் கற்றுக்கொள்ளலாம். வேற்று மொழியை கற்றுக்கொள்வதில் இது கொஞ்சம் சுவாரஸ்யமான புதிய வழி என்று வைத்துக்கொள்ளுங்கள்.

திரைப்பட ஆர்வம் கொண்டவர்கள் காப்புரிமை சிக்கல் இல்லாமல், அதே நேரத்தில் சட்ட விதிகளையும் மீறாமல் படங்களை பார்த்து ரசிக்க நெட்பிளிக்ஸ் வழி செய்கிறது. கட்டணம் செலுத்தி சந்தாதாரானால் நெட்பிளிக்சில் படங்களாக பார்த்துக்கொண்டிருக்கலாம்.

நெட்பிளிக்ஸ் பழக்கம், பல நேரங்களில் திரைப்பட ஆர்வத்திற்கு தீனி போடுவதாக அமையலாம். சில நேரங்களில் மணிக்கணக்கில் நெட்பிளிக்சில் மூழ்கிக் கிடக்க நேர்வதால் அந்த சேவை நேரத்தை வீணடிக்க வைக்கலாம். இந்த பழக்கத்தையே கொஞ்சம் ஆக்கப்பூர்வமாக புதிய மொழிய கற்றுக்கொள்ளவும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் ’லர்னிங் லாங்குவேஜ் வித் நெட்பிளிக்ஸ்’ சேவை உருவாக்கப்பட்டுள்ளது.

குரோம் பிரவுசருக்கான நீட்டிப்பு வசதியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சேவை மூலம், திரைப்படம் பார்க்கும் ஆர்வத்தையும், புதிய மொழியை கற்றுக்கொள்ளும் ஆர்வத்தையும் ஒன்றாக இணைத்துக்கொள்ளலாம்.

நெட்பிளிக்ஸ் சேவையில் இருக்கும் சப்டைட்டில் வசதியைக் கொண்டு இதை ’லர்னிங் லாங்குவேஜ் வித் நெட்பிளிக்ஸ்’ சாத்தியமாக்குகிறது. நெட்பிளிக்சில் படம் பார்க்கும் போது, தெரியாத மொழி எனில், அந்த படத்திற்கு நம்மூர் மொழியில் சப்டைட்டில் சேவை இருக்கிறதா? எனப்பார்த்து அதை பயன்படுத்திக்கொள்ளால். இப்படி, தமிழ் உள்ளிட்ட எண்ணற்ற மொழிகளில் நெட்பிளிக்ஸ் சப்டைட்டில் வசதியை அளிக்கிறது.

இந்த வசதியை பயன்படுத்திக்கொண்டு,  ’லர்னிங் லாங்குவேஜ் வித் நெட்பிளிக்ஸ்’ நீட்டிப்பு சேவை வேற்று மொழி படம் பார்க்கும் போது, சப் டைட்டில்களை இரு மொழிகளிலும் தோன்றச்செய்து அதன் மூலம் வேறு மொழியில் உள்ள புரியாத சொற்களை கற்றுக்கொள்ள உதவுகிறது.

இந்த சேவையை நிறுவிக்கொண்ட பின், நெட்பிளிக்சில் படம் பார்க்கும் போது, நீங்கள் கற்க விரும்பும் மொழியை சப்டைட்டில் பகுதியில் தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு, திரைப்படத்தின் வசனங்கள், இரு மொழிகளிலும் மேலும், கீழும் ஒன்றாக தோன்றும். இரண்டையும் ஒப்பிட்டு பார்ப்பதன் மூலம் புதிய மொழி சொற்களை அறிமுகம் செய்து கொள்ளலாம்.

புதிய மொழி வார்த்தையின் மீது மவுசை கொண்டு சென்றால் அதற்கான அகராதி விளக்கமும் வரும். இதன் மூலம் அந்த சொல்லுக்கான அர்தத்தையும் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

இந்த சேவையை எப்படி பயன்படுத்த வேண்டும் என, விரிவான விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் திரையில் தோன்றும் சப்டைட்டிலை பார்க்காமலேயே திரைப்படத்தில் பேசப்படும் வசனங்களை காதில் வாங்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும் போது பேசப்படும் வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்டு, அதற்கான பொருளை அறிய முடிகிறதா என பார்க்க வேண்டும். இதன் பின், அந்த மொழியில் வசனத்தை படித்துவிட்டு மீண்டும் வசனத்தை கேட்டுப்பார்க்க வேண்டும். இப்போது ஓரளவு புரிய வாய்ப்பிருக்கிறது. உடனே அந்த வசனத்திற்கான மொழிபெயர்ப்பை நம் மொழியில் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

இப்படி ஒவ்வொரு வசனத்திற்காக செய்வதன் மூலம் புதிய சொற்களுக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ளலாம். அடிப்படையில் இருந்து துவங்குபவர்கள், ஓரளவு மொழி அறிந்தவர்கள் என இரண்டு கட்டங்களாக இந்த சேவையை பயன்படுத்தலாம். ஓரளவு மொழியை அறிந்தவர்கள் எனில் பரவலாக அறிந்த வார்த்தைகளை விட்டு விட்டு புரியாத வார்த்தைகளில் மட்டும் கவனம் செலுத்தலாம். அதற்கேற்ப சேவையை தேர்வு செய்து கொள்ளலாம்.

புதிய மொழி கற்கும் ஆர்வம் உள்ள எவரும் பயன்படுத்தலாம் என்றாலும், ஓரளவு பிற மொழி அறிந்தவர்களுக்கு இந்த சேவையை பயன்படுத்துவது எளிதாக இருக்கும். அதே நேரத்தில் இந்த சேவை மூலம் மட்டுமே அயல் மொழியை கற்றுக்கொள்ளலாம் என சொல்ல முடியாது.

ஆனால், அயல் மொழியை கற்றுக்கொள்ள முயற்சிக்க இது நிச்சயம் சுவாரஸ்யமான வழி. அலுவல் நிமித்தமாக வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் அந்த நாட்டு மொழி படங்களை இந்த சேவை மூலம் பார்த்து, அடிப்படையான சொற்களையும், பயன்பாட்டையும் கற்றுக்கொள்வது சாத்தியமே.

ஏற்கனவே மொழியை கற்றுக்கொள்வதில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்த சேவை கூடுதல் பயனுள்ளதாக இருக்கும். சப்டைட்டில் மூலம் மொழி கற்றுக்கொள்வதற்கான படங்களின் பட்டியல் இந்த சேவையின் தளத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நம்மூரில் உள்ள பலருக்கும் கொரிய மொழி அல்லது ஈரானிய மொழி படங்களை பார்க்கும் ஆர்வம் உள்ளது. நெட்பிளிக்ஸ் மூலம் படம் பார்த்து, இப்போது அந்த மொழிகளையும் கற்றுக்கொள்ள முயற்சிக்கலாம்.  

நெட்பிளிக்சில் படம் பார்த்து மொழி கற்றுக்கொள்வதற்கான சேவைக்கு : https://languagelearningwithnetflix.com/