சீனாவுக்குப் பிறகு தமிழ்நாட்டில் iPhone 16 Pro தயாரிப்பு: ரூ.267 கோடிக்கு உபகரணங்கள் வாங்கிய Foxconn!
ஆப்பிளின் உயர்நிலை ஐபோன் ப்ரோ சீரிஸ் சீனாவைத் தவிர வேறு நாட்டில் தயாரிக்கப்படுவது இதுவே முதல் முறை.
தைவானிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான ஃபாக்ஸ்கான், அதன் இந்திய தொழிற்சாலைக்காக $31.8 மில்லியன் (சுமார் ரூ.267 கோடி) மதிப்பிலான உபகரணங்களை வாங்கியுள்ளதாக, அதன் தமிழ்நாடு யூனிட்டில் ஐபோன் 16 ப்ரோ சீரிஸ் தயாரிப்பைத் தொடங்கத் தயாராகி வருவதாக ஒழுங்குமுறை தாக்கல் மற்றும் தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆப்பிளின் உயர்நிலை ஐபோன் ப்ரோ சீரிஸ் சீனாவைத் தவிர வேறு நாட்டில் தயாரிக்கப்படுவது இதுவே முதல் முறை. ஒழுங்குமுறை ஆணையத் தாக்கலில் ஃபாக்ஸ்கான் பதிவு செய்தபோது,
"ஆப்பிள் ஆபரேஷன்ஸ் லிமிடெட்"-இலிருந்து 31,804,528.45 அமெரிக்க டாலர்களுக்கான மொத்த பரிவர்த்தனை தொகையுடன் துணை நிறுவனமான Foxconn நிறுவனம் இயந்திர உபகரணங்களைப் பெறுகிறது,” என்று கூறியுள்ளது.
ஃபாக்ஸ்கானின் தமிழ்நாடு யூனிட்டில் ஐபோன் 16 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதற்கான திறனை மேம்படுத்தவும் அதிகரிக்கவும் இந்த கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் ஆப்பிள் இந்தியாவில் முதன் முதலாகத் தயாரிக்கப்படும் ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் தொடர்களை விரைவில் வெளியிடத் தொடங்கும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது. ஃபோன்களின் விநியோகம் இந்த மாத இறுதியில் அல்லது நவம்பர் தொடக்கத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் 16 ப்ரோ ரூ.1,19,900 மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ரூ.1,44,900 முதல் தொடங்குகிறது. ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகியவை ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.1,34,900 மற்றும் ரூ.1,59,900 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டன. iPhone 16 Pro மற்றும் iPhone 16 Pro Max ஆனது 128GB, 256GB, 512GB மற்றும் 1TB சேமிப்பகத் திறன்களில் 6.3 இன்ச் மற்றும் 6.9 இன்ச் ஐபோன் சீரிஸில் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்ட ஐஃபோன் 16 மற்றும் ஐஃபோன் 16 Plus விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஐபோன்-16 ரூ.79,900 மற்றும் ஐபோன் 16 பிளஸ் ரூ.89,900-ல் தொடங்குகிறது. ஐஃபோன்16 மற்றும் ஐஃபோன்16 பிளஸ் ஆகியவை 128GB, 256GB மற்றும் 512GB சேமிப்புத் திறன்களில் கிடைக்கும்.