'2% எண்ணம், 98% செயலாக்கம் தேவை' - யுவர்ஸ்டோரி நிகழ்ச்சியில் தொழில் முனைவோருக்கு அமைச்சர் வழங்கிய சக்சஸ் சீக்ரெட்!
டெல்லியில் நடைபெற்ற யுவர்ஸ்டோரியின் டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்ச்சியில் தொழில்முனைவோர்களிடம் உரையாற்றிய ஜோதிராதித்ய சிந்தியா, தனது தந்தை மாதவ்ராவ் சிந்தியா உலக சிந்தனைகளில் இருந்து உத்வேகம் பெறுவதைப் பார்த்து இளமையில் எப்படி ஈர்க்கப்பட்டேன் என்பதை நினைவு கூர்ந்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற யுவர்ஸ்டோரியின் ’டெக்ஸ்பார்க்ஸ்’ நிகழ்ச்சியில் தொழில்முனைவோர்களிடம் உரையாற்றிய மத்திய இணை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, தனது தந்தை மாதவ்ராவ் சிந்தியா உலக சிந்தனைகளில் இருந்து உத்வேகம் பெறுவதைப் பார்த்து இளமையில் எப்படி ஈர்க்கப்பட்டேன் என்பதை நினைவு கூர்ந்துள்ளார்.
டெல்லியில் யுவர்ஸ்டோரியின் முதன்மை நிகழ்வான TechSparks 2023 இன் போது தொழில்முனைவோர்களிடம் உரையாற்றிய சிந்தியா, தனது தந்தையும், முன்னாள் ரயில்வே அமைச்சரான மாதவராவ் சிந்தியா, “உலகளாவிய யோசனைகளில் இருந்து உத்வேகம் பெற்று, சதாப்தி எக்ஸ்பிரஸ் சேவை, டிக்கெட் பிளாட்ஃபார்ம் கணினிமயமாக்கல் உள்ளிட்ட அமைப்புகளில் ஒரே மாதிரியாகச் செயல்படுவதைப் பார்த்து வளர்ந்ததை நினைவு கூர்ந்தார்.
“என் தந்தை என் ரோல் மாடல். நோக்கத்தில் நேர்மை, உறவுகள், ஒரு காரணத்திற்கான அர்ப்பணிப்பு, வெவ்வேறு விஷயங்களைச் செய்யும் விதம் உள்ளிட்ட பலவற்றை நான் அவரிடம் கண்டேன்,” என்றார்.
யுவர்ஸ்டோரியின் நிறுவனர் ஷ்ரதா ஷர்மா உடனான உரையாடலில், அவர் தனது தந்தையுடன் 16 வயதில் ஜப்பானுக்கு பயணம் செய்ததை பற்றி பகிர்ந்து கொண்டர். அங்கு அவர்கள் நகரங்களை இணைக்கும் அதிவிரைவு பயணிகள் ரயில்களைப் பற்றி அறிந்து கொண்டனர்,.
மேலும், சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களை தொடங்குவதற்கு இதேபோன்ற தொழில்நுட்பத்தை தொடங்கினார். அவர் எனது டிக்கெட்டுகளுக்கு பணம் கொடுத்து என்னை அழைத்துச் சென்றார் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
“நான் அப்போது மிகவும் இளமையாக இருந்தேன். இந்த பயணம் பல மாற்றங்களை எனக்குள் ஊக்குவித்தது. குறைவான நிறுத்தங்களுடன் கூடிய பாயிண்ட் டு பாயிண்ட் சேவை ரயில்களை இந்தியாவில் உருவாக்க வேண்டும் என்று என் தந்தை கூறினார். பாரிஸ் பயணத்திற்கு பிறகு திரும்பி வந்த எனது தந்தை ஐஐடியுடன் கலந்துரையாடினார். குறைந்த நபர்களைக் கொண்ட ரயில்களை உருவாக்குவது குறித்து ஆலோசித்தார். அதனால் தான் இன்று நாம் இன்று சதாப்தி ரயிலில் கேசரோல் உணவை சாப்பிடுகிறோம்,” என்றார்.
புத்தாக்கம் மற்றும் அர்ப்பணிப்புடன் சிறந்த வெற்றிக்கான செயல்பாட்டில் வலுவான கவனம் செலுத்துமாறு ஸ்டார்ட்அப் நிறுவனர்களுக்கு அமைச்சர் தனது ஆலோசனையை வழங்கினார்.
“தொழில்முனைவோருக்கு 2 சதவீத எண்ணமும், 98 சதவீத செயல்படுத்துதலும் இருந்தாலே யோசனைகளை செயல்படுத்த முடியும்,” என்றார்.