மின்சார கட்டண சலுகை கிடைக்க ஆதார் இணைப்பு கட்டாயம் - யாரெல்லாம் செய்யனும்?
மின்சார மானியம் பெறுவதற்கு மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மின்சார மானியம் பெறுவதற்கு மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அக்டோபர் 6ம் தேதி அன்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“மானியத் திட்டங்களின் பலன்களைப் பெற விரும்பும் தகுதியுள்ள தனிநபர் ஆதார் எண் வைத்திருப்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும் அல்லது ஆதார் எண்ணுடன் மின் நுகர்வோர் எண்ணை இணைக்க வேண்டும்,” எனக்குறிப்பிட்டுள்ளது.
ஆதார் எண் இல்லாத மற்றும் இன்னும் மானியம் பெற விரும்புபவர்கள் ஏதேனும் ஆதார் பதிவு மையம் அல்லது நிரந்தர பதிவு மையத்தில் ஆதார் பதிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அந்த நபருக்கு ஆதார் அட்டை கிடைக்கும் வரை ஆதார் பதிவுக்கான அடையாள சீட்டு அல்லது ஆதார் பதிவுக்காக செய்யப்பட்ட கோரிக்கையின் நகல், வங்கி பாஸ்புக், வாக்காளர் அடையாள அட்டை ரேஷன் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை மானியம் பெறுவதற்கான ஆவணமாக பயன்படுத்தலாம்.
மாநில ஒருங்கிணைந்த நிதியில் இருந்து மின்சாரத்திற்கான மானியத் திட்டம் செயல்படுத்தப்படுவதால், ஆதார் சட்டம் 7-வது பிரிவின் கீழ் தமிழ்நாடு அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
யாரெல்லாம் ஆதாரை எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்?
(i) முதல் 100 யூனிட் மின்சாரத்தை இருமாதம் இலவசமாகப் பெறுபவர்கள் மற்றும் 500 யூனிட்கள் வரை பயன்படுத்தும் உள்நாட்டு நுகர்வோருக்கு இருமாதத்திற்கு ஒருமுறை 100 யூனிட்டுகளுக்கு மேல் 200 யூனிட்கள் வரை கட்டணத்தைக் குறைப்பது போன்ற மானியத் திட்டங்களில் பயன் பெறுவோர்.
(ii) இலவச மின்சார விநியோகத்தைப் பெறும் குடிசை நுகர்வோர்.
(iii) வேளாண் நீர்பாசனத்திற்காக இலவச மின்சாரம் பெறும் விவசாயிகள்.
(iv) இரு மாதத்திற்கும் 120 யூனிட்கள் வரை இலவச மின்சாரம் பெறகூடிய அனைத்து பொது வழிபாட்டுத் தலங்கள்.
(v) இருமாதத்திற்கு ஒருமுறை முதல் 750 யூனிட்கள் இலவசம் மற்றும் 750 யூனிட்டுகளுக்கு டெட் ஃபண்டிற்கான கட்டணக் குறைப்பு பெறும் விசைத்தறி நுகர்வோர்.
(vi) முதல் 200 யூனிட்களை இருமாதம் இலவசமாகப் பெறும் கைத்தறி நுகர்வோர்.
6 ஆண்டுக்கு முன் காணாமல் போன வாய் பேச முடியாத சிறுவனை கண்டுபிடிக்க உதவிய ‘ஆதார் அட்டை’