இறைச்சி கடைகளுக்கான தொழில்நுட்ப சேவை ஸ்டார்ட் அப் ‘The Meat Chop' ரூ.7கோடி நிதி திரட்டியது!
மீட் சாப் (The Meat Chop ) நிறுவனம் இந்த நிதியை விரிவாக்கம், குழுவை வலுப்படுத்த, பிராண்டை வலுவாக்க, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் சப்ளை சைன் உள்கட்டமைப்பிற்காக பயன்படுத்த உள்ளது.
சென்னையைச் சேர்ந்த உள்ளூர் இறைச்சி கடைகளுக்கான தொழிநுட்ப சேவை நிறுவனமான 'தி மீட் சாப்' ‘', இப்போபே இணை நிறுவனர் மோகன்.கே, டன்சோ இணை நிறுவனர் ஆங்கூர் அகர்வால், இப்போபே இணை நிறுவனர் மீனாட்சி சுந்தரம், ஜெய்குமார், கேபிடர் வெப்சர்ஸ் நிறுவனர் ராகுல் மகிபால், யூஏஇ நிதி நுட்ப நிறுவனம் Foloosi நிறுவனர் ஒமர் பின் பிரெக், கூகுளின் அமீத் டிசோசா மற்றும் இதர சர்வதேச ஏஞ்சல் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.7 கோடி விதை திரட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

The Meat Chop நிறுவனம் இந்த நிதியை விரிவாக்கம், குழுவை வலுப்படுத்த, பிராண்டை வலுவாக்க, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் சப்ளை செயின் உள்கட்டமைப்பிற்காக பயன்படுத்த உள்ளது.
தரவுகள் சார்ந்த, தொழில்நுட்பம் அடிப்படையிலான அமைப்பை கொண்ட நிறுவனம் உள்ளூர் இறைச்சி கடைகள் மேம்பட்ட வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் ஆன்லைன் விற்பனையில் பெரிய நிறுவனங்களுடன் போட்டியிட திறனை அளிக்கிறது.
“சந்தையை வெகு காலமாக பாதித்து வரும் சப்ளை மற்றும் தேவை இடையிலான இடைவெளியில் உள்ள தகவல் குறைகளை போக்குவது தான் எங்கள் நோக்கம். 70 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட இறைச்சி மற்றும் கடல் உணவு சந்தையின் 99 சதவீதம் உள்ளூர் கடைகளால் கையாளப்பட்டாலும், பொருட்களின் குறைந்த ஆயுள்காலம், தொழில்நுட்ப அணுகல் இல்லாதது போன்ற காரணங்களால் அதன் பயனை அனுபவிக்க முடியவில்லை,” என்கிறார் தி மீட் சாப் சி.இ.ஓ அப்பாஸ்.
2021ல் அப்பாஸ், கல்யாண், நவாஸ், யாசர் ஆகியோரால் துவக்கப்பட்ட ‘தி மீட் சாப்’ நிறுவனம், கொள்முதல், மார்க்கெட்டிங், விளம்பரம், விற்பனையாக்கம் ஆகியவற்றை இறைச்சி கடைகள் சார்பில் தனது மேடையில் மேற்கொள்கிறது. இதற்கான தொழில்நுட்பம் மற்றும் சீரான செயல்முறை திட்டம் அளிக்கிறது.
“ஒருங்கிணைந்த தொழில்நுட்ப மேடை மூலம் குறைந்த லாப விகிதம் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதே எங்கள் நோக்கம்,” என்கிறார் சி.டி.ஓ.கல்யாண்.
இந்த மேடையில் இணைந்துள்ள இறைச்சி கடைகள் 60 சதவீதம் வரை விற்பனை உயர்வை கண்டுள்ளது.
“இந்த எண்ணத்தை தழுவிக்கொண்டு, இடைத்தரகரை நீக்கும் தொழில்நுட்ப மேடையை உருவாக்கும் பயணத்தில் பங்குதாரராக இணைய 15 நிமிடங்கள் தான் தேவைப்பட்டது,” என்கிறார் இப்போபே இணை நிறுவனர் மோகன்.கே.
“பெரிய நிறுவனங்கள் அனுபவிக்கும் பலன்களை சிறிய கடைகளுக்கு நிறுவனம் கொண்டு வருவதாக டன்சோ இணை நிறுவனர் அங்கூர் அகர்வால், கூறியுள்ளார்.
Edited by Induja Raghunathan

