Brands
YS TV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

23 வயதில், 104 நாடுகளில் விற்பனை; ரூ.145 கோடி விற்றுமுதல் - டீ பிராண்டை உருவாக்கிய இளைஞர்!

இந்திய தேயிலை பிராண்ட்களை சர்வதேச சந்தையில் வலுப்பெறச்செய்யும் நோக்கத்துடன் 2015 ல் பாலா சர்தா,Vahdam Teas நிறுவனத்தை துவக்கினார். 170 எஸ்.கே.யூக்களுடன் நிறுவனம் இந்த நிதியாண்டு ரூ.145 கோடி விற்றுமுதல் ஈட்டியுள்ளது.

23 வயதில், 104 நாடுகளில் விற்பனை; ரூ.145 கோடி விற்றுமுதல் - டீ பிராண்டை உருவாக்கிய இளைஞர்!

Wednesday January 25, 2023 , 4 min Read

ஐபி.ஈ.எப் அறிக்கைபடி, தேயிலை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடம் வகிக்கிறது. அது மட்டும் அல்லாமல், உலகம் முழுவதும் தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிகம் பருகப்படுவதாக டீ விளங்குகிறது.

பருவநிலை மற்றும் பூகோள அடிப்படையில் இந்தியா தேயிலை உற்பத்திக்கு ஏற்றதாக அமைகிறது. இந்தியாவின் வடகிழக்கு, வடக்கு வங்காளம் மற்றும் தென்னிந்தியா தேயிலையை அதிகம் உற்பத்தி செய்கிறது.

டீ

அண்மை ஆண்டுகளில், இந்தியாவின் டார்ஜிலிங் டீ, சர்வதேச சந்தையில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளது. யுகே பிராண்ட் Twinings Tea மற்றும் ஸ்டார்பக்ஸ் துணை நிறுவன, Teavana இந்திய தேயிலை சுவை கொண்டு வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகின்றன.

இந்திய டீக்கு பரவலான தேவை இருந்தாலும், ஒரு பிராண்டாக இந்தியா வெளிநாடுகளில் திறம்பட முன்னிறுத்தபடவில்லை என பாலா சர்தா உணர்ந்தார்.

“இந்தியாவில் இருந்து தேயிலையை தருவித்து இந்த வெளிநாட்டு பிராண்ட்கள் விற்கின்றன, நுகர்வோரும் அவற்றை விரும்புகின்றனர். ஆனால், மேட் இன் இந்தியா என்பது விற்பனை அம்சமாக இருக்கவில்லை. இந்திய பிராண்ட்கள் விற்பனை செய்தால் தரம் சரியாக இருக்காது எனும் எண்ணம் இருக்கிறது,” என்று எஸ்.எம்.பி ஸ்டோரியிடம் பேசிய போது Vahdam Teas நிறுவனர் கூறினார்.

கல்லூரிப் படிப்பை முடிதத்தும் பாலா, டார்ஜிலிங்கில் உள்ள தனது குடும்ப தேயிலை தோட்டத்திற்கு சென்றார். அப்போது தான் இந்திய டீக்கு உள்ள வாய்ப்பையும், சர்வதேச அளவில் உண்டாகக் கூடிய மதிப்பையும் உணர்ந்தார்.

2015ல், 23 வயதில் அவர் உலகிற்கு இந்தியாவின் நேர்த்தியான டீயை வழங்கும், சர்வதேச ஒருங்கிணைந்த நல பிராண்ட் Vahdam Teas உருவாக்கினார். தில்லியை தலைமையகமாகக் கொண்டு நிறுவனம் செயல்பட்டது.

“Vahdam வெளிநாட்டு சந்தையில் வரவேற்பை பெற்றது. எனினும், வெளிநாடுகளில் இந்திய பிராண்டை நிறுவுவது எங்கள் நோக்கம் என்பதால், இந்தியாவில் பேக் செய்யப்பட்டது என பெட்டியில் தெரிவித்திருந்தோம். இது அமெரிக்காவில் வரவேற்பு பெறவில்லை,” என்று அமெரிக்க சந்தை அறிமுகம் பற்றி பாலா கூறுகிறார்.

இந்திய பிராண்ட்கள் தரமற்றவை எனும் எண்ணம் இருப்பதால் இந்த அறிவிப்பை நீக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்.

இதில் முரண் என்னவெனில் உலக தேயிலை உற்பத்தியில் இந்தியா 25 சதவீதம் பூர்த்தி செய்கிறது. ஹெர்பல் டீக்கான மூலப்பொருட்களான துளசி, கிலாய், அஸ்வகந்தா, மூலிகைகளை, வாசனை திரவியங்கள் தவிர தேயிலை ஏற்றுமதியில் இந்தியா 4வது இடம் வகிக்கிறது.

சர்வதேச பிராண்ட்கள் தேயிலை மற்றும் சூப்பர் உணவுகளை இந்திய உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கி தங்கள் பிராண்ட் கீழ் விற்பதாக பாலா கூறுகிறார்.

“வெளிநாடுகளில் இந்திய பிராண்டை அறிமுகம் செய்து இந்திய டீயை பிரபலமாக்கும் முயற்சியை பெரும்பாலான பிராண்ட்கள் மேற்கொள்வதில்லை. ஸ்டார்பக்ஸ் மஞ்சள் சுவையை அறிமுகம் செய்துள்ளது. மேற்கத்தியர்கள் நம்முடைய பொருட்களின் நலனை பிரபலமாக்கும் போது, நாம் ஏன் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளக்கூடாது?” என்று கேட்கிறார் பாலா.
டீ

USDA  சான்றிதழ் பெற்ற பிறகு மற்றும் ஜி.எம்.ஓ அல்லாத சோதனைக்கு பிறகு அவர் அமெரிக்காவில் தனது பிராண்டை அறிமுகம் செய்தார். பின்னர், யூகே, கனடா, ஜெர்மனி போன்ற சந்தைகளை பரிசீலித்தார்.

அமெரிக்காவில் 1000 விற்பனை நிலையங்களில் Vahdam கிடைக்கிறது. அமெரிக்காவில் நார்ட்ஸ்ட்ராம், நீமன் மார்கஸ், பெர்க்ட்ராப் குட்மன் உள்ளிட்ட பிரிமியம் மற்றும் பாரம்பரிய விற்பனை நிலையங்களில் இடம் பெற்றுள்ள முதல் சில இந்திய பிராண்ட்களில் ஒன்றாக இருக்கிறது. 1.5 மில்லியன் அமெரிக்க வாடிக்கையாளர்களை பெற்றிருப்பதாக பாலா கூறுகிறார்.

ஐந்தாண்டுகள், Vahdam Teas நான்கு சுற்றுகளில் ரூ.110 கோடி நிதி திரட்டியுள்ளது.

பைர்சைடு வென்சர்ஸ், சிக்ஸ்த் சென்ஸ் வென்சர்ஸ், மும்பை ஏஞ்சல்ஸ் போன்ற வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்கள், மான்கைண்ட் பார்மா, எஸ்.ஏ.ஆர் குழுமம், உர்மின் குழுமம் ஆகியவற்றின் குடும்ப அலுவலகங்கள், தேவதை முதலீட்டாளர்கள் கிரிஸ் கோபாலகிருஷ்ணன், ஜொமோட்டோ நிறுவனர் பங்கஜ் சத்தா, பேயூ நிறுவனர் அம்ரிஷ் ராஜு உள்ளிட்டோர் இதன் முதலீட்டாளர்களாக உள்ளனர்.

சப்ளை செயின்

நிறுவனம், வழக்கமான ஏலம் அல்லாமல், தேயிலை தோட்டங்களில் இருந்து நேரடியாக மூலப்பொருட்களை கொள்முதல் செய்கிறது. தொழில்நுட்பத்தை சாதகமாக்கி கொண்டு, நொய்டாவில் உள்ள 1,00,000 சதுர அடி ஆலையில்,ஆய்வு, பிளண்டிங் மற்றும் பேக்கேஜிங் செய்யப்படுகின்றன.

டார்ஜிலிங், அசாம், நீலகிரி மற்றும் கங்க்ரா உள்ளிட்ட 100க்கும் மேலான தேயிலை உற்பத்தி இடங்களில் இருந்து நிறுவனம் தருவிக்கிறது. மஞ்சள் உள்ளிட்ட சூப்பர் உணவுகளை, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தருவிக்கிறது. இஞ்சியை மகாராஷ்ட்ரா, கர்நாடகா மற்றும் அஸ்வகந்தாவை மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் இருந்து, மோரிங்காவை தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து தருவிக்கிறது.

துவக்கத்தில் பிளாக் டீ, கிரீன் டீ, ஓலாங் டீ மற்றும் ஒயிட் டீ உள்ளிட்ட  தேயிலையை சில்லறையாக விற்பனை செய்தது. தற்போது 175 எஸ்.கே.யூக்களுடன், பிரமிட் டீ பேக்ஸ், சூப்பர் உணவுகள், பரிசு செட்கள், டீவேர் , டிரிங்க்வேர் உள்ளிட்டவற்றை விற்பனை செய்கிறது. இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் விநியோக அமைப்பு கொண்டுள்ளது.

2021 நிதியாண்டில் நிறுவனம் ரூ.155 கோடி விற்றுமுதல் கொண்டிருந்தது. இதுவரை ரூ.145 கோடி விற்றுமுதலாக பெற்றுள்ளது. நிறுவன வருவாயில் 50 சதவீதம் அமெரிக்காவில் இருந்தும், 30 சதவீதம் ஐரோப்பாவில் இருந்தும், 20 சதவீதம் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் வருவதாக,” பாலா கூறுகிறார்.
டீ

சவால்கள்

இந்தியாவில் ஒருங்கிணைக்கப்பட்ட தொழிலாளர்களை கொண்ட மிகப்பெரிய துறைகளில் ஒன்றாக தேயிலை விளங்குகிறது. எனினும், குறைந்த ஊதியம் உள்ளிட்ட பிரச்சனைகளை இத்துறை எதிர்கொண்டு வருகிறது.

தேயிலை விலை அதிகரிக்கும் செலவுகளுக்கு ஏற்ப உயராமல் இருப்பது இத்துறையின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக அமைகிறது.

“பருவநிலை மோசமாகவும், காலநிலை மாற்றத்தால் கணிக்க முடியாமலும் இருக்கிறது. பெரும்பாலான உற்பத்தியாளர்கள், குறிப்பாக சிறிய உற்பத்தியாளர்கள் செலவை கூட எடுக்க முடியாமல் தடுமாறுகின்றனர்,” என்கிறார் பாலா.

இந்தியா உலகின் சிறந்த தேயிலையை உற்பத்தி செய்கிறது. இருப்பினும், உள்நாட்டு பிராண்ட்கள், இத்துறை மொத்த ஏற்றுமதியை சார்ந்திருக்கும் நிலையை உண்டாக்கியுள்ளது.

“விலையில் போட்டியிட்டு, அதிக லாபம் ஈட்டுவதற்காக வெளிநாட்டு பிராண்ட்கள் அதிக தரம் இல்லாத மற்ற தேயிலை உற்பத்தி பகுதிகளுக்கு செல்கின்றன. மேலும், நம்முடைய பெரும்பாலான ஏற்றுமதி ஒற்றை இலக்க லாபம் கொண்டுள்ளன. பூஜ்ஜிய கூடுதல் மதிப்பு கொண்டுள்ளதால், மறுபிராண்டு செய்யப்பட்டு அதிக விலைக்கு விற்பனை ஆகின்றன,” என்கிறார் பாலா.

போட்டியாளர்களை விட 20 சதவீதம் அதிகமான விலையில் விற்பதாக Vahdam தெரிவிக்கிறது. எனினும், பொருள் வழங்குவதில் 80 முதல் 90 சதவீதம் மேம்பட்டிருக்க முயற்சி செய்வதாக கூறுகிறார்.

இந்தியாவில் Vahdam Tea ஃபிளிப்கார்ட், அமேசான் மற்றும் பிக்பாஸ்கெட்டில் கிடைக்கிறது.

இணையதளம் மூலம் நேரடியாகவும் விற்பனை செய்கிறது. நேரடி விற்பனை பிராண்டான ஆர்கானிக் இந்தியா இந்தியா மற்றும் உலக அளவில் இந்தப் பிரிவில் முக்கிய போட்டியாளராக இருக்கிறது.

2020ல் அமேசானின் ஜெப் பெசோசால், Vahdam  உலகின் சிறந்த எஸ்.எம்.பி நிறுவனம் விருது வென்றது. பாலா, ஃபோர்ப்ஸ் 30 பட்டியலில் இடம்பெற்றுள்ளார். 2021 செல்வாக்குமிக்க இளம் இந்தியர் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளார் பாலா.

டீ

தனது நிறுவனம் மூலம் பாலா தேயிலை துறையில் ஒரு மதிப்பை உண்டாக்க விரும்புகிறார். பிளாஸ்டிக் தாக்கம் இல்லாதது மற்றும் காலநிலை மாற்ற பாதிப்பு இல்லாதது சான்றிதழ் பெற்ற ஒரே டீ பிராண்டாக விளங்குவதாக பாலா கூறுகிறார்.

எதிர்காலம்

அடுத்து இந்தியாவில் ஆப்லைன் விற்பனை மையங்கள் அமைப்பதோடு, தேயில் சந்தையில் மேலும் ஆழமாக செல்ல இருப்பதாக பாலா கூறுகிறார்.

“நாங்கள் நுழையும் எந்தப் பிரிவும் இந்தியாவுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். பொதுநல அம்சம் கொண்டிருக்க வேண்டும் மற்றும் தேயிலை சார்ந்திருக்க வேண்டும் என்பதை எங்கள் பிராண்ட் மையமாக கொண்டுள்ளது என்கிறார்.

கோவிட்-19 சூழலில் ஆன்லைன் வர்த்தகம் அதிகரித்துள்ளது. ஆன்லைன் விற்பனை மற்றும் நலம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி சார்ந்த பொருட்களால் நிறுவனம் வளர்ச்சி பெற்றுள்ளது என்கிறார் பாலா. வரும் ஆண்டுகளில் இந்த பிராண்ட், புதுமையாக்கம் நிறைந்த பொருட்களை அறிமுகம் செய்து முன்னணி பிராண்டாக விளங்க திட்டமிட்டுள்ளது.

ஆங்கிலத்தில்: பலக் அகர்வால் | தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan